இந்த 5 விஷயத்தை செய்தால் வீட்டில் நிச்சயம் செல்வம் சேரும்

lakshmi

நமது நாட்டுக் கலாச்சாரங்களில் செல்வம் என்பது தெய்வம் நமக்குத் தரும் ஒரு வகை வரமாக கருதப்படுகிறது. அந்த செல்வத்தை ஒரு மனிதனுக்கு அருளும் தெய்வமாக லட்சுமி தேவி இருக்கிறார். அந்த லட்சுமி தேவியின் அருட்பார்வை நமக்கு கிடைக்குமேயானால் செல்வத்திற்கு என்றும் குறைவு ஏற்படாது. அப்படி நமக்கு எப்போதும் குறையாத வகையில் செல்வம் சேர கடைபிடிக்க வேண்டிய ஐந்து முக்கியமான விதிகள் என்ன என்பதை இங்கு காண்போம்.

lakshmi

லட்சுமி தேவிகென்று நாடு முழுவதும் பல கோயில்கள் இருக்கின்றன. அது போக அனைவரின் வீடுகளிலும் மகாலட்சுமியின் படத்தை வைத்து செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு வழிபாடு செய்கிறோம். மகாலட்சுமி தேவி திருமாலின் இதயத்தில் வாசம் செய்பவராக இருக்கிறார். பெருமாளை வழிபடுபவர்களுக்கு தனது கருணை பார்வையை செலுத்தி, அவர்களின் வாழ்வில் வளமை பொங்க செய்கிறார் லட்சுமி தாயார். எனவே லட்சுமி தேவியை தனியாக வழிபடாமல், பெருமாளை மட்டும் வழிபடுபவர்களுக்கு அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் லட்சுமியின் அருளும் அவர்களுக்கு சேர்த்து கிடைக்கிறது. திருமாலுக்குரிய புதன், சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாட்டை மேற்கொள்வதால் நமக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் உப்பு, லட்சுமி தேவி அம்சம் நிறைந்ததாக கருதப்படுகிறது. இந்த உப்பை வீட்டில் அடிக்கடி தரையில் சிந்துவது, வீணடிப்பது போன்றவற்றைத் தவிர்த்தாலே வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். இந்த உப்பை அதிகம் பயன்படுத்தியே ஊறுகாய் வகைகள் தயாரிக்கப்படுகின்றன. ஒருவர் வீட்டில் பல வகை ஊறுகாய் செய்து சாப்பிடுவது என்பது செல்வ வளம் அதிகம் இருப்பதற்கான ஒரு அடையாளமாகும். எனவே உப்பு மற்றும் ஊறுகாய் வீட்டில் எப்போதும் தீர்ந்து போகாமல் பார்த்துக் கொள்வதால் அந்த வீட்டில் லட்சுமி தேவியின் அருள் நிறைந்திருக்கும்.

Lakshmi

நறுமணமிக்க மலர்கள் மற்றும் இதர பொருட்களின் வாசனை நமது மனதிற்கு உற்சாகத்தை தருகின்றது. நல்ல வாசனை உள்ள இடங்களில் இயற்கையாகவே தெய்வீக சக்தி குடிகொள்கிறது. எனவே உங்கள் வீடு மற்றும் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் துர்நாற்றம் ஏற்படுவதை தடுப்பதும், தினந்தோறும் வீட்டில் பூஜை அறையில் தெய்வங்களுக்குப் வாசமிக்க மலர்களைக் சமர்ப்பிப்பதும், தோட்டத்தில் நறுமணம் மிக்க மலர்களை வளர்ப்பதாலும் நேர்மறையான ஆற்றல்கள் வீட்டில் அதிகரித்து அந்த வீட்டிற்குள் லட்சுமி தேவி என்றென்றும் குடியிருப்பாள்.

- Advertisement -

வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை தருவதும், அவர்களிடம் ஆசி பெறுவதும், அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வதும் லட்சுமி தேவியின் அருட் பார்வை உங்கள் மீது விழச் செய்யும் சிறந்த செயல்களாக இருக்கிறது.

old people

தங்களுக்கு இறைவனின் அருளால் தரப்பட்ட அதிகமான செல்வம் தங்களுக்கும், தங்கள் வம்சாவழியினர் அனுபவிப்பதற்கு மட்டுமே என்று கருதுகின்ற எண்ணம் உலகில் பெரும்பான்மையான மக்களுக்கு இருக்கிறது. இப்படி மிகுதியான செல்வம் பெற்ற ஒருவர் தங்களுடைய சொந்த சுகபோகங்களுக்கு மட்டுமே செலவு செய்வதும், பிறருக்கு தான, தர்மங்கள் செய்யாமலும் சேர்த்து வைத்துக் கொண்டே சென்றால் ஒரு கட்டத்தில் அந்த செல்வம் என்பது அதை ஈட்டிய பரம்பரையினரே அனுபவிக்க முடியாத ஒரு நிலை ஏற்படும். தங்களுக்கு எப்போதும் அதிக செல்வம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் தங்களுக்கு கிடைக்கின்ற வருமானம், லாபங்களில் கால் பங்கை தான, தர்ம காரியங்களுக்கு செலவு செய்வதால் லட்சுமி தேவியின் மனம் குளிர்ந்து, உங்களுக்கு செல்வம் பன்மடங்கு அதிகரித்த படியே இருக்க அருள் புரிவார்.

money

நாம் பேசும் வார்த்தைகள் நேர்மறையான மற்றும் எதிர்மறையான அதிர்வுகளை ஏற்படுத்தும் சக்தி நிறைந்ததாகும். வீட்டில் இருக்கும் உறுப்பினர்கள் அடிக்கடி சண்டை போடுவது, வீட்டில் அமங்கலமான வார்த்தைகளை உபயோகிப்பது போன்ற செயல்கள் அந்த வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் ஏற்படாதவாறு செய்து விடும். எனவே நாம் வசிக்கின்ற வீட்டில் எப்போதும் மங்கலமான வார்த்தைகள் பேசுவதை கடைபிடிக்க வேண்டும்.

speaking people

பொய் பேசுபவர்களுக்கு இறைவனின் அருள் கிடைக்காது என்பது நம்மில் பலர் அறிவோம். ஆனால் சிறு, சிறு விஷயங்களுக்கு கூட அதிகம் பொய் பேசுபவர்களுக்கு செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவியின் அருளாசி கிடைக்காமல், அவர்கள் செல்வத்தை ஈட்ட மிகவும் கஷ்டப்படுவார்கள். எனவே நாம் அனைவரும் பொய் பேசாமல் வாழ முயற்சி செய்வதால் லட்சுமி தேவியின் அன்பிற்கு பாத்திரமாவோம்.

இவையெல்லாவற்றிற்கும் மேலாக தங்களின் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து எப்போதும் இறை சிந்தனையிலேயே வாழ்பவர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் ஆசிகள் கிடைத்து, அவர்கள் விரும்பாமலேயே அவர்களிடம் செல்வம் அதிகம் சேரும். வாழ்வின் இன்ன பிற தேவைகளும் பூர்த்தியாகும்.இதையும் படிக்கலாமே:
முயற்சிகளில் வெற்றி பெற இங்கு வழிபடுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Lakshmi kadatcham in Tamil. It is also called as Selvam peruga tips in Tamil or Veetil selvam sera tips in Tamil or Panam peruga tips in Tamil or Veetil lakshmi vaasam seiyya in Tamil or Lakshmi arul kidaikka in Tamil.