- Advertisement -
Homeஜோதிடம்சொகுசு வாழ்க்கைக்கு சுக்கிர வழிபாடு

சொகுசு வாழ்க்கைக்கு சுக்கிர வழிபாடு

- Advertisement -

நாள் முழுக்க கடின உழைப்பை கொடுத்து வியர்வை சிந்தி உழைத்தாலும், வாழ முடியாத இந்த சொகுசு வாழ்க்கையை, சிலர் மட்டும் ரொம்பவும் எளிமையாகவே அனுபவித்து விடுகிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது நமக்கு வயிற்று எரிச்சலாக தான் இருக்கும். சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்படுபவர்கள், சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க விரும்புபவர்கள், யாரை எப்படி வழிபட வேண்டும்? எனும் சூட்சமத்தை தான் இந்த ஜோதிடம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

சுக்கிர பகவான் சுகபோக வாழ்க்கையை கொடுக்க கூடியவர். சுகங்களுக்கு சொந்தக்காரர் இவரே ஆவார். ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிர பலம் பெற்றிருந்தால் போதும், அவர் உழைக்காமலேயே எல்லாமே அவரைத் தேடி வரும். காதல், ஆசை, திருமணம், யோகம் அனைத்தும் சுக்கிர பகவானால் நமக்கு கிடைக்கப் பெறுகிறது. நவகிரகங்களில் அசுர குருவாக இருக்கும் இந்த சுக்கிர பகவான் சுப கிரகமாக விளங்குகிறார்.

- Advertisement -

ஜென்ம திசையே ஒருவருக்கு சுக்கிரனாக இருக்கக் கூடிய நட்சத்திரங்கள் பரணி, பூரம், பூராடம் ஆகியன ஆகும். மகம், மூலம், அஸ்வினி ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு இரண்டாவதாக வருவார். இந்த ஆறு நட்சத்திரங்களிலும் பிறந்தவர்கள் இளம் வயதிலேயே காதல் வயப்படுவார்கள். ஜாதகத்தில் சுக்கிரன் தனியாக இருப்பது ரொம்பவே நல்லது. நட்பு கிரகங்களுடன் இருந்தால் பரவாயில்லை.

வீடு, பங்களா, வாகனம், ஆடை, ஆபரணங்கள், விலையுயர்ந்த பொருட்கள் போன்ற சொகுசு வாழ்க்கையை அள்ளிக் கொடுப்பவர் சுக்கிரன். இந்த சுக்கிர பகவானை வெள்ளிக்கிழமையில் வழிபடுவது சிறப்பான பலன்களை கொடுக்கும். நவகிரக சன்னதியில் சுக்கிர பகவானுக்கு வெண்ணிற ஆடையை சாற்றி வழிபடுவார்கள். வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவானுக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி, 21 அகல் விளக்குகளில் நெய் ஊற்றி, வெள்ளை நிற பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி மனதார பிரார்த்திக்க வேண்டும்.

- Advertisement -

அன்றைய நாளில் வெள்ளை நிற மொச்சை பயிரை மஞ்சள், குங்குமத்துடன் எளியவர்களுக்கு தானம் அளிக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுக்கிர பகவானுக்கு தீபம் போட்டு வழிபாடு செய்து வருபவர்களுக்கு சுக்கிர திசை இல்லை என்றாலும், சுக்கிர யோகம் தேடி வரும். சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் பலம் இல்லாமல் இருந்தால், நீசம் பெற்றிருந்தால், பகை கிரகங்களுடன் ஒன்றாக இருந்தால் திருமண வாழ்க்கையில் ஜாதகர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். சுக்கிரன் களத்திர காரகன், எனவே களத்திர தோஷம் உண்டாகும். கண் பிரச்சனைகள், மர்ம நோய்களால் இவர்கள் பாதிக்கப்படுவார்கள். தேவையற்ற நபர்களின் சேர்க்கையால் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும். பொருளாதார ரீதியான பிரச்சனைகளை உண்டு பண்ணி, மன ரீதியாக பாதிக்க செய்ய சுக்கிரனால் மட்டுமே முடியும்.

இதையும் படிக்கலாமே:
பணம் தரும் கார்த்திகை மாத மந்திரம்

சுக்கிர பகவானுக்கு வெள்ளி உலோகம் உகந்தது ஆகும். சுக்கிரனால் பாதிப்பு உள்ளவர்கள் வெள்ளி மோதிரம் அணியலாம். வைர கற்களை மோதிரமாக அணியலாம். வெள்ளியால் ஆன பொருட்களை உடம்பில் அணிந்து வந்தால் துன்பம் குறையும். சுக்கிரன் கோவில் கஞ்சனூரில் அமைந்துள்ளது. கஞ்சனூர் சென்று சுக்கிர பகவானை வழிபாடு செய்துவிட்டு தீபம் ஏற்றி வருபவர்களுக்கு சுக்கிரனுடைய பாதிப்புகள் குறைந்து சுக்கிர யோகம் உண்டாகும்.

சற்று முன்