பணம் பத்தும் செய்யும் பாதாளம் வரை போகும் என்று நம்முடைய முன்னோர்கள் அந்த காலத்திலேயே கூறி வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட அற்புத சக்தி வாய்ந்த பணம் ஒருவரிடம் இல்லை என்றால் அவரால் அவருடைய வாழ்க்கையில் ஜெயிக்கவே முடியாத சூழ்நிலை உண்டாகும். ஒருவர் சிறப்பாக வாழ்கிறார் என்பதற்கு அவர் வைத்திருக்கும் பணமே பிரதானமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட பணத்தை பெறுவதற்கு செய்யக்கூடிய பிரம்ம முகூர்த்த வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாகவே பிரம்ம முகூர்த்தம் என்பது தேவர்களுக்குரிய நேரமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் யார் ஒருவர் தூக்கத்திலிருந்து விழித்து தன்னுடைய அன்றாட வேலையை செய்ய ஆரம்பிக்கிறார்களோ அவர்களுக்கு அன்றைய நாள் முழுதும் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று ஆன்மீக ரீதியாகவும் அதே சமயம் அறிவியல் ரீதியாகவும் கூறப்படுகிறது.
பல எண்ணில் அடங்காத நன்மைகள் கிடைக்கக்கூடிய நேரமாக தான் இந்த பிரம்ம முகூர்த்த நேரம் திகழ்கிறது. அப்படிப்பட்ட பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய வழிபாட்டிற்கு பல மடங்கு பலம் கிடைக்கும் என்றும் நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். சாதாரணமாக சூரிய உதயமான பிறகு செய்யக்கூடிய வழிபாட்டிற்கு எந்த அளவிற்கு பலம் இருக்கிறதோ அதைவிட பத்து மடங்கு அதிக பலன் பிரம்ம முகூர்த்த வேளையில் செய்யக்கூடிய பூஜைக்கு இருக்கும்.
அதோடு மட்டுமல்லாமல் பலரும் பிரம்ம முகூர்த்த வேளை என்பது காலை 4:30 மணியிலிருந்து 6 மணி வரை என்று நினைத்து இருப்பார்கள். அவ்வாறு இல்லாமல் 3:30 மணியிலிருந்து 5 மணிக்குள் இந்த வழிபாட்டை நாம் செய்யும்பொழுது அதுதான் உண்மையான பிரம்ம முகூர்த்த வழிபாடு திகழும் என்று கூறப்படுகிறது. 48 நாட்கள் செய்ய வேண்டும்.
இந்த வழிபாட்டிற்கு ஒரு பச்சை நிற துணி வேண்டும். மேலும் ஒரு மரப்பெட்டி வேண்டும். இந்த வழிபாட்டிற்கு மகாலட்சுமி தாயாரின் படம் தேவை. அந்த படத்தில் மகாலட்சுமி தாயார் பச்சை நிற ஆடை அணிந்திருப்பது போல் இருப்பது மிகவும் சிறப்பு. அவ்வாறு இல்லை என்றால் சாதாரண மகாலட்சுமி தாயாரின் படத்தை கூட உபயோகப்படுத்திக் கொள்ளலாம். விருப்பம் இருப்பவர்கள் பச்சை நிற ஆடை அணிந்திருக்கும் மகாலட்சுமி தாயாரின் படத்தை வாங்கி வைத்து இந்த பூஜையை செய்யலாம்.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக பச்சை நிற பட்டு துணியை விரிக்க வேண்டும். பட்டுத்துணி கிடைக்காதவர்கள் சாதாரண துணியை கூட விரித்துக்கொள்ளலாம். இதற்கு மேல் ஒரு மரப்பெட்டியை வைக்க வேண்டும். அந்த மரப்பெட்டிக்குள் சிறிது ஏலக்காய், சிறிது பச்சை கற்பூரம், சுத்தமான சந்தன கட்டை, வில்வ இலை, மல்லிகைப்பூ, ஒற்றைப்படை எண்ணிக்கையில் 11, 51, 101, 501 என்ற எண்ணிக்கையில் பணம் வைக்க வேண்டும்.
பிறகு மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து மகாலட்சுமி தாயாரின் அஷ்டோத்திரத்தையோ அல்லது கனகதாரா ஸ்தோத்திரத்தையோ கூற வேண்டும். நெய்வேத்தியமாக கற்கண்டை வைக்க வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி பூஜையின் நிறைவு செய்ய வேண்டும். இந்த முறையில் தொடர்ந்து 48 நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும். தினமும் அந்த பெட்டிகள் இருக்கும் மல்லிகை பூவை மட்டும் மாற்ற வேண்டும்.
இதையும் படிக்கலாமே: கடன் வராமல் தடுக்க
மிகவும் எளிமையான இந்த மகாலட்சுமி வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்பவர்களுடைய வாழ்க்கையில் பணரீதியான அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்.