நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு நவகிரகங்கள் தான் காரணமாக திகழ்கின்றன. இந்த நவக்கிரகங்களின் பரிபூரண ஆசீர்வாதம் நமக்கு கிடைத்துவிட்டாலே நமக்கு பிரச்சினைகளே ஏற்படாது என்று கூட கூறலாம். அப்படி நவகிரகங்களின் அருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவகிரகங்களுக்குரிய வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்வது உண்டு. அந்த வகையில் ஒவ்வொரு கிரகத்திற்கும் உகந்த எண்கள் என்பது இருக்கும். ஒன்றிலிருந்து ஒன்பது வரை இருக்கக்கூடிய ஒவ்வொரு எண்களுக்கும் ஒவ்வொரு விதமான கிரகங்கள் ஆதிக்க நிலையில் இருக்கும். சில எண்களை நாம் உச்சரிக்கும் பொழுது அந்த எண்களின் பலனால் நமக்கு நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் எந்த எண்ணை நாம் உச்சரித்து எழுதினால் பணவரவு ஏற்படுவதற்குரிய யோகம் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பண வரவை ஈர்க்கும் எண்கள்
அனைத்து மதத்தினரும் தங்களுக்கு விருப்பமான சாதகமான அதிர்ஷ்டமான எண்கள் என்ன என்பதை தெரிந்து கொண்டு அந்த எண்ணின் அடிப்படையில் ஒவ்வொரு வேலையையும் செய்வார்கள். அப்படி செய்யும் பொழுது அவர்களுக்கு நன்மைகள் உண்டாகிறது என்றும் கூறுவார்கள். ஒவ்வொரு நபருக்கும் அவர்களுடைய சொந்த ஜாதகத்தின்படி அதிர்ஷ்டமான எண்கள் என்பது இருக்கும்.
ஜாதகமே இல்லாதவர்களாக இருந்தால் கூட அவர்களின் பெயரை வைத்து அவர்களுக்குரிய அதிஷ்ட எண் என்ன என்பதை ஜோதிடர்கள் கூறிவிடுவார்கள். அந்த அதிர்ஷ்ட எண்ணை பயன்படுத்தி அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். இப்படி தங்களுக்குரிய அதிஷ்ட எண் தெரியாது என்பவர்கள் கூட இந்த எண்ணை வெள்ளிக்கிழமை தோறும் எழுதி வரும் பொழுது அவர்கள் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேறும். மேலும் பண வரவு ஏற்படுவதற்குரிய யோகம் உண்டாகும். அந்த எண் தான் ஏழு எட்டு ஆறு. இதை எந்த முறையில் எழுத வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
இந்த எண்ணை பொதுவாக இஸ்லாமிய சகோதரர்கள் எழுதி நாம் பார்த்திருப்போம். அவர்களுடைய சின்னமாகவே இந்த மூன்று எண்களும் இருக்கும். இதற்கு செல்வத்தை ஈர்க்கக்கூடிய தன்மை இருக்கிறது என்று கூட கூறலாம். அப்படி செல்வத்தை ஈர்க்கக்கூடிய இந்த எண்ணை நாம் வெள்ளிக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது இரவு 9 மணிக்கு மேலோ எழுத வேண்டும். எப்படி எழுத வேண்டும் என்பதில்தான் ஒரு சூட்சமமே இருக்கிறது. ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் பச்சை நிற பேனாவை பயன்படுத்தி இந்த எண்ணை எழுத வேண்டும்.
7 8 6 என்று முதலில் ஏழு முறை எழுத வேண்டும். இப்படி ஏழு முறை எழுதும் முழுதும் நமக்கு அதிக அளவில் பணம் சேர்ந்து விட்டது, செல்வ நிலையில் உயர்ந்துவிட்டோம் என்று நினைத்துக் கொண்டே எழுத வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் தங்களுக்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை தீர வேண்டும் என்று நினைத்தாலும் அந்த பிரச்சனை தீர வேண்டும் என்று நினைத்துக் கொண்டு ஏழு முறை எழுத வேண்டும். அதற்கு அருகிலேயே மேலிருந்து கீழாக எட்டு முறை இந்த எண்களை வரிசையாக எழுத வேண்டும். அதற்கு அடுத்தார் போல் இதே எண்களை மேலிருந்து கீழாக ஆறு முறை எழுத வேண்டும்.
அதாவது முதலில் ஏழு முறை, அடுத்ததாக எட்டு முறை, அடுத்ததாக ஆறு முறை என்ற அடிப்படையில் நம்முடைய கோரிக்கை என்னவோ அந்த கோரிக்கையை கூறிக் கொண்டே எழுத வேண்டும். இப்படி எழுதுவதன் மூலம் நம்முடைய கோரிக்கைகள் விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது. மேலும் இதனால் நமக்கு பணத்தை ஈர்க்கக்கூடிய யோகமும் பணவரவை அதிகரிக்க கூடிய யோகமும் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:பணப்பிரச்சினை தீர்க்கும் அஷ்டமி பரிகாரம்
முழு நம்பிக்கையுடன் இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்பவர்களுக்கு அந்த எண்களின் ஆதிக்கத்தால் பணவரவு அதிகரிக்கும் யோகம் உண்டாகும், விருப்பம் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் இந்த தாந்திர பரிகாரத்தை செய்து முழுமையான பலனை பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.