- Advertisement -

விரும்பிய வேலை கிடைக்க வேலவன் வழிபாடு

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையை தீர்மானிக்கக்கூடிய ஒரு விஷயமாக கருதப்படுவது அவர்கள் செய்யக்கூடிய வேலைதான். ஒருவர் செய்யும் வேலையை பொறுத்துதான் அவருக்கு மதிப்பும் மரியாதையும் இந்த சமுதாயத்தில் கிடைக்கிறது. அப்படிப்பட்ட மதிப்பையும் மரியாதையும் தரக்கூடிய வேலை என்பது அவர்கள் விரும்பிய வேலையாக இருந்தால் தான் அந்த வேலையில் அவர்களால் நல்ல முன்னேற்றத்தை பெற முடியும். விரும்பிய வேலை கிடைப்பதற்காக பல பட்டதாரிகள் பல வருடங்களாக முயற்சி செய்து கொண்டு இருந்தும் அவர்களால் விரும்பிய வேலை பெற முடியாத ஒரு சூழ்நிலை உண்டாகி இருக்கும்.

அதேபோல் ஒருவர் ஒரு வேலையில் சேர்ந்திருப்பார் சேர்ந்த நாளிலிருந்து எத்தனை வருடங்கள் ஆனாலும் அந்த வேலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் சேர்ந்த அதே பதவியில் இருப்பார். எந்தவித சம்பள உயர்வு கிடைத்திருக்காது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுடைய வேலையில் முன்னேற்றம் பெற வேண்டும் என்றும் நினைப்பார்கள். இதேபோல் பலருக்கும் அவர்களுடைய வேலையில் முன்னேற்றம் ஏற்படாமல் இருப்பதற்காக உடன் இருப்பவர்கள் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தி இருப்பார்கள். இந்த பிரச்சினைகளை தீர்க்கவும் அதே சமயம் வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் முருகப்பெருமானை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

விரும்பிய வேலை கிடைக்க வேலவன் வழிபாடு

வேலை தொடர்பான விஷயங்களுக்கு அதிபதியாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான். அதேபோல் அரசாங்க வேலை தொடர்பான விஷயங்களுக்கு அதிபதியாக திகழக்கூடியவர் சூரியபகவான். இவர்கள் இருவரின் அருள் இருந்தால் ஒருவருடைய வாழ்க்கையில் வேலை என்பது மிகவும் சிறப்பாக அமைந்துவிடும். அப்படி இவர்கள் சாதகமற்ற சூழ்நிலையில் இருக்கும் பொழுது அவர்களுக்கு வேலை ரீதியாக பல பிரச்சினைகள் ஏற்படலாம். அப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்கு முருகப்பெருமானின் பாதங்களில் சரணாகதி அடைய வேண்டும்.

வேலை தொடர்பான விஷயங்களுக்கும், பணம் தொடர்பான விஷயங்களுக்கும் பழனி முருகனை நாம் வழிபாடு செய்தோம் என்றால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக செவ்வாய்க்கிழமை கோவில் திறக்கும் நேரத்தில் முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் காட்சியளிப்பார். அந்த ஆண்டி கோலத்தை தரிசனம் செய்பவர்களுக்கு அவர்களுடைய வேலை தொடர்பான அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும். அதே சமயம் பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதற்காக அடிக்கடி பழனிக்கு சென்று வழிபாடு செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் ஒருமுறை மட்டும் பழனிக்கு செவ்வாய்க்கிழமை பிரம்ம முகூர்த்த நேரத்தில் சென்று ஆண்டி கோலத்தில் தரிசனம் செய்துவிடுங்கள். பிறகு வீட்டில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஆண்டி கோலத்தில் இருக்கக்கூடிய முருகப்பெருமானை மனதார நினைத்துக் கொண்டு ஆறு நெய் தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இதேபோல் அருகில் கொடிமரம் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று ஆறு நெய் தீபம் ஏற்றி வைத்து அவருக்கு செவ்வரளி மலர்களை சமர்ப்பித்து ஆறு முறை வலம் வந்து வேலை தொடர்பான வேண்டுதலை வைத்து வழிபாடு செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:கடன் சுமை தீர நவதானிய பரிகாரம்

வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை என்னும் சொல்லிற்கிணங்க வேலவனை மனதார நினைத்து நாம் செய்யக்கூடிய எந்த வழிபாடாக இருந்தாலும் அதற்கு பலன் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -