- Advertisement -

யார் கையால் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை கொடுக்கக் கூடாது?

- Advertisement -

சில சாஸ்திர சம்பிரதாய முறைகளை நம்முடைய பெரியவர்கள், காரணம் காரியமில்லாமல் சொல்லி வைக்க மாட்டார்கள். அந்த வகையில் பசு மாட்டிற்கு தானம் கொடுத்தால் புண்ணியம் என்பது நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து. அந்த பசுவிற்க்கு செய்யப்படும் தானத்திலும் ஒரு சில கட்டுப்பாடுகளை வைத்துள்ளார்கள்.

பசு மாட்டிற்கு அகத்திக் கீரையை யார் கையால் கொடுக்கக் கூடாது. யாரெல்லாம் அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு கொடுத்தால் நல்லது, என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவலை தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பிரபல ஜோதிடர் ஷெல்வி அவர்களால் சொல்லப்பட்ட பரிகார தகவல்கள் தான் இவை. உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் இதை பின்பற்றி நீங்களும் பலனடையலாம்.

- Advertisement -

பசுவிற்கு செய்ய வேண்டிய தானம்

தாய் தந்தை இல்லாதவர்கள் கையால் மட்டும் தான் அகத்திக் கீரையை வாங்கிக் கொண்டு போய் பசு மாட்டிற்கு கொடுக்க வேண்டும். தாய் தந்தை யாராவது ஒருவர் இல்லை என்றாலும் நீங்கள் அகத்திக் கீரையை கொண்டு போய் உங்கள் கையால் பசுமாட்டிற்கு சாப்பிட கொடுக்கலாம். தவறு கிடையாது. தாய் தந்தை இருப்பவர்கள், குழந்தைகளின் கையால் அகத்திக் கீரையை பசுவிற்கு சாப்பிட கொடுக்காதிங்க. அது உங்கள் வீட்டிற்கு ஏதாவது ஒரு ரூபத்தில் கஷ்டத்தை கொண்டு வந்து சேர்த்துவிடும்.

அகத்திக்கீரைகென்று ஒரு சில தாத்பரியங்கள் உள்ளது. ஆகவே அகத்திக்கீரைக்கு மட்டும் இந்த கட்டுப்பாடு இருக்கிறது. வாழைப்பழம், மற்ற கீரை வகைகள், காய்கறி வகைகளை எல்லாம் யார் வேண்டுமென்றாலும் பசு மாட்டிற்கு கொண்டு போய் கொடுக்கலாம். குழந்தைகளின் கையால் வாழைப்பழம் கொடுத்து பசு மாட்டிற்கு சாப்பிட வையுங்கள். அதனால் எந்த ஒரு தவறும் கிடையாது.

- Advertisement -

அதேபோல எள்ளு புண்ணாக்கு வாங்கி சில பேர் பசு மாட்டிற்கு தானம் செய்வார்கள், தாய் தந்தை இல்லாதவர்கள், இந்த எள்ளு புண்ணாக்கை வாங்கி பசுவிற்கு தானம் கொடுக்கலாம். எள்ளு புண்ணாக்கு தானம் செய்யும் போது கூடவே வெல்லம் தானம் செய்ய வேண்டும். அப்போதுதான் அதற்கு உண்டான பலனை நம்மால் முழுமையாக பெற முடியும் என்கிறது சாஸ்திரம்.

மற்றபடி அமாவாசை அன்று மட்டும்தான் பசு மாட்டிற்கு சாப்பிட வாங்கி தர வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. அமாவாசை அன்று அந்த கீரையை சாப்பிட்டு சாப்பிட்டு பசு மாட்டிற்கு பசி இருக்காது பசியோடு இருக்கும் மாட்டிற்கு தானம் கொடுப்பது தானே பலன். அமாவாசை அன்று மட்டும்தான் ஏழைகளுக்கு, வயதானவர்களுக்கு சாப்பிட வாங்கி கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஒரே ஒரு ஏழைக்கு, ஒரே நாளிலேயே பத்து சாப்பாடு பொட்டலம் கொடுத்தால், அதனால் என்ன பயன். அதிலிருந்து அவனால் ஒரு சாப்பாட்டை மட்டும் தானே சாப்பிட முடியும். அடுத்த வேலைக்கு இன்னொரு சாப்பாடு பொட்டலம் பயன்படும். மீதி உணவு வீணாகத்தான் செல்லும்.

- Advertisement -

ஆகவே அமாவாசை அன்று மட்டும்தான் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். பசியோடு இருப்பவனுக்கு தக்க நேரத்தில் சாப்பாடு போடுவது தான் உண்மையான தர்மபலனை கொடுக்கும். எதையும் எதிர்பார்த்து அடுத்தவர்களுக்கு உதவி செய்யாதீர்கள். தானத்தை கொடுக்கும் நமக்கு நல்லது நடக்கிறதோ இல்லையோ, தானத்தை பெறுபவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதுதான் மிக மிக முக்கியம்.

ஆதரவற்றவர் இல்லங்களுக்கு, முதியவர் இல்லத்திற்கு இப்படி உண்மையிலேயே கஷ்டப்படக் கூடியவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். அன்னதானம் செய்யும் இடத்தில் ஒரு எலுமிச்சம் பழம் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். அதாவது எலுமிச்சம்பழம் ஊறுகாயோ அல்லது எலுமிச்ச பழ சாறு சேர்த்து நாம் அன்னதானம் செய்யும்போது அந்த அன்னதானத்திற்கான பலன் முழுமையாக நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: சொகுசு வாழ்க்கைக்கு சுக்கிர வழிபாடு

பலனை எதிர்பார்க்கக் கூடாது என்று சொல்கிறீர்கள், இப்போது பலன் பெற பரிகாரமும் சொல்கிறீர்கள், என்று எண்ணாதீர்கள். சுயநலத்தோடு உதவி செய்வது வேறு. நன்மைக்காக உதவி செய்வது வேறு. எல்லாம் ஒரு நன்மைக்காக சொல்லக் கூடிய விஷயங்கள் தான். நம்பிக்கை இருந்தால் இதையெல்லாம் நீங்கள் பின்பற்றி பாருங்கள். உங்கள் குடும்ப கஷ்டங்கள் தீரும், உங்கள் வாழ்க்கையிலும் வளர்ச்சி உண்டாகும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -