- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

அனுஷம் நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் மிகுந்த செல்வம் பெற இவற்றை செய்யுங்கள்

ஒரு மனிதனுக்கு எத்தனை இன்பங்கள் கிடைக்கப்பெற்றாலும் அவற்றையெல்லாம் அனுபவிக்க நீண்ட ஆயுள் பெறுவது முக்கியமானதாகும். நவகிரகங்களில் மனிதனுக்கு நீண்ட ஆயுளை தருபவர் சனி பகவான் ஆவார். அந்த சனி பகவானின் அம்சம் கொண்ட ஒரு நட்சத்திரமாக அனுஷம் நட்சத்திரம் இருக்கிறது. இந்த அனுஷம் நட்சத்திரக்காரர்கள் தங்களின் வாழ்வில் ஏற்றமிகு பலன்களை பெறுவதற்கான பரிகார முறைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

27 நட்சத்திர வரிசைகளில் பதினேழாவதாக வரும் நட்சத்திரம் அனுஷம் நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக சனி பகவான் இருக்கிறார். அனுஷம் நட்சத்திரத்தின் அதி தேவதை மகாலட்சுமி ஆவார். சனி பகவானுக்குரிய நட்சத்திரம் என்பதால் இயற்கையிலேயே உடல் மற்றும் மனோபலம் அதிகம் இருக்கும். கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். பிறருக்கு கொடுப்பதில் மகிழ்ச்சியடைவார்கள். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்வில் மிகுந்த செல்வ வளம் உண்டாக கீழ்கண்ட பரிகாரங்களை செய்து வர வேண்டும்.

- Advertisement -

அனுஷம் நட்சத்திரக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளைகளில் வீட்டின் பூஜையறையில் இருக்கும் மகாலட்சுமி படத்திற்கு சிறிய அகல்விளக்குகளில் சுத்தமான பசு நெய் ஊற்றி, தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்றி லட்சுமி தேவியை வணங்க வேண்டும். அனுஷ நட்சித்திரத்திற்குரிய தல விருட்சம் மகிழ மரமாகும். மகிழ மரம் தல விருட்சமாக இருக்கும் கோயிலுக்கு சென்று அங்குள்ள இறைவனையும், மரத்தையும் வழிபட வேண்டும்.

ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று செந்தூரம், தீபம் ஏற்றும் எண்ணெய் மற்றும் தாமரை பூக்களை ஆஞ்சநேயர் பூஜைக்கு தானமாக கொடுப்பது நல்லது.சனிக்கிழமைகளில் காலையில் சிறிதளவு தயிர் சாதத்தில், கொஞ்சம் கருப்பு எள் கலந்து காகங்களுக்கு உணவாக வைத்து பின்பு நீங்கள் உணவருந்த வேண்டும். ஞாயிற்று கிழமைகளில் வரும் ராகு காலத்தில் பைரவரை வணங்கி வருவதும் உங்கள் தோஷங்களை போக்கும் சிறந்த பரிகாரம் ஆகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
தொழில், வியாபாரங்களில் அதிக லாபம் கிடைக்க

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Anusham nakshatra pariharam in Tamil. It is also called as Anusham natchathiram in Tamil or Anusham natchathiram athipathi in Tamil or Natchathira pariharam in Tamil or Anusham natchathira palangal in Tamil.

- Advertisement -