- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

நாளை அட்சயதிரிதியை – இதை எல்லாம் செய்தால் பெரிய அளவில் பலன் உண்டு

சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் திருதியை தினம் “அட்சய திருதியை” தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அக்ஷய திரிதியை என்றாலே அன்றைய தினம் தங்கம் வாங்கினால் மேன்மேலும் தங்கத்தின் சேர்க்கை நமக்கு உண்டாகும் என்கின்ற நம்பிக்கையின் அடிப்படையில் பெரும்பாலான மக்கள் அன்றைய தினம் நகைக் கடைகளுக்கு சென்று தங்க நகை வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

ஜோதிட சாஸ்திர வல்லுனர்கள் தங்கம் வாங்குவதற்கு மிக சிறப்பான அட்சய திருதியை தினம் என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் என்பதாகவும் ஒரு கருத்தை கூறுகின்றனர். அட்சய திருதியை தினத்தன்று சூரியன், சந்திரன், சுக்கிரன் போன்ற கிரகங்கள் உச்சம் பெற்றிருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக தங்கத்திற்கு காரகத்துவம் கொண்ட கிரகமான குரு கிரகம் உச்சம் பெற்றிருக்க வேண்டும். இப்படி நான்கு கிரகங்களும் உச்சமாக இருக்கும் அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கினால் தங்கத்தின் சேர்க்கை அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சியும் உண்டாகும்.

- Advertisement -

அட்சய திருதியை தினத்தன்று தங்க நகை வாங்க இயலாவிட்டாலும் புனிதமான அட்சய திருதியை தினத்தன்று கீழ்க்கண்டவற்றை செய்தால் உங்களுக்கும் உங்கள் சந்ததியினருக்கும் மிகுந்த நன்மைகளை ஏற்படுத்தும்.

மகத்துவமிக்க அட்சய திருதியை தினத்தன்று நாடெங்கிலும் இருக்கின்ற புண்ணிய நதிகளில் ஏதேனும் ஒன்றில் நீராடினால் நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும். அட்சய திரிதியை தினத்தில் அன்னதானம் செய்வது மகத்தான பலனைத் தரவல்லது இந்த தினத்தில் தான் அன்னை பராசக்தி அன்னபூரணியாக சிவபெருமானுக்கு அன்னதானம் அளித்ததாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் இந்த தினத்தில் கிருஷ்ண பரமாத்மாவை வழிபடுபவர்களுக்கு அவர்கள் மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

- Advertisement -

அட்சய திரிதியை நாளில் உணவு தானியங்களை தானம் அளிப்பவர்கள் அகால மரணம் ஏற்படுவதிலிருந்து காக்கப்படுவார்கள். இந்த தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கின்ற வறுமை நிலை நீங்கும்.

இந்த நன்னாளில் ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்களுக்கு செய்யும் தான, தர்மங்கள் உங்களின் ஏழு தலைமுறைகளுக்கு புண்ணியம் சேர்ப்பதாக அமையும்.

- Advertisement -

இந்த தினத்தில் புத்தாடைகள் தானம் செய்வதால் நீண்ட காலமாக இருக்கும் நோய்கள் நீங்கும். கோயில்களுக்கு கற்பூரம் தானம் செய்வதால் மறுபிறவியில் அரச வாழ்வு கிடைக்கும்.

தாமரை பூ, மல்லிகை பூ போன்றவற்றை தானம் செய்வதால் மறு பிறவியில் மன்னர்களின் குலத்தில் பிறக்கின்ற பாக்கியம் உண்டாகும். தாழம்பூ தானம் செய்தால் மகாவிஷ்ணுவின் பூரணமான அருட் கடாட்சம் கிடைக்கும்.

வாசனை திரவியங்கள், பாக்கு, பழங்கள் போன்றவற்றை இந்த தினத்தில் தானம் செய்தால் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

மோர், இளநீர், குடிநீர் போன்றவற்றை இந்த தினத்தில் தானம் அளிப்பவர்கள் தங்களின் முன்ஜென்ம பாவங்கள் நீங்கி வாழ்வில் சிறப்பான முன்னேற்றம் காண பெறுவார்கள்.

அட்சய திருதியை தினத்தன்று சிறிதளவு வெள்ளி வாங்கினால் நவகிரகங்களில் சந்திர பகவானின் அருள் கிடைக்கும். சருமநோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை போன்றவை நீங்கும்.

அட்சய திரிதியை நாளன்று 11 ஏழைகளுக்கு தயிர்சாதம் அன்னதானமாக அளிப்பதால் உங்களின் 11 தலைமுறைகள் உணவிற்கு கஷ்டப்படும் நிலை ஏற்படாமல் காக்கும்.

இதையும் படிக்கலாமே:
இந்த 5 விஷயத்தை செய்தால் வீட்டில் நிச்சயம் செல்வம் சேரும்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Akshaya tritiya 2019 in Tamil. It is also called as Akshaya thiruthiyai in Tamil or Akshaya thiruthiyai date 2019 in Tamil or Akshaya thiruthiyai sirappugal in Tamil or Thangam vanga ugandha naal in Tamil.

- Advertisement -