திக்கற்றவங்களுக்கு தெய்வமே துணை என்று கூறுவார்கள். இது முழுக்க முழுக்க உண்மையான ஒரு வார்த்தை. யார் கைவிட்டாலும் நாம் முழுமனதோடு வணங்கக்கூடிய முருகப்பெருமான் நம்மை எப்பொழுதும் கைவிடமாட்டார் என்ற முழு நம்பிக்கையுடன் யார் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் பல அற்புதமான அதிசயங்களை நடத்தக்கூடியவர்களாக திகழ்கிறார். அப்படிப்பட்ட முருக பெருமானுக்குரிய வேல் மாறலை எந்த முறையில் பாராயணம் செய்தால் நினைத்தது நடக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
வாழ்க்கையில் வீண் பிரச்சனைகளுக்கு ஆளாகி தலை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்களும், நோயால் பாதிக்கப்பட்டு மீள முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்களும் முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். இதே போல் பிள்ளைகளால் பிரச்சனை, பிள்ளைகள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று நினைப்பவர்கள் வள்ளியம்மனை வழிபட வேண்டும். திருமண பாக்கியம் கிடைக்க வேண்டும், தங்களுடைய பிள்ளைகளுக்கு திருமண வரம் வேண்டும் என்று நினைப்பவர்கள் தேவயானி அம்மனை வழிபட வேண்டும்.
இப்படி தம்பதி சகித்தமாக இருக்கக்கூடிய இவர்களை நாம் ஒட்டுமொத்தமாக வழிபாடு செய்தால் நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும். இந்த வேல் மாறலை எப்படி படிக்க ஆரம்பிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்று இப்பொழுது பார்ப்போம்.
வேல் மாறலை படிக்க ஆரம்பிக்கப் போகிறோம் என்றால் முதலில் நாம் திருத்தணிக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய வள்ளி தெய்வானை சமேத முருக பெருமானை வழிபாடு செய்து அவரிடம் அனுமதி வாங்கிவிட்டு பிறகுதான் வேல்மாறலை படிக்க ஆரம்பிக்க வேண்டும். அங்கு சென்று அவரிடம் இந்த கோரிக்கைக்காக இத்தனை நாட்கள் வேல்மாறலை நான் படிக்கப் போகிறேன் என்று அவரிடம் கூறிவிட்டு வீட்டிற்கு வந்து அடுத்து வரக்கூடிய செவ்வாய்க்கிழமையோ, அல்லது சஷ்டி, கிருத்திகை போற்ற முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் இந்த வழிபாட்டை நீங்கள் ஆரம்பிக்க வேண்டும்.
வேல் மாறலை தொடர்ந்து 21 நாட்கள் தினமும் 21 முறை பாராயணம் செய்யும்பொழுது நாம் வேண்டியது கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதை நாம் பிரம்ம முகூர்த்த நேரத்திலும் பாராயணம் செய்யலாம். மாலை நேரத்திலும் பாராயணம் செய்யலாம். தொடர்ச்சியாக 21 முறை படிக்க முடியாது என்பவர்கள் காலையில் 10 முறையும் மாலையில் 11 முறை என்று பிரித்துக் கூட படிக்கலாம். படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக வீட்டில் இருக்கக் கூடிய முருகப்பெருமான் படத்திற்கு சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு சிவப்பு நிற மலர்களால் முருகப்பெருமானை அலங்காரம் செய்து கொள்ளுங்கள். முதல் நாள் மட்டும் சர்க்கரைப் பொங்கலை செய்து நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். மற்ற நாட்களில் தேன், திணை மாவு, கற்கண்டு, பால் போன்ற உங்களிடம் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளலாம். இப்படி வைத்து முடித்துவிட்டு பூஜை அறையில் தரையில் ஒரு விரிப்பை விரித்து வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு இந்த வேல்மாறலை படிக்க ஆரம்பிக்க வேண்டும்.
ஒரு முறை படித்து முடித்த பிறகு உங்களுடைய சவுகரியத்திற்கு ஏற்றமாறு பூஜை அறைக்கு வெளியே வந்து சேரில் அமர்ந்து கொண்டு கூட இந்த வேல் மாறலை பாராயணம் செய்யலாம். அப்படி சேரில் அமர்ந்து பாராயணம் செய்பவர்கள் தரையில் கால் படாதவாறு துணியை விரித்து அதற்கு மேல் காலை வைத்துக் கொண்டு பாராயணம் செய்ய வேண்டும்.
ஒரு முறை படித்து முடித்த பிறகு தண்ணீர் அருந்துவது அல்லது சிறிது நேரம் கழித்து மறுபடியும் படிப்பது என்று செய்யலாம். எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் ஒரு நாளைக்கு 21 முறை படித்திருக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 21 நாட்கள் முருகப்பெருமானுக்கு இந்த முறையில் வேல்மாறலை படிக்கும் பொழுது நாம் வைக்கக்கூடிய கோரிக்கைகளும், வேண்டுதலும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே ஆடி மாதம் மூன்றாம் பிறை தரிசன வழிபாடு
மிகவும் சக்தி வாய்ந்த இந்த வேல் மாறலை இந்த முறையில் பாராயணம் செய்பவர்களுக்கு வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று அவர்கள் வேண்டிய வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும்.