- Advertisement -

ஐப்பசி வெள்ளிக்கிழமை வாராகி வழிபாடு

- Advertisement -

ஐப்பசி மாதம் என்பது மிகவும் சிறப்புக்குரிய மாதமாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் ஐப்பசி மாதத்தில் நாம் செய்யக்கூடிய வழிபாட்டிற்கு அதிக அளவில் பலன் கிடைக்கும் என்பதுதான். அதிலும் குறிப்பாக ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய், வெள்ளிக்கிழமை என்பது கூடுதல் பலனை தரும். அந்த கிழமைகளில் நாம் செய்யக்கூடிய வழிபாடு நமக்கு அதீத பலனை தரக்கூடியதாக திகழ்கிறது. அந்த வகையில் ஐப்பசி மாதத்தில் இரண்டாவது வெள்ளிக்கிழமை அக்டோபர் மாதம் 25ஆம் தேதி வாராகி அம்மனை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஐப்பசி வெள்ளிக்கிழமை வாராகி வழிபாடு

பொதுவாக வெள்ளிக்கிழமை என்றாலே அது பெண் தெய்வத்திற்குரிய கிழமையாக திகழ்கிறது. அதனால் அன்றைய தினத்தில் கண்டிப்பாக முறையில் பெண் தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த பெண் தெய்வ வழிபாட்டில் உக்கிரமான தெய்வமாகவும் அதேசமயம் கலியுக தெய்வமாகவும் திகழக்கூடியவள் தான் வாராகி அம்மன். அப்படிப்பட்ட வாராகி அம்மனை ஐப்பசி மாதத்தின் வெள்ளிக்கிழமையில் எந்த முறையில் வழிபட்டால் நிறைவேறாத வேண்டுதலும் நிறைவேறும் என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலை 6:00 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்யலாம் அல்லது காலை 9:15 முதல் 10:15 வரை செய்யலாம் அல்லது 10:30 மணியிலிருந்து 12 மணிக்குள் செய்யலாம் அல்லது மாலை 6:30 லிருந்து 7:30 குள்ளும், இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள்ளும் இந்த வழிபாட்டை செய்யலாம். எந்த நேரம் தங்களுடைய வசதிக்கு ஏற்றவாறு இருக்கிறதோ அந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வீட்டில் வாராகி அம்மனின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அந்த அம்மனுக்கு முன்பாக ஒரு சிறிய தாம்பாளத்தை வைத்து அதில் அட்சதையை பரப்ப வேண்டும். அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் இவை மூன்றையும் சரிசமமாக ஊற்றி சிவப்பு நிற திரியைப் போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு வாராஹி அம்மனுக்கு உலர் பழங்கள், மாதுளம் பழம், வேக வைக்காத பொருட்கள், பாணகம் போன்றவற்றை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். வாராகி அம்மனுக்கு ஒற்றைப்படை எண்ணிக்கையில் விரலி மஞ்சள் மாலை சாற்ற வேண்டும். அடுத்ததாக கையில் ஒரு பச்சரிசியை வைத்துக்கொண்டு

- Advertisement -

ஓம் மஹா சேனாயை நமஹ

என்னும் மந்திரத்தை கூற குறைந்தபட்சம் 54 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி உச்சரித்த பிறகு கையில் இருக்கக்கூடிய பச்சரிசியை பறவைகளுக்கு தானமாக தந்து விட வேண்டும். இதோடு இன்றைய தினத்தில் மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய பொருட்களை பிறருக்கு தானமாக தருவதன் மூலம் நிறைவேறாத நீண்ட நாள் வேண்டுதல்களும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. மேலும் சுபகாரிய தடைகள் அனைத்தும் நீங்கும் என்றும் பணவரவில் எந்தவித பிரச்சினைகளும் உண்டாகாது என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பண வரவை ஈர்க்கும் எண்கள்

மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த ஐப்பசி மாத வெள்ளிக்கிழமை வழிபாட்டை முழு நம்பிக்கையுடனும் முழு மனதுடனும் வாராகி அம்மனுக்கு செய்பவர்களுக்கு வராகி அம்மனின் அருளால் நிறைவான வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -