- Advertisement -
பாடல்

உலகாளும் ஓம்காரி அம்மன் பாடல் வீடியோ

வீடியோ மற்றும் பாடல் வரிகள் கீழே உள்ளன
தமிழர் கலாச்சாரத்தில் இன்றும் அம்மனை போற்றி பாடும் கலாச்சாரம் நிலைத்திருக்கிறது. உடுக்கை ஓசை ஒலிக்க அம்மனை போற்றி பாடினால் நாத்தீகர்களுக்கு கூட பக்தி பிறக்கும். ஆடாதவர் கால்களும் ஆடும், அம்மனின் அருள் வந்து பலர் அற்புத நடனம் ஆடுவதையும் பார்க்கலாம். இப்படி அம்மனின் சக்தியை கூறும் ஒரு பாடல் இதோ.

அம்மன் பாடல் வரிசையில், உலகாளும் ஓம்காரி பாடல் வரிகள் மிகவும் அற்புதமாக உள்ளன. இதோ அந்த பாடல் வரிகள்

- Advertisement -

அம்மன் பாடல் வரிகள்

உலகாளும் ஓம்காரி மௌனம் என்ன ?
உனை நம்பி வந்தோமே பதிலும் என்ன ?
விதி வந்து விளையாடும் மாயம் என்ன ?
வேதாளம் உனை வெல்ல துணிவதென்ன.
ஆதாரம் உந்த அடி,
தாழ்வாரம் உந்தன் மாடி,
ஓம்காரம் ஓங்கும்படி, ஆங்காரம் அழியும்படி,
படைகொண்டு வினை முடிய வருவாயாடி.

- Advertisement -

உலகாளும் ஓம்காரி மௌனம் என்ன….

வேப்பிலை கருமாரி, மகமாயி திரி சூலி, சிவசக்தி மாரியம்மா
உன் கோபம் தீயாகும் உன் பாசம் நீராகும்
நீ இன்றி உலகேதம்மா
மூவாறு கை கொண்டு விண்ணுக்கும் மண்ணுக்கும்
நீ நிமிர்ந்து நின்றாயம்மா
சூலத்தை நீ ஏந்தி, நியாயத்தை நீ தாங்கி அகிலத்தை காப்பாயம்மா
ஓம்காரியே…சர்வ சக்தியே…மாதங்கியே.. நவ துர்காயே…
நீலகண்டன் அவன் உண்டு விஷம் தொண்டையில் பிடித்தாய்
பிள்ளை இவள் உண்ட விஷம், நீ முறித்து நீ வாங்குவாய்…
வேதனைக்கும் சோதனைக்கும் பிஞ்சி உயிர் தாங்காதம்மா..

உலகாளும் ஓம்காரி மௌனம் என்ன….

நீ கொண்ட அவதாரம் இவள் என்று பல காலம்
பயம் இன்றி வாழ்ந்தோமம்மா…
விஷம் இங்கு ரசமாகும், ரணமெல்லாம் குணமாகும்
நீ வந்து குடியேரம்மா..
உன் பிள்ளை உயிர் காக்க மறுத்தால் பழி யாவும்
உன் மீது விழுமே அம்மா..
உன் வேட்டை தொடங்கட்டும், உன் சாட்டை சுழலட்டும்
சதியாவும் பொடியாக்கம்மா…
அதி ரூபியே, அலங்காரியே, மூகாம்பிகே, சிவகாமியை
காளான் அவன் சூழ்ச்சியினை நீ தடுக்க வருவாய்
காலம் அது போகிறது கண் திறந்து காப்பாற்ற வா
உன் உயிரை கொடுத்தேனும் இவள் உயிரை
நீ மீட்டு தா..

- Advertisement -