
வாராகி அம்மனுக்கு உகந்த திதியாக பஞ்சமி திதி திகழ்கிறது. அதிலும் தேய்பிறை பஞ்சமி என்பது நம் வாழ்வில் இருக்கக்கூடிய பலவிதமான கஷ்டங்களை நீக்கக்கூடியது என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட தேய்பிறை பஞ்சமி என்பது ஆனி மாதத்தின் முதல் நாள் அதுவும் ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்குகிறது. அன்று மதியம் 3 04 மணிக்கு தொடங்கி மறுநாள் அதாவது ஜூன் மாதம் 16ஆம் தேதி மதியம் 2:06 மணி வரை இருக்கிறது. அதனால் வாராஹி அம்மனை வழிபாடு செய்பவர்கள் ஜூன் மாதம் 15 ஆம் ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் செய்ய வேண்டும். அப்படி செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாடு நம் வாழ்வில் இதுவரை நடக்காத விஷயத்தையும் நடத்திக் காட்டும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
உக்கிர தெய்வமாக திகழக்கூடிய பல தெய்வங்களின் வழிபாட்டிற்கு உகந்த நேரமாக கருதப்படுவது சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு தான். அந்த வகையில் வாராகி அம்மனை நாம் வழிபாடு செய்ய வேண்டும் என்றாலும் சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு வழிபாடு செய்தோம் என்றால் அதன் பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும். அதனால் பஞ்சமி திதி இரவு தங்கக்கூடிய நாளாக ஜூன் 15ஆம் தேதி திகழ்வதால் அன்றைய தினத்தில் இரவு 7 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிக்குள் நாம் வாராகி அம்மனை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் பல விதமான அற்புதங்கள் நடைபெறும்.
வீட்டு பூஜை அறையில் வாராகி அம்மனின் படமோ சிலையோ இருக்கும் பட்சத்தில் அந்த படத்தையும் சிலையையும் சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். வாராகி அம்மனுக்கு சிவப்பு நிற மலர்களை சாற்றி அலங்காரம் செய்து கொள்ளுங்கள். ஒரு சிறிய முக்காலியை எடுத்து அதை சுத்தம் செய்து அதற்கு முழுவதும் மஞ்சலை தடவி அதன்மேல் ஒரு தட்டை வைத்து அந்த தட்டில் வாசனை மிகுந்த மலர்களை பரப்பி அதற்கு நடுவே பஞ்சமுக அகல் விளக்கு அல்லது ஐந்து அகல் விளக்குகளை வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வாராகி அம்மனை நினைத்து தீபம் ஏற்ற வேண்டும்.
இப்படி தீபம் ஏற்றி முடித்த பிறகு வாராகி அம்மனுக்கு நெய்வேத்தியமாக சர்க்கரை வள்ளி கிழங்கு, பனங்கிழங்கு, பானகம், மாதுளம் பழ முத்துக்கள் போன்றவற்றை வைக்க வேண்டும். பிறகு வாராகி அம்மனின் இந்த ஒரு மந்திரத்தை முழுமனதோடு 15 நிமிடம் கூற வேண்டும். இந்த 15 நிமிடமும் நாம் அந்த தீபச்சுடரொளியில் வாராகி அம்மன் இருப்பது போல உணர்ந்து கொண்டு கூற வேண்டும். கூறி முடித்த பிறகு வாராகி அம்மனை வலம் வருவதைப் போல நாம் ஏற்றி வைத்த அந்த தீபத்தை மூன்று முறை வலம் வந்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.
“ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம் வாராகி பாத துளசி நமஹ”
இதையும் படிக்கலாமே: பண வரவை பல மடங்கு அதிகரிக்கும் மஞ்சிஷ்டா
உக்கிர தெய்வமாக இருந்தாலும் நாம் முழுமனதோடு வாராகி அம்மனை இந்த முறையில் ஆனி மாத தேய்பிறை பஞ்சமி நாளில் வழிபாடு செய்ய நீண்ட நாட்களாக நடக்காமல் இருக்கக்கூடிய நல்ல விஷயங்கள் நம் வாழ்வில் நடந்திட அவள் அருள் புரிவார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.