
முருகப்பெருமானுக்கு உகந்த திதியாக கருதப்படுவது சஷ்டி திதி. அன்றைய தினம் நம் முருகப்பெருமானை நினைத்து வழிபாடு செய்தோம் என்றால் முருகப்பெருமானின் அருளால் நாம் வேண்டியது நமக்கு கிடைக்கும். சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற ஒரு பழமொழியை பலரும் கேள்விப்பட்டிருப்போம். குழந்தை பாக்கியம் வேண்டும் என்று நினைப்பவர்கள் சஷ்டி திதி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்ய விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதுதான் அந்த பழமொழியின் அர்த்தம். அவ்வளவு சிறப்பு மிகுந்த அந்த சஷ்டி திதி ஆடி மாதத்தில் வரும் பொழுது நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்தால் பணவரவு என்பது நமக்கு அதிகரிக்கும். அந்த சூட்சமமான வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் அம்மனுக்குரிய மாதத்தில் வரக்கூடிய மகனுக்கு உகந்த திதியான சஷ்டி திதி என்பது 10/8/2024 ஆடி மாதம் 25ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது. இன்றைய தினத்தில் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நமக்கு பல நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அவருக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். இப்படி பாராயணம் செய்து விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும். மாலை பொழுதில் வீட்டில் இருக்கக்கூடிய முருகனின் சிலைக்கு அல்லது வேலிற்கு தேனால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
ஏதாவது ஒரு சாதத்தையோ அல்லது இனிப்பையோ நெய்வேத்தியமாக வைத்துவிட்டு “ஓம் சரவணபவ” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். முருகனின் சிலை, வேல் இல்லை என்பவர்கள் முருகனின் படத்திற்கு முன்பாக தேனை நெய்வேதியமாக வைத்தும் இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம். அப்படி இல்லை என்றால் காலை 7:45 முதல் 8:45 வரை, 12:30 முதல் 1:30 வரை, 5:30 முதல் 10:30 வரை என்று உங்களுடைய வசதிக்கேற்றவாறு ஏதாவது ஒரு நேரத்தில் செய்யலாம்.
வீட்டில் அபிஷேகம் செய்ய முடியாது அல்லது வழிபாடு செய்ய முடியாது என்னும் சூழ்நிலையில் இருப்பவர்கள் அன்றைய தினம் முருகப்பெருமானின் ஆலயத்திற்கு சென்று அவருக்கு அபிஷேகத்திற்காக தேனை வாங்கி கொடுப்பதன் மூலமும் நல்ல பலன் கிடைக்கும். இப்படி செய்யும்பொழுது முருகப்பெருமானின் அருளால் வரவேண்டிய பணம் வந்து சேருவதோடு நாம் சம்பாதிக்கும் பணம் நம்மிடம் சேமிப்பாக உயரும். மேலும் பண வரவு என்பது நாலா பக்கமும் வந்து கொண்டே இருக்கும். பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கி நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கையை வாழ முடியும்.
இதையும் படிக்கலாமே :பணம் சேர செய்ய கூடாதவை
மிகவும் எளிமையான இந்த சஷ்டி வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் வழிபாடு செய்பவர்களுக்கு முருகப்பெருமானின் அவர்ளால் அவர்கள் வேண்டியது கிடைப்பதோடு மட்டுமல்லாமல் பணவரவும் அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.