- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் சுமை தீர நவதானிய பரிகாரம்

கடன் சுமை தீர நவதானிய பரிகாரம்

- Advertisement -

கடன் சுமை என்பது ஒரு குடும்பஸ்தருக்கு அல்லது தொழில் செய்பவர்களுக்கு மிகப்பெரும் சுமையாக இருக்கும். கடன் வாங்கும் ஒவ்வொருவருக்கும் அதை திருப்பி காட்டும் வரை தூக்கம் கூட வருவதில்லை. மேலும் மேலும் கடன் வாங்காமல் இருக்கவும், இருக்கின்ற கடன் குறைந்து கொண்டே சென்று, வருமானம் உயரவும், வெள்ளிக்கிழமைகளில் இந்த பொருட்களை வாங்குவது நல்ல பலன் தரும் என்று ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான குறிப்புகளைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தொடர்ந்து காண இருக்கிறோம்.

பொதுவாகவே வெள்ளிக்கிழமையில் கல் உப்பு வாங்க லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை. கல் உப்பு வீட்டில் எப்பொழுதும் நிறைந்து இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். இப்போதெல்லாம் சால்ட் உப்பு தான் பயன்படுத்துகின்றோம். ஆனால் கல் உப்பில் இருக்கும் நன்மைகள் ஏராளம்! அது மட்டும் அல்லாமல் கல் உப்பு பயன்படுத்துபவர்கள் இல்லத்தில், மகாலட்சுமி வாசம் உண்டாகும், இதனால் கடன்களும் குறையும்.

- Advertisement -

அதே போலவே வெள்ளிக் கிழமையில் நவதானியங்கள், வெள்ளிப் பொருட்கள் வாங்க சுக்கிர யோகம் கிட்டும். வெள்ளிக்கிழமையில் கொஞ்சம் கொஞ்சமாக நவதானியங்களில் ஒன்றினை வாங்குங்கள். நவதானியங்களில் உள்ள ஒவ்வொரு தானியங்களும் அளப்பரிய சக்திகளை பெற்றுள்ளது. ஒன்பது வகையான பிரச்சனைகளை தீர்க்கக் கூடியது நவதானியங்கள்.

பல விசேஷங்களில் முளைப்பாரி எடுப்பதும், நவதானிய பூஜைகள் செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நவதானியங்கள் அடிக்கடி உணவில் சேர்ப்பது உடலுக்கு மட்டுமல்லாமல், கடன் சுமைகளையும் தீர்க்கவல்லது. நவதானியங்களை வாங்க விரும்புவோர் அதை வெள்ளிக்கிழமையில் வாங்குங்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உங்களுக்கு தேவையான நவதானிய பொருட்களை வாங்கி அதை அடிக்கடி உணவில் சேர்த்து பயன்படுத்தி வர வேண்டும். அடுத்த வெள்ளிக்கிழமை வருவதற்குள் மீண்டும் ஏதாவது ஒரு தானிய வகையை வாங்கலாம். இது போல செய்து வர கடன் சுமை குறையும், புத்தி தெளிவாகும், வருமானம் உயரும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

மேலும் சுக்கிர யோகம் கிடைக்க வெள்ளி பொருட்களை வாங்கி வருவது நலம் தரும். நீங்கள் வெள்ளியால் ஆன ஏதாவது ஒரு பொருட்களை புதிதாக வாங்க விரும்பினால், அதை வெள்ளிக்கிழமையில் சென்று வாங்குங்கள். ஜாக்பாட் அடித்தது போல சுக்கிர யோகம் உங்களை துரத்தும். அந்த அளவிற்கு நல்ல பலன்களை கொடுக்கக் கூடிய வெள்ளியை வெள்ளிக்கிழமையில் வாங்குவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். ஒருவருக்கு பரிசாக வெள்ளியால் ஆன பொருளை வாங்கப் போகிறீர்கள் என்றால், அதை வெள்ளிக்கிழமையில் வாங்க கூடாது. நம் சொந்த உபயோகத்திற்கு வாங்கும் பொழுது மட்டும் வெள்ளிக்கிழமையில் வாங்குங்கள். தானம் கொடுக்க விரும்புபவர்கள், பரிசாக வழங்க விரும்புபவர்கள் மற்ற கிழமைகளில் வெள்ளிப் பொருட்களை வாங்கலாம்.

இதையும் படிக்கலாமே:
வாழ்க்கை ஒளிமயமாக விநாயகர் வழிபாடு

மேலும் வெள்ளிக்கிழமையில் தயிரை யாருக்கும் தானம் கொடுக்கக் கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால் அன்றைய நாளில் தயிரை உறைய வைப்பது நல்ல பலன்களை கொடுக்கும். இதுவும் குடும்பத்திற்கு லட்சுமி கடாட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும். எப்பொழுதும் வீட்டில் தயிர், ஊறுகாய், நிரம்பிய கல் உப்பு ஜாடி, அரிசி அளக்கும் படியில் அரிசி இருப்பது போன்ற விஷயங்களை கடைப்பிடித்து வந்தால் வம்சம் செழிக்கும், குறை இல்லாத செல்வங்கள் பெருகும் என்பது ஐதீகம்.

சற்று முன்