இன்றைய சூழ்நிலையில் இந்த உலகமே பணம் மயமாகி விட்டது. கையில் காசு இருந்தால் தான் நம்மால் மூச்சு விட முடியும். நீ மூச்சு விடுவதற்கு தகுதியானவனாக இருக்க வேண்டும் என்றால், பணக்காரனாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிடுவார்கள் போல. இன்றைய சூழ்நிலை அப்படித்தான் மாறிக்கொண்டிருக்கிறது. பணம் என்ற மாயைக்குள் இந்த உலகம் சிக்கி தவிக்கிறது. அந்த உலகத்திற்குள் மனிதர்கள் ஆகிய நாமும் பணம் பணம் என்று சிக்கி தவிக்கின்றோம்.
உங்களுக்கும் வருமானம் பெருக வேண்டுமா. மூச்சு விடும் சமயத்தில் கூட பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற ஆசைப்படுவீர்களா, உங்களுக்கான பதிவு தான் இது. நம்பிக்கையோடு இந்த ஆன்மீகம் சொல்லும் தாந்திரீக பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும்.
பணம் தரும் பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் மஞ்சிஷ்டா குச்சி. இது நாட்டு மருந்து கடைகளில் உங்களுக்கு சுலபமாக இருக்கும். எந்த ஒரு தாந்திரீக பரிகாரமாக இருந்தாலும், அந்த பரிகாரத்தை செயல்படுத்த இந்த பூலோகத்தில் இருக்கும் ஒரு வசியமிக்க பொருள் நமக்கு தேவைப்படுகிறது. சித்தர்களால் நமக்கு சொல்லப்பட்ட பண வசிய பொருள் இந்த மஞ்சிஷ்டா. பெரும்பாலும் இது பல பேருக்கு தெரியாத ரகசியம்தான். இன்று உங்களோடு இந்த ரகசியத்தை பகிர்ந்து கொள்ள போகின்றோம்.
நாட்டு மருந்து கடையிலிருந்து வாங்கி வந்த அந்த மஞ்சிஷ்கா குச்சியை ஒருமுறை தண்ணீரில் அலசி விட்டு, அது முழுவதும் சந்தனம் தடவி, ஒரு மஞ்சள் பொட்டு வைத்து விடுங்கள். எப்போதும் இதை ஒரு கிண்ணத்தில் போட்டு பூஜையறையில் வைக்கலாம். இது பணத்தை ஈர்கக் கூடியது. ஆனால் தினமும் இந்த குச்சிக்கு நீங்கள் சாம்பிராணி வத்தி காண்பித்து. மல்லிகை பூவால் அர்ச்சனை செய்து, வருமானம் பெருக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால் பணம் உங்கள் வீட்டில் அளவில்லாமல் கொட்டத் தொடங்கி விடும்.
ஆனால் நம்பிக்கையோடு செய்யும் பட்சத்தில் மூலம் மட்டும்தான் இந்த பரிகாரத்திற்கு உயிர் கிடைக்கும். நீங்கள் அந்த மஞ்சிஷ்டா குச்சியுடன் பேச வேண்டும். அந்த குச்சியோடு நீங்கள் பழக வேண்டும். நீங்கள் சொல்லக் கூடிய பேச்சை அந்த குச்சி கேட்க வேண்டும். குச்சிக்கு உயிர் இல்லை என்று நினைக்காதீர்கள். மரத்திற்கு உயிர் உண்டு. மரத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த, குச்சிக்கும் உயிர் இருக்கும். நீங்கள் சொல்வது அந்த குச்சிக்கு நிச்சயம் கேட்கும்.
தினம் தினம் பூஜை அறையில் இருக்கும் குச்சியை எடுத்து கையில் வைத்து பணவரவு அதிகரிக்க பிரார்த்தனை செய்து பாருங்கள். அதிலும் குறிப்பாக தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து நீங்கள் இந்த குச்சியின் காதில் எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டாலும், இந்த குச்சி அந்த பணத்தை உங்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கும். நிச்சயமாக போன போக்கில் பரிகாரத்தை செய்பவர்களுக்கு பலன் கிடைக்காது.
இதையும் படிக்கலாமே: சங்கு சக்கர ஆஞ்சநேயர்
ஆத்மார்த்தமாக முழு நம்பிக்கையோடு இந்த மஞ்சிஷ்டா குச்சியை வசியம் செய்து உங்களோடு வைத்துப் பாருங்கள். நீங்கள் தான் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். எளிமையாக பணம் சம்பாதிக்க கூடிய வழியை எல்லாம் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டி கொடுக்கும். எந்தெந்த ரூட்ல போனா எவ்வளவு லட்சம் கிடைக்கும் என்பதையும், யார் மூலயமாவது உங்களுக்கு இந்த குச்சி தெரியப்படுத்தும். அவ்வளவு அதிசயம் உங்கள் வாழ்வில் நடக்கும் நம்பிக்கை இருந்தால் நீங்களும் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் பெரிய அளவில் நன்மையை பெறலாம்.