உங்கள் தொழில்,வியாபாரங்களில் அதிக லாபம் தொடர்ந்து கிடைக்க இதை செய்யுங்கள்

money

பல்லாண்டுகள் ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து, உழைத்து எதிர்காலத்திற்கான செல்வம் சேர்பவர்களை விட சொந்த தொழில், வியாபாரங்களில் சிறிது காலம் கடினமாக உழைப்பவர்கள் மிகுந்த செல்வம் ஈட்டிவிடுகின்றனர். இப்படி மிகுந்த லாபங்களை குறைந்த காலத்திலேயே ஈட்டினாலும் தொழில், வியாபாரங்களில் ஈடுபடுபவர்களின் பொருள் வரவு ஒரு நாள் போன்று மற்றொரு நாள் இருக்காது என்பதே உண்மை. இத்தகைய பிரச்னையை தீர்ப்பதற்கான ஒரு எளிய தாந்திரீக பரிகாரம் முறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

shop

தொழிலோ அல்லது வியாபாரமோ எதை செய்தாலும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் வந்தால் மட்டுமே தனவரவு நன்றாக இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு பல ஆண்டு காலம் தொழில், வியாபாரங்கள் செய்தாலும் பெரிய எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களோ, பெருமளவு லாபங்களோ ஏற்படுவதில்லை. இத்தகைய குறைபாடுகள் தீர்க்க ஒரு எளிய வழிமுறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் தொழில், வியாபாரங்களில் தொய்வு நிலை, வாடிக்கையாளர்கள் குறைவது போன்ற சூழ்நிலைகள் உருவாகும் பட்சத்தில் ஒரு நல்ல நாளில் வேதமறிந்த வேதியர்களை கொண்டு மந்திரங்கள் துதித்து, பூஜித்து உருவேற்றப்பட்ட செம்பு தகட்டில் வரையப்பட்ட “ஸ்ரீ யந்திரம்” தகட்டினை வளர்பிறை வெள்ளிக்கிழமை தினத்தில், சித்த யோகம் அல்லது அமிர்த சித்த யோகத்தில் உங்களின் தொழில், வியாபார இடங்களில் வைக்க வேண்டும்.

உங்கள் தொழில், வியாபார கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்ரீ யந்திரத்திற்குரிய மந்திரத்தை 108 தினமும் துதித்து, பூஜை செய்து உங்கள் தொழில், வியாபாரங்களில் ஈடுபடுவதால் வியாபாரங்களில் இருந்த தொய்வு நிலை மாறும், புதிய மற்றும் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் உங்களுக்கு கிடைத்து உங்களுக்கு மிகுந்த லாபங்கள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
சர்ப்ப, நாக தோஷங்கள் நீங்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Business pariharam tips in Tamil. It is also called as Viyabaram sirakka in Tamil or Selvam peruga in Tamil or Labam peruga in Tamil or Thozhil sirakka yantram in Tamil.