ஒருவருடைய வாழ்க்கையில் கடன் ரீதியான பிரச்சினைகள் அதிகரிக்கிறது, அந்த கடனை சரி செய்வதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டாலும் அதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை என்றால் அவருக்கு கர்ம வினைகள் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். அவர்களுடைய கர்ம வினைகள் தீருவதற்குரிய வழிபாடை செய்வதன் மூலமே மகாலட்சுமி தாயாரின் அருளை அவர்களால் பெற முடியும். அந்த வழிபாட்டு முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒருவர் இந்த பிறவியில் கடனால் கஷ்டப்படுகிறார் என்றால் அவர் முந்தைய பிறவியில் பலருக்கும் கஷ்டம் கொடுத்து இருக்கிறார் என்று அர்த்தம். அந்த கர்ம கடன் ஏற்படுவதற்கு காரணம் சுக்கிரனுடன் கேதுவோ அல்லது சனியோ சேர்ந்திருப்பது தான். அந்த சேர்க்கையால் தான் இந்த ஜென்மத்தில் கடனால் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அதை சரி செய்வதற்கு என்று உருவாக்கப்பட்ட ஒரு பாடல் தான் மகாலட்சுமி அஷ்டகம்.
இந்த மகாலட்சுமி அஷ்டகத்தை வெள்ளிக்கிழமை அன்று இரவு 8:00 மணியிலிருந்து 9:00 மணிக்குள் நாம் படிக்க வேண்டும். அந்த நேரத்தில் வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக 8 அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். காமாட்சி விளக்கை ஏற்றி வைத்துவிட்டு இந்த மகாலட்சுமி அஷ்டகத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
இதில் மொத்தம் எட்டு பாடல்கள் இருக்கும். ஒவ்வொரு பாடலும் நிறைவு பெறும் பொழுது நமோஸ்துதே என்ற வார்த்தை வரும். அந்த வார்த்தை வந்ததும் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து மகாலட்சுமி தாயாரை வணங்க வேண்டும். இப்படி எட்டு பாடல்களையும் பாடி எட்டு தீபத்தையும் ஏற்றி நிறைவு செய்து கொள்ள வேண்டும். மகாலட்சுமி தாயாருக்கு வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய நெய்வேத்தியத்தை வைக்க வேண்டும்.
இதோடு ஒரு சின்ன வெள்ளி கிண்ணத்தில் சுத்தமான தேனையும் நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு மகாலட்சுமி தாயாருக்கு பச்சை கற்பூரத்தால் கற்பூர ஆரத்தி காட்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு கடன் ரீதியான பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். செல்வ செழிப்பு ஏற்படும்.
இந்த பாடல் அகத்திய மாமுனிவர் அருளிய பாடல். இந்த பாடலை அவர் பாடி முடித்த பிறகு மகாலட்சுமி தாயார் யார் ஒருவர் இந்த பாடலை பாடுகிறார்களோ அவர்களுடைய கர்ம வினைகள் தீரும் என்று வாக்குறுதி வழங்கினாராம். அதை வைத்து தான் இந்திரனே இழந்த செல்வத்தை திரும்பப் பெறுவதற்கு இந்த பாடலை பாடினாராம். நாமும் வெள்ளிக்கிழமை இரவில் வரக்கூடிய சுக்கிர ஹோரையில் பாடும் பொழுது மகாலட்சுமி தாயாரின் அருளால் நம்முடைய கர்ம வினைகள் அனைத்தும் நீங்க பெற்று நாம் இழந்த செல்வத்தை பெறுவதோடு மட்டுமல்லாமல் மேற்கொண்டு செல்வ வளத்தை அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.
இதையும் படிக்கலாமே காரிய தடை நீங்கி வெற்றி உண்டாக ஆடிப்பூர தீபம்
மிகவும் அற்புதமான அகத்தியர் அருளிய இந்த மகாலட்சுமி அஷ்டகத்தை நாமும் முழு மனதுடன் மகாலட்சுமி தாயாரை சரணாகதி அடைந்து பாடும்பொழுது மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைத்து அனைத்து செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழ்வோம்.