
ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது தடைப்பட்டு இருந்தாலும் அல்லது அந்த முன்னேற்றம் ஏற்படாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு எதிர்மறை ஆற்றலால் பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம். இந்த எதிர்மறை ஆற்றல்களை நீக்குவதற்கு பல பரிகாரங்களும் வழிபாட்டு முறைகளும் இருக்கின்றன. அந்த வகையில் ஆடி செவ்வாய்க்கிழமை அன்று செய்யக்கூடிய பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்ப்போம்.
நம்முடைய வீட்டு நிலை வாசல் தான் நம்முடைய வீட்டிற்குள் வருவதற்குரிய வழி என்று நம் அனைவருக்கும் தெரியும். நல்லவர்களாக இருந்தாலும் தீயவர்களாக இருந்தாலும் அவர்கள் அந்த வழியாகத்தான் வரவேண்டும். அதே போல் தான் நேர்மறை ஆற்றல்களும் எதிர்மறை ஆற்றல்களும் அந்த வழியில் தான் வரும். இப்படி எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் வருவதன் மூலமாக நமக்கு எந்த வகையில் எல்லாம் பிரச்சனைகள் ஏற்பட வேண்டுமோ அந்த வகையில் எல்லாம் பிரச்சினைகள் தலைதூக்கி நம்மை பாடாய்படுத்து விடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை விளக்குவதற்கு ஆடி மூன்றாம் செவ்வாய் அன்று செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.
இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்திலே செய்து விட வேண்டும். இதற்கு முதலில் நிலை வாசலை மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தம் செய்து நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து மலர்களை வைத்து எப்பொழுதும் நிலை வாசல் பூஜை செய்வோம் அல்லவா அதே போல் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைத்து ஊதுபத்தி காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு வழிபாடு செய்த பிறகு நல்ல எலுமிச்சம் பழமாக பார்த்து இரண்டு எலுமிச்சம் பழங்களை எடுத்து அதில் ஒரு எலுமிச்சம் பழத்தை சரிசமமாக நறுக்கி அதற்கு மேல் கல் உப்பை வைத்து பரப்ப வேண்டும். இந்த கல்லுப்பிற்கு மேல் ஒரு பாதியில் மஞ்சளையும் மற்றொரு பாதையில் குங்குமத்தையும் வைத்து தயார் செய்து அதை நிலை வாசலுக்கு வெளியே இரண்டு புறங்களிலும் வைக்க வேண்டும்.
இப்படி செய்து முடித்த பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக்கொண்டு வீட்டு பூஜை அறைக்கு சென்று பூஜை அறையில் விளக்கேற்றி எப்பொழுதும் போல் வழிபாடு எல்லாம் செய்து முடித்த பிறகு அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து அதில் சிவப்பு நிற பேனாவால் “க்லீம்” என்ற மந்திரத்தை எழுத வேண்டும். இவ்வாறு எழுதி முடித்த பிறகு அதை நம்முடைய உள்ளங்கையில் வைத்துக் கொண்டு நமக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறதோ எவையெல்லாம் நமக்கு மாற வேண்டும் குறைய வேண்டும் என்று நினைக்கிறோமோ அவை அனைத்தையும் அம்மனின் பாதத்தில் கூறி வழிபாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்து முடித்த பிறகு ஒரு சிவப்பு நிற துணியை எடுத்து அந்த துணியில் இந்த எலுமிச்சம் பழத்தை வைத்து மூட்டையாக கட்டி, வீட்டு நிலை வாசலில் இருக்கக்கூடிய ஆணியில் மாட்டி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக் கூடிய எப்பேர்பட்ட தீய சக்தியாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கும். வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களும் குறைய ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே நினைத்தது நடக்க வேல்மாறல் வழிபாடு
மிகவும் எளிமையான இந்த ஆடி மூன்றாம் செவ்வாய் பரிகாரத்தை நாமும் முழு நம்பிக்கையுடன் செய்து எதிர்மறை ஆற்றல்களில் இருந்து விலகி நன்மைகளை பெறுவோம்.