- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர்க்கும் நவம்பர் மாதம் இரண்டாவது மைத்ரேய முகூர்த்தம்

கடன் தீர்க்கும் நவம்பர் மாதம் இரண்டாவது மைத்ரேய முகூர்த்தம்

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் நாம் அனுபவிக்க கூடிய பலவிதமான கஷ்டங்களுக்கு காரணமாக திகழ்வது கடன் என்ற ஒரு பிரச்சனை தான். இந்த கடன் பிரச்சினை நம்முடைய வாழ்க்கையில் வந்து விட்டால் நமக்கு நிம்மதி, மகிழ்ச்சி, சந்தோஷம் என்று எதுவுமே இருக்காது. எப்படியாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும், எப்படியாவது வட்டி கட்ட வேண்டும், அசலை அடைக்க வேண்டும் என்றுதான் ஓடிக்கொண்டே இருப்போம். வேறு எதற்கும் நம்முடைய மனம் சிந்திக்காத ஒரு சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருப்போம்.

இப்படி நாம் ஓடிக்கொண்டு இருந்தாலும் பலருக்கும் அவர்கள் பட்ட கடனை அடைக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். அப்படிப்பட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய மைத்ரேய முகூர்த்தத்தில் கடன் அடைப்பதற்குரிய முயற்சிகளை செய்வதன் மூலம் விரைவிலேயே கடனடையும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நவம்பர் மாதத்தின் இரண்டாவது மைத்திரேய முகூர்த்தமான நவம்பர் மாதம் 14ஆம் தேதி எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

நவம்பர் மாதம் இரண்டாவது மைத்ரேய முகூர்த்தம்

ஒவ்வொரு மாதமும் மைத்ரேய முகூர்த்தம் என்பது வரும் அந்த முகூர்த்தம் வரக்கூடிய நேரத்தில் நாம் செய்யக்கூடிய சில வழிப்பாட்டு முறைகளும், பரிகாரங்களும் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நவம்பர் மாதத்தில் வரக்கூடிய இரண்டாவது மைத்திரிய முகூர்த்தம் என்பது நவம்பர் மாதம் 14ஆம் தேதி வியாழக்கிழமையுடன் சேர்ந்து வருகிறது. அதனால் அன்றைய தினத்தில் நாம் குருபகவானின் இந்த ஒரு மந்திரத்தை கூறி வழிபாடு செய்வதன் மூலம் கடன் பிரச்சினை தீரும் என்று கூறப்படுகிறது.

குருபகவான் என்பவர் பெருஞ்செல்வத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர். அவருடைய அருள் பரிபூரணமாக கிடைக்கக்கூடிய நாளான வியாழக்கிழமை அன்று மைத்ரேய முகூர்த்தம் வருவது என்பது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது. இந்த மைத்ரேய முகூர்த்தமானது காலை 9 மணியிலிருந்து 10:30 மணிக்குள் வருகிறது. அதனால் இந்த நேரத்தில் நாம் சில எளிமையான வழிபாட்டு முறையை பின்பற்றினோம் என்றால் நம்முடைய கடன் பிரச்சனை தீரும். அதை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

கறுப்பு கொண்டைக்கடலை குருபகவானுக்கு உகந்த தானியமாக கருதப்படுகிறது. ஒரு தாம்பாள தட்டில் கருப்பு கொண்டை கடலையை பரப்பி அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். அந்த தீபத்தை சுற்றி நாம் எத்தனை பேரிடம் கடன் வாங்கி இருக்கிறோமோ அத்தனை எண்ணிக்கையில் வெற்றிலையை வைக்க வேண்டும். அந்த வெற்றிலைக்கு சந்தனம் குங்குமம் வைத்து விட்டு அதற்கு மேல் ஒவ்வொரு அகல் விளக்காக வைத்து அதற்கும் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட வேண்டும்.

பிறகு எத்தனை எண்ணிக்கையில் விளக்கு வைத்திருக்கிறோமோ அத்தனை எண்ணிக்கையில் பிரியாணி இலையை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பிரியாணி இலையிலும் நாம் ஒவ்வொருவரிடமும் எவ்வளவு பணம் வாங்கினோம் என்பதையும் அவருடைய பெயரையும் எழுதி ஒவ்வொரு விளக்கத்திற்கும் முன்பாகவும் வைக்க வேண்டும். பிறகு நம்மால் இயன்ற ஏதாவது ஒரு தொகையை ஒவ்வொரு விளக்கிற்கு முன்பாகவும் வைக்க வேண்டும். ஒருவரிடம் இருந்து வாங்கிய கடனிலிருந்து அசல் தொகை இவ்வளவை நாம் வைக்கிறோம் என்ற கணக்கில் வைத்துவிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இப்படி தீபம் ஏற்றி முடித்த பிறகு குரு பகவானின் இந்த ஒரு மந்திரத்தை 11 முறை கூற வேண்டும். ஒவ்வொரு முறையும் அந்த மந்திரத்தை கூறும் பொழுது ஒவ்வொரு பிரியாணி இலையாக எடுத்து விளக்கில் காட்டி எரித்து விட வேண்டும். பிறகு கொண்டைக் கடலையின் மேல் ஏற்றிய தீபம் முழுமையாக தெரிந்து முடித்த பிறகு அந்த கொண்டைக்கடலையை எடுத்து நம் வீட்டிற்கு தெற்கு திசை பார்த்து தூவி விட வேண்டும். அன்றைய தினம் இரவு இந்த மந்திரத்தை 27 முறை ஒரு வெள்ளை நிற பேப்பரில் எழுத வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கடன் தீருவதற்குரிய வாய்ப்பை குரு பகவான் நமக்கு அருள்வார் என்று கூறப்படுகிறது.

மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஐம் குரு வசி வசி

இதையும் படிக்கலாமே:கஷ்டம் தீர்க்கும் கல் உப்பு
ஒவ்வொரு மாதத்தில் வரக்கூடிய இந்த மைத்ரேய முகூர்த்தத்தை தவறவிடாமல் இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு விரைவில் அவர்களுடைய கடன் பிரச்சினை தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

சற்று முன்