- Advertisement -

ஆடி கடைசி செவ்வாய் துர்க்கை வழிபாடு

- Advertisement -

ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக உடல் ரீதியான, மன ரீதியான, குடும்ப ரீதியான, வேலை ரீதியான பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதில் அதிக அளவு பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. பெண்களுக்கு ஏற்படக்கூடிய பலவிதமான பிரச்சனைகளில் இருந்து விடை பெறுவதற்கு உதவக்கூடிய பெண் தெய்வங்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கவள் துர்க்கை அம்மன். அப்படிப்பட்ட துர்க்கை அம்மனை ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆடி கடைசி செவ்வாய் வழிபாடு

பெண்களுக்கு ஏற்படக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களையும் நீக்குவதற்காக அவதாரம் எடுத்தவள் தான் துர்க்கை அம்மன் என்றும் அதனால் தான் இன்றளவும் செவ்வாய், வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் அதாவது ராகு போன்ற அசுரனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நீக்குவதற்காக ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு பெண்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட துர்க்கை அம்மனை ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்யும் முறையை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

குடும்பத்தில் நிம்மதியே இல்லை, சண்டை வந்து கொண்டே இருக்கிறது, பிள்ளைகள் சொல்பேச்சை கேட்பதில்லை, மனக்கவலை அதிகமாக இருக்கிறது, எந்தவித வருமானத்திற்கும் வழி இல்லை என்று புலம்பி கொண்டிருக்கக் கூடிய அனைத்து விதமான பெண்களும் இந்த வழிபாட்டை கண்டிப்பான முறையில் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையான ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி மதியம் வரக்கூடிய ராகு காலமான மூன்று மணியிலிருந்து நான்கு முப்பது மணிக்குள் செய்ய வேண்டும்.

இதற்கு ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலேயே எளிமையான முறையில் இந்த வழிபாட்டை செய்யலாம். வீட்டில் கண்டிப்பான முறையில் பெண் தெய்வத்தின் படங்களை வைத்திருப்போம். அந்த பெண் தெய்வத்தின் படத்தை சுத்தம் செய்து அந்த பெண் தெய்வ படத்திற்கு முன்பாக 5 விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். பிறகு ஏதாவது ஒரு காரமான உணவுப் பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு துர்க்கை அம்மனின் பின்வரும் இந்த மந்திரத்தை 54 முறை கூறி வாசனை மிகுந்த மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். இந்த முறையில் ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை பெண்கள் துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபாடு செய்வதன் மூலம் ராகுவால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்குவதோடு பெண்களின் வாழ்க்கையில் இருக்கக் கூடிய எப்பேர்பட்ட பிரச்சனையும் தீரும்.

மந்திரம்

“ஓம் தேவி துர்கையே போற்றி ஓம்”

இதையும் படிக்கலாமே: மகா சங்கடஹர சதுர்த்தி மந்திரம்

பெண் தெய்வங்களிலேயே அதிக சக்தி வாய்ந்த தெய்வமாக திகழக்கூடிய துர்க்கை அம்மனை பெண்கள் அனுதினமும் வழிபாடு செய்வது சிறப்பு. அதிலும் குறிப்பாக ஆடி கடைசி செவ்வாய்க்கிழமை இப்படி வழிபாடு செய்ய அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -