- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

அர்தநாரிஸ்வரரை பார்த்திருப்போம், பாதி விநாயகர் பாதி அனுமனை பார்த்ததுண்டா ?

பொதுவாக நாம் விநாயகரை தனியாகவும் அனுமனை தனியாகவும் தான் வழிபட்டிருப்போம் ஆனால் விநாயகரும் அனுமனும் சரி பாதியாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அற்புத ஆலயம் ஒன்று உள்ளது. வாருங்கள் அது குறித்து விரிவாக பார்ப்போம்.

எந்த ஒரு செயலை தொடங்கும் முன்னரும் விநாயகரை வழிபடவேண்டும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் எந்த ஒரு செயலை முடிக்கும் முன்னரும் அனுமனை வணங்கவேண்டும் என்பது நம்மில் பலர் அறியாத ஒன்று. அதை நினைவூட்டும் வகையில் சென்னை அடையாரிலுள்ள மத்திய கைலாசம் ஆலயத்தில் பாதி விநாயகராகவும், பாதி அனுமனாகவும் காட்சியளிக்கிறார் ஆதியந்த பிரபு.

- Advertisement -

பொதுவாகவே பிள்ளையாருக்கும் அனுமனுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதை நாம் அறிவோம். இருவருமே பிரம்மச்சாரிகள், இருவருமே விலங்கின் ரூபம் கொண்டவர்கள், இருவரையுமே சனி பகவானால் பிடிக்க முடியாது. இப்படி இருவருக்கும் பல்வேறு ஒற்றுமை இருக்கிறது.

சமநிலை மூர்த்திகளான இருவருக்கும் எண்ணற்ற கோவில்களை நாம் காணலாம். ஆனால் இருவரும் ஒருசேர அருள்பலிக்கும் ஒரு அற்புத உருவம் தான் ஆதியந்த பிரபு. விநாயகர் மற்றும் அனுமன் ஆகிய இருவரும் நவகிரகங்களின் தாக்கத்திலிருந்து விலக்கு பெற்றவர்கள் என்பதால் இந்த கோயிலிற்கு சென்று ஆதியந்த பிரபுவை தரிசிப்பதன் மூலம் சனி தோஷம் உள்ளிட்ட நவகிரக தோஷங்கள் அனைத்திலும் இருந்து விடுபடலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
குரு இல்லாமல் தனியாக சபரி மலைக்கு சென்றால் பலன் உண்டா ?

ஆதியந்த பிரபுவை சென்னை அடியாருக்கு சென்று வழிபடுவோம். இரட்டிப்பு பலன்களை பெற்று வாழ்வில் அணைத்து வளங்களையும் பெறுவோம். இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், ஆன்மீகள் கதைகள், மந்திரங்கள் என ஆன்மீகம் சம்மந்தமான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

- Advertisement -