- Advertisement -

ஆடிப்பூரம் அன்று கோவிலுக்கு வாங்கி கொடுக்க வேண்டிய பொருட்கள்.

- Advertisement -

ஆடி மாதம் என்பது அம்மனுக்குரிய மாதம். அப்படிப்பட்ட அம்மனுக்குரிய மாதத்தில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு திருவிழா தான். அதிலும் குறிப்பாக பூரம் நட்சத்திரம் வரும் நாள் என்பது அனைத்து அம்மன் ஆலயங்களிலும் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படக்கூடியது. அந்த பூரம் நட்சத்திரம் இன்று மாலை 6:41க்கு தொடங்கி நாளை இரவு 9:03க்கு நிறைவடைகிறது. அதனால் அனைத்து ஆலயங்களிலும் நாளைய தினம் ஆடிப்பூரம் கொண்டாடப்படும். அப்படி கொண்டாடப்படக்கூடிய அந்த ஆடிப்பூர திருநாளில் கோவிலுக்கு நாம் எந்தெந்த பொருட்களை வாங்கித் தர வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அம்பாள் உமா தேவியாகவும், பூமா தேவி ஆண்டாளாகவும் அவதரித்த தினம் தான் இந்த ஆடிப்பூரம் என்று புராணங்கள் கூறுகின்றன. அப்படிப்பட்ட ஆடிப்பூரம் அன்று தான் அனைத்து அம்மன் ஆலயங்களிலும் அம்மனுக்கு வளைகாப்பு செய்து வழிபாடு செய்வார்கள். அன்றைய தினம் திருமணம் ஆகாதவர்களும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் விரதம் இருந்து அம்மனை வழிபாடு செய்தார்கள் என்றால் அடுத்த ஆடிப்பூரத்திற்குள் அவர்களுக்கு நன்மைகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அப்படி விரதம் இருந்து வழிபாடு செய்தாலும் விரதம் இல்லாமல் வழிபாடு செய்தாலும் அம்மனின் ஆலயத்திற்கு எந்த பொருட்களை வாங்கி தர வேண்டும் என்று பார்ப்போம்.

- Advertisement -

ஆடி பூரம் நாள் அன்று இந்த பொருட்களை நாம் கோவிலுக்கு வாங்கித் தரும் பொழுது நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பொருளாதாரப் பிரச்சினையாக இருந்தாலும், திருமணம் தடைப்பட்டு இருந்தாலும், குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தாலும் அவை அனைத்தும் சரியாகி நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கையை வாழ முடியும். அந்த பொருட்களை பார்ப்போம்.

அம்மனுக்கு நாளைய தினம் கண்மலர் வாங்கித் தர வேண்டும். வசதியானவர்களாக இருந்தால் வெள்ளியில் கூட கண்மலர் வாங்கித் தரலாம். வசதி இல்லாதவர்களாக இருக்கும் பட்சத்தில் கோவிலின் வாசலில் விற்கக் கூடிய கண்மலரை கூட வாங்கி அம்மனுக்கு தரலாம். மேலும் நாளைய தினம் அம்மனுக்கு வளைகாப்பு நடக்கும் என்பதால் கண்ணாடி வளையல்களை வாங்கி தர வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் குழந்தைகள் கழுத்தில் அணியக்கூடிய பாசிமணிகளையும் வாங்கி அம்மனுக்கு கொடுக்க வேண்டும்.

- Advertisement -

இதற்கு அடுத்தார் போல் அம்மன் கோவிலுக்கு தேவையான ஏதாவது ஒரு பாத்திரத்தை வாங்கி தர வேண்டும். அப்படி பாத்திரங்கள் வாங்கித் தர முடியவில்லை என்றால் ஒரு மண் பானையில் நிறைய தண்ணீர் நிரப்பி கோவில் வளாகத்தில் வைத்து விட வேண்டும். அந்த தண்ணீரை கோவிலுக்கு வருபவர்கள் அருந்தும் பொழுது அதனால் நமக்கு பல நன்மைகள் ஏற்படும்.

இதோடு மட்டுமல்லாமல் நாளைய தினம் அம்மனுக்கு நலுங்கு வைப்பார்கள். அந்த நலுங்கிற்கு தேவையான சந்தனம், குங்குமம், பன்னீர் மற்றும் கற்கண்டு இவற்றையும் வாங்கித் தருவது என்பது மிகவும் சிறப்பு.

இதையும் படிக்கலாமே:செல்வங்களை சேர்க்கும் மகாலட்சுமி அஷ்டக வழிபாடு
இந்த பொருட்களில் நம்மால் எந்த பொருட்களை வாங்கி தர முடியுமோ அந்த பொருட்களை வாங்கித் தருவதன் மூலம் அம்பாளின் பரிபூரண அருள் நமக்கு கிடைக்கப் பெற்று நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -