
ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை, பௌர்ணமி என்று வரும். அந்த மாதத்தை பொறுத்து அந்த அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் பல சிறப்புகள் உண்டாகும். அந்த வகையில் ஐப்பசி பௌர்ணமி என்பது சிவபெருமானுடைய வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் உலகில் இருக்கக்கூடிய அனைத்து உயிரினங்களின் பசியை போக்குவதற்காக சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் என்பது நடைபெறும் அப்படிப்பட்ட நாளில் செய்ய வேண்டிய ஆண்கள் செய்ய வேண்டிய சில காரியங்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று அம்மனை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது மேலும் குலதெய்வ வழிபாட்டையும் அன்றைய தினத்தில் மேற்கொள்வோம். அதோடு சேர்த்து ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று சிவபெருமான் ஆலயங்கள் அனைத்திலும் அன்னாபிஷேகம் என்பது நடைபெறும். அந்த அன்னாபிஷேகத்தில் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு வறுமை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நாளன்று ஆண்கள் செய்ய வேண்டிய முக்கியமான நான்கு காரியங்களை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
அன்றைய தினத்தில் ஆண்கள் காலையில் உணவு அருந்துவதற்கு முன்பாக வீட்டில் சமைத்த உணவை காக்கைக்கு வைத்த பிறகுதான் சாப்பிட வேண்டும். அப்படி செய்வதன் மூலம் முன்னோர்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைப்பதோடு அவர்களின் கர்ம வினைகளும் குறையும் என்று கூறப்படுகிறது. அன்றைய தினத்தில் அருகில் இருக்கக்கூடிய சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று அன்னாபிஷேகத்தில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். இயலாதவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய சிவபெருமானின் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து சிவபெருமானை முழுமனதோடு வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் வறுமை இல்லாத நல்ல வாழ்க்கை அமையும் என்று கூறப்படுகிறது.
அன்றைய நாளில் தங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு சிவ மந்திரத்தை முழு மனதோடு எந்தவித மனத் தடுமாற்றமும் இல்லாமல் கூற வேண்டும். அவ்வாறு கூற இயலவில்லை என்பவர்கள் சிவபெருமானின் மந்திரத்தையோ பாடல்களையோ கேட்கவாவது செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும் அன்றைய தினத்தில் முடிந்த அளவிற்கு கோவப்படாமல் அமைதியாகவும் நிதானத்துடனும் செயல்படுவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் அடுத்த கட்ட முயற்சியை எடுத்து வைப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நான்கு வழிமுறைகளையும் மறவாமல் ஐப்பசி பௌர்ணமி தினத்தன்று செய்வதோடு மட்டுமல்லாமல் தங்களால் இயன்றவரை பிறருக்கு அன்றைய தினத்தில் அன்னதானம் செய்வதன் மூலம் அவர்களுடைய வருமானமும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:கடன் தீர்க்கும் நவம்பர் மாதம் இரண்டாவது மைத்ரேய முகூர்த்தம்
மிகவும் சிறப்பு வாய்ந்த அன்னாபிஷேகம் நடைபெறக்கூடிய ஐப்பசி பௌர்ணமி தினத்தன்று ஆண்கள் இந்த காரியங்களை செய்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைவதோடு செல்வ செழிப்புடனும் வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.