- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

அட்சய திரிதியை அன்று கிருஷ்ணருக்கு, இந்த பொருளை நைவேத்தியமாக படைத்தால் குபேர யோகம் உண்டாகும்.

இந்த வருடம் 26.04.2020 வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று அட்சய திருதியை வருகிறது. இந்த அட்சய திதியில் அமோகமான யோகங்களை பெற, வீட்டிலிருந்தே சுலபமான முறையில் எப்படி வழிபாடு செய்யலாம் என்பதைப் பற்றியும், அட்சய திருதியை பற்றிய ஒரு சிறப்பு மிக்க வரலாற்று கதையைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

குசேலரும், கண்ணனும் பால்ய சினேகிதர்கள். கண்ணன் துவாரகையில் அரசனாக ஆட்சி செய்துகொண்டிருந்த சமயம், குசேலருக்கு வருமையான நிலை இருந்தது. ஆனால் தன்னுடைய வறுமை நிலையை போக்கிக்கொள்ள கண்ணனிடம் உதவி கேட்பதற்கு குசேலருக்கு மனமில்லை.

- Advertisement -

குசேலரின் மனைவி, தன்னுடைய கணவரை வற்புறுத்தி கண்ணனிடம் உதவி கேட்கச் சொல்லி அனுப்பி வைத்தால்! நீண்ட நாட்களுக்கு பின்பு சந்திக்கும் நண்பரை வெறுங்கையோடு சந்திக்கக்கூடாது, என்ற எண்ணத்தில், தன் கணவரின் கையில், கொஞ்சம் அவலையும் ஒரு துணியில் கட்டி கொடுத்தாள்.

தன் மனைவி கொடுத்த அவலை, வாங்கிக் கொண்டு கண்ணனை சந்திக்கப் புறப்பட்டார் குசேலர். துவாரகையை அடைந்தார். கண்ணனை சந்தித்து கட்டித் தழுவிக் கொண்டார். தன் மனைவி கொடுத்த அவலை, கண்ணனிடம் கொடுத்துவிட்டார். கண்ணபிரானும் தன் நண்பன் தனக்காக கொண்டு வந்த அவலை பாசமாக பெற்றுக் கொண்டு, ‘அட்சய’ என்ற வார்த்தையை சொல்லி தன் வாயில் போட்டுக் கொண்டாராம்.

- Advertisement -

ஆனால் குசேலரோ, தன்னுடைய கஷ்டத்தைப் பற்றி கண்ணனிடம் ஒரு வார்த்தை கூட கூறவில்லை. தன்னுடைய நண்பனிடம் உதவி கேட்க மனமில்லாமல், சந்தித்த மார்க்கத்திலேயே வீடு திரும்பிவிட்டார் குசேலர். ஆனால், வீடு திரும்பிய குசேலருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

குசேலரின் குடிசை வீடு, மாட மாளிகையாக மாறி இருந்தது! வீட்டில் பொற்காசுகள் குவிந்திருந்தன. பட்டுத்துணிக்கும், பலகாரத்திற்க்கும் பஞ்சம் இல்லாத நிலை உண்டாயிற்று. குசேலர் கண்ணனுக்கு அவல் கொடுத்த தினம், இந்த அட்சய திதி அன்று தான். குசேலருக்கு, குபேர யோகம் வந்தது இந்த அட்சய திதி அன்று என்றபடி வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆகவே, அட்சய திதி அன்று கிருஷ்ணருக்கு பிடித்தமான ‘அவல் பாயாசம்’ வைத்து நைவேத்தியமாகப் படைத்து, சந்தோஷத்தோடு, குடும்பத்துடன் சேர்ந்து கண்ணனை வழிபட்டால், குபேர யோகம் உண்டாகும். இந்த அட்சய திதி அன்று வீட்டில் இருந்தபடியே கிருஷ்ணரை வழிபட்டு அனைவரும் குபேர யோகத்தை அடைய வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்து, இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
விளக்கேற்றும்போது திரியை இந்த வடிவத்தில் போட்டால், வீடு சுபிக்ஷம் ஆகும். எந்த வடிவத்தில் போடுவது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Akshaya tritiya pooja in Tamil. Atchaya thiruthi. Atchaya thiruthi pujai. Atchaya tritiya in Tamil. Akshaya tritiya benefits.

- Advertisement -