விளக்கேற்றும்போது திரியை இந்த வடிவத்தில் போட்டால், வீடு சுபிக்ஷம் ஆகும். எந்த வடிவத்தில் போடுவது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

vilakku-thiri

நம்முடைய அன்றாட வேலையில் இறைவனுக்காக ஒதுக்கப்படும் நேரம், வீட்டில் தீபம் ஏற்றும் நேரம். காலை வேளையிலும், மாலை வேளையிலும் தீபம் ஏற்றும் அந்த நேரத்தை இறைவனுக்காக நாம் செலவழிக்கிறோம். அந்த தீபத்தை ஏற்றும் போது எந்தவிதமான பிழையும் இல்லாமல் ஏற்ற வேண்டும் என்பதும் கட்டாயம் தான். இப்படி இருக்க திரி போடுவதில் என்ன வடிவம் இருக்கமுடியும் என்று பலபேர் சிந்திக்கலாம். திரி போடுவதில் ஒரு சிறப்பான முறை சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

deepam

உங்கள் வீட்டில் இருக்கும் எந்த விளக்காக இருந்தாலும் சரி. காமாட்சி அம்மன் விளக்கு, குத்து விளக்கு, மண் அகல் தீபம், குபேர தீபம், ஜோதி விளக்காக இப்படி உங்கள் வீட்டில் இருக்கும் எந்த விளக்காக இருந்தாலும், முதலில் எண்ணெய் ஊற்றி விட்டு, தான் அதன் பின்பு திரியை போட வேண்டும். திரியை போடுவதற்கு முன்பாக, நன்றாக திரிந்து கொள்வது அவசியம். திரித்துக் கொண்ட அந்தத் திரியை ‘கேள்விக்குறி’ வடிவத்தில் தீபத்தில் உள்ள எண்ணெயில் போடுவதே சரியான முறை.

இந்த கேள்விக்குறி வடிவமானது உங்கள் மனதில் எழுப்பும் பலவகைப்பட்ட குழப்பமான கேள்விகளுக்கும் பதில் சொல்லும் வகையில் அமையும். தீபச் சுடர் ஒளியில் உங்களது வாழ்க்கையில் எழக்கூடிய, பலவிதமான பிரச்சனைகளை தரக்கூடிய கேள்விகளுக்கு தீர்வு தருவது தான் இந்த தீபம் என்பதை குறிக்கிறது.

vilakku1

கேள்விக்குறி வடிவில் திரியை போட வேண்டுமென்றால், அந்த திரி மிக சிறிய அளவில் இருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. முடிந்தவரை கடையிலிருந்து வாங்கும்போதே வத்தி நூல் பெரிய அளவில் இருப்பதாக பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டியது அவசியம். இன்று நம்மில் பல பேருக்கு ஒற்றைத் திரியில் தீபம் ஏற்றுவதா, இரட்டை திரியில் தீபம் ஏற்றுவதா என்ற சந்தேகம் உள்ளது.

- Advertisement -

பொதுவாகவே பஞ்சுத்திரிக்கு ஒற்றை, இரட்டை என்ற கணக்கெல்லாம் கிடையாது. அதை நன்றாக திரித்து விட்டு தீபம் ஏற்றலாம். இதுவே நூலில் செய்யப்பட்ட திரியாக இருந்தால் கட்டாயம் இரண்டு திரைகளை ஒன்றாக சேர்த்துதான் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 6 இழைகள் கொண்ட நூல் திரியில் முருகனுக்கு தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. கோவிலில் தீபம் ஏற்றுவதாலும் வீட்டில் தீபம் ஏற்றுவது ஆக இருந்தாலும் இனி நீங்கள் கட்டாயம் விளக்கில் போடக்கூடிய திரியை, கேள்விக்குறி போல் போட்டு ஏற்றும் பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை குறிப்பிடுவதற்காகவே இந்த பதிவு.

vilakku2

பின்குறிப்பு: சில பேர் தங்களுடைய வீட்டில், பரிகாரத்திற்காக இலுப்பை எண்ணெய் தீபம், வேப்பெண்ணை, தீபம் போன்ற எண்ணெய்களில் தீபம் ஏற்றும் பழக்கத்தை வைத்து இருந்தால், அந்த தீபத்தை ஏற்றுவதற்கு என்று தனியாக மண் அகல் தீபத்தை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். காமாட்சியம்மன் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் இவை இரண்டில் ஏதாவது ஒன்றை ஊற்றி தீபம் ஏற்றலாம். மற்ற எண்ணெய்களை காமாட்சி அம்மன் விளக்கு அல்லது கெஜலட்சுமி அம்மன் விளக்கிலோ ஊற்றுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

இதையும் படிக்கலாமே
எந்த மாத பௌர்ணமியில் விளக்கேற்றினால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா? பௌர்ணமி விரத ரகசியங்கள்!!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Deepam thiri palangal in Tamil. Vilakku thiri in Tamil. Vilakku thiri how many. How many thiri in vilakku in Tamil. Vilakku thiri benefits in Tamil.