- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

காரிய தடை நீங்கி வெற்றி உண்டாக ஆடிப்பூர தீபம்

- Advertisement -

ஆடி மாதத்தில் வரக்கூடிய பூர நட்சத்திரம் நாள் அன்று அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரியும். அனைத்து அம்மன் ஆலயங்களிலும் இந்த வளைகாப்பு என்பது நடைபெறும். பலரும் அந்த வளைகாப்பில் அம்மனுக்கு வளையல் வாங்கி தருவார்கள். இன்னும் சிலரோ தங்களுடைய வீட்டிலேயே அம்மனின் படத்திற்கு வளைகாப்பு செய்து வழிபாடு செய்வார்கள். அப்படி வழிபாடு செய்யும்பொழுது எந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால் காரிய தடைகள் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த நட்சத்திரம் என்று இருக்கும். அந்த நட்சத்திரத்திற்கு ஏற்றார் போல் நாம் வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் பல நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தான் இந்த ஆடி மாதத்தில் வரக்கூடிய பூர நட்சத்திரம். இந்த பூர நட்சத்திரத்தன்று வழிபாடு செய்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமண யோகம் கைகூடிவரும் என்று பலரும் கேள்விப்பட்டு இருப்போம். அதே நாளில் நாம் செய்யக்கூடிய இந்த எளிமையான தீப வழிபாடு நம்முடைய காரிய தடையை விலக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

பலரும் ஆலயங்களுக்கு சென்று அம்மனின் வளைகாப்பில் கலந்து கொள்வது போலவே சிலர் தங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய அம்மன் சிலைகோ அல்லது படத்திற்கோ தங்களால் இயன்ற வளையலை வாங்கி மாலையாக தொடுத்து வழிபாடு செய்வார்கள். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது அந்த வளையல் மாலை சாற்றிய பிறகு ஒரு தட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த தட்டில் புள்ளிகள் இல்லாத நல்ல எலுமிச்சம் பழமாக பார்த்து மூன்று எலுமிச்சம் பழங்களை சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் துடைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து வைக்க வேண்டும்.

பிறகு அந்த மூன்று எலுமிச்சம் பழங்களுக்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட வேண்டும். இந்த அகல் விளக்கிற்கு முன்பாக அதே தாம்பாள தட்டில் அரை டசன் வளையல், மஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள் போன்ற மங்களகரமான பொருட்களை வைத்து தீபம் ஏற்றி நெய்வேத்தியமாக கலவை சாதத்தை வைத்து அம்மனை முழு மனதோடு வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

இப்படி வழிபாடு செய்து முடித்த பிறகு அந்த தாம்பாளத்தில் இருக்கக்கூடிய வளையலை யாருக்கும் கொடுக்காமல் வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் அணிந்து கொள்ள வேண்டும். மாலையாக அணிவித்த வளையலை யாருக்கு வேண்டுமானாலும் தரலாம், ஆனால் இந்த தீபத்திற்கு முன்பாக வைத்த வளையலை யாருக்கும் தராமல் வீட்டில் இருக்கும் கூடிய பெண்கள் மட்டுமே அணிய வேண்டும்.

இதில் இருக்கக்கூடிய எலுமிச்சம் பழத்தில் ஒரு எலுமிச்சம் பழத்தை வீட்டில் இருக்கக் கூடிய வாகனத்தில் வைக்க வேண்டும். மற்றொன்றை வீட்டில் எந்த இடத்தில் பணத்தை வைத்து எடுக்கிறோமோ அந்த இடத்தில் வைக்க வேண்டும். மூன்றாவது பழத்தை வீட்டில் இருக்கக்கூடிய குடும்பத்தலைவர்கள் வேலை செய்யும் இடத்திலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ, அந்த எலுமிச்சம் பழத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்படி வைப்பதன் மூலம் அம்மனின் அருள் பெற்ற அந்த எலுமிச்சம் பழத்தால் நம்முடைய காரிய தடைகள் என்பது நீங்கும். நமக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் அனைத்தும் நீங்கும். எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகும். தீய சக்திகள் விலகும். இதனால் நமக்கு வெற்றிகள் ஏற்படும். நன்மைகள் உண்டாகும். பணம் பல மடங்கு வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே சகல ஐஸ்வர்யம் பெருக செய்ய வேண்டிய தானம்

மிகவும் எளிமையான இந்த தீப வழிபாட்டை முழு மனதுடன் அம்மனை மனதார நினைத்து ஏற்றி வழிபடுபவர்களுக்கு காரிய தடைகள் அனைத்தும் நீங்கி வெற்றிகள் ஏற்படும் செல்வங்கள் குவியும்.

- Advertisement -