- Advertisement -

தலையெழுத்தை மாற்றும் அபிஜித் நட்சத்திர பரிகாரம்

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் நாம் நினைத்தது நடக்க வேண்டும் என்பதற்காக பல வித முயற்சிகளை மேற்கொள்வோம். அந்த முயற்சிகள் வெற்றி அடையாத பட்சத்தில் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவோம். அப்படி நாம் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டும் அந்த முயற்சிகள் வெற்றியடையவில்லை என்று வருத்தப்படுபவர்கள் அபிஜித் நட்சத்திர நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். நியாயமான வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அந்த வேண்டுதலை அபிஜித் நட்சத்திர நேரத்தில் கூறி வழிபாடு செய்பவர்களுக்கு அந்த வேண்டுதல் விரைவில் நிறைவேறும். மேலும் அபிஜித் நட்சத்திர நேரத்தில் நாம் செய்யக்கூடிய எளிமையான பரிகாரம் இதுவரை நம்முடைய வாழ்க்கையில் நாம் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி இனிமேல் வரக்கூடிய வாழ்க்கையில் சந்தோஷத்தை அள்ளித் தரும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அபிஜித் நட்சத்திர பரிகாரம்

அபிஜித் நட்சத்திரம் நேரத்தில் பெருமாளையும் கிருஷ்ண பகவானையும் நாம் வழிபாடு செய்ய வேண்டும் என்று பலவிதமான ஆன்மீக ரீதியான கூற்றுகள் இருக்கின்றன. ஏனென்றால் அபிஜித் நட்சத்திரம் என்பது கிருஷ்ண பகவானின் மயிலிறகிற்குள் இருக்கிறது என்பதால் அந்த நேரத்தில் கிருஷ்ண பகவானை நாம் வழிபாடு செய்யும்பொழுது அபிஜித் நட்சத்திரத்திற்குரிய முழுமையான பலனை பெற முடியும். அந்த வகையில் இந்த ஒரு பரிகாரத்தை நாம் செய்யும் அபிஜித் நட்சத்திர நேரத்தில் செய்யும் பொழுது பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைப்பதோடு நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை சரியாக அபிஜித் நட்சத்திரம் பிறக்கக்கூடிய நேரத்தில் செய்ய வேண்டும். இந்த நட்சத்திரம் முடிவதற்குள் பரிகாரத்தை செய்து முடித்து விட வேண்டும். அதனால் அபிஜித் நட்சத்திர நேரம் தொடங்குவதற்கு முன்பாகவே இந்த பரிகாரத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்திற்கு மூன்றே மூன்று பொருட்கள்தான் தேவைப்படும். அவை பச்சை கற்பூரம், துளசி மற்றும் தண்ணீர்.

ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சை கற்பூரத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் ஒரு மற்றொரு சிறிய கிண்ணத்தில் துளசி இலைகளையும் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய டம்ளர் அல்லது பெரிய கிண்ணத்தில் சுத்தமான தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். இதை அபிஜித் நட்சத்திர நேரத்திற்கு முன்பாகவே தயார் செய்து கொள்ள வேண்டும். சரியாக 11:31 மணிக்கு அபிஜித் நட்சத்திரம் பிறக்கும். அந்த நேரத்தில் முதலில் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாள் அல்லது கிருஷ்ணர் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றுங்கள். பிறகு இந்த பச்சை கற்பூரத்தையும் துளசியையும் படத்திற்கும் முன்பாக வைத்துவிட்டு மனதார உங்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்க வேண்டும், வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாக வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு உங்களுடைய வேண்டுதலை நிறைவு செய்த பிறகு பச்சை கற்பூரத்தையும், துளசியும் நாம் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் பிடித்து வைத்திருக்கிறோம் அல்லவா அதில் போட்டு விட வேண்டும். இந்த கிண்ணத்தையும் பெருமாளின் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். இரவு முழுவதும் இது அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலையில் அதாவது வெள்ளிக்கிழமை அன்று காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய இந்த தீர்த்தத்தை எடுத்து வீடு முழுவதும் தெரிந்து விட்டு பிறகு தீபமேற்றி வெள்ளிக்கிழமை வழிபாட்டை செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் வறுமையும் சோகங்களும் நீங்கி மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை அமையும்.

இதையும் படிக்கலாமே: கிருஷ்ணர் சிலை வாஸ்து

மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை முழுமனதோடு பெருமாளையும் மகாலட்சுமி தாயாரையும் நினைத்து அபிஜித் நட்சத்திர நேரத்தில் செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -