- Advertisement -
- Advertisement -

பணத்தை சம்பாதிப்பதற்காக பல வழிகளில் நம் முயற்சி செய்தாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் தடைகள் ஏற்பட்டு பணவரவு என்பது நம்மிடம் வராமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். இதே போல் யாராவது நமக்கு பணம் தர வேண்டியதாக இருந்தாலும், அவர்களால் அந்த பணத்தை தர முடியாத அளவிற்கு தடங்கல்கள் ஏற்படும். இப்படிப்பட்ட தடைகளையும் தடங்கல்களையும் நீக்குவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான அமாவாசை வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பணவரவு என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடிய முதல் தெய்வமாக மகாலட்சுமி தாயார் திகழ்கிறார். மகாலட்சுமி தாயாரின் அம்சம் பொருந்திய அனைத்திற்கும் பணவரவை அதிகரிக்க கூடிய தன்மை உள்ளது. அந்த வகையில் மகாலட்சுமி தாயாரின் அம்சம் பொருந்தியதாக திகழக்கூடியதுதான் துளசி செடி. அதனால்தான் ஒவ்வொருவருடைய இல்லத்திலும் துளசிச் செடியை வளர்க்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருந்தார்கள். அப்படிப்பட்ட துளசி செடியை எந்த முறையில் வழிபட்டால் பணவரவு அதிகரிக்கும் என்று பார்ப்போம்.

- Advertisement -

ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கும். எந்த கிழமையில் எந்த தெய்வத்தை நாம் வழிபடுகிறோமோ அதற்கேற்றார் போல் பலன்களை நம்மால் பெற முடியும். இதை தவிர்த்து அமாவாசை, பௌர்ணமி போன்ற தினங்களில் நாம் செய்யக்கூடிய வழிபாட்டிற்கு அதிகமான பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் இந்த துளசி வழிபாட்டை நாம் அமாவாசை தினத்தில் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.

அமாவாசை தினத்தன்று பொதுவாக முன்னோர்களின் வழிபாட்டை தான் மேற்கொள்வோம். அவ்வாறு மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல் நாம் துளசிச் செடியையும் வழிபட்டோம் என்றால் பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கும். இந்த வழிபாட்டை எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த வழிபாட்டிற்கு கண்டிப்பான முறையில் நம் வீட்டில் துளசி செடி என்பது இருக்க வேண்டும்.

- Advertisement -

துளசி செடியை சுத்தம் செய்து துளசி செடிக்கு முன்பாக அகலில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு துளசி செடிக்கு ஊதுபத்தி காட்டுங்கள். அடுத்ததாக 11 ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவி துளசி செடியின் அடியில் அதாவது துளசி செடியின் வேர் செல்லும் இடத்தில் துளசி செடியை சுற்றி இந்த 11 ரூபாயை வைத்து விட வேண்டும். அடுத்ததாக சுத்தமான ஒரு டம்ளரை எடுத்து அதில் நிறை குட தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தண்ணீருடன் காய்ச்சாத பசும்பால் மூன்று ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த பசும்பால் கலந்த தண்ணீரை ஓம் மகாலட்சுமி தாயே போற்றி என்று மனதார கூறிக் கொண்டே அந்த ஒரு ரூபாய் நாணயங்களில் படும்படி ஊற்ற வேண்டும். மீதம் இருக்கும் பாலை துளசி செடியின் எல்லா ஓரங்களிலும் ஊற்றி விடுங்கள். அடுத்ததாக மஞ்சளால் துளசி செடிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அதேபோல் குங்குமத்தாலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

இப்படி அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூரம் காட்டி வணங்கிக் கொள்ள வேண்டும். இந்த முறையில் பூஜையை நிறைவு செய்த பிறகு நாம் வைத்திருந்த அந்த பதினோரு ரூபாயையும் எடுத்து அன்றைய தினம் ஏதாவது ஒரு செலவு செய்வதற்காக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்க பிரம்ம முகூர்த்த வழிபாடு

இந்த முறையில் நாம் அமாவாசை தினங்களில் துளசி செடியை வழிபடுவதன் மூலம் நமக்கு பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் பண வரவும் அதிகரிக்கும்.

- Advertisement -