
நம்முடைய வீட்டில் பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றது. தெய்வம் தான் நம்முடைய குடும்பத்தை காப்பாற்றியது என்று. வீட்டில் அசம்பாவிதம் நடக்க இருந்தது. நல்ல வேலை கடவுளின் அருளால் உயிர் தப்பினோம் என்றும் சொல்லுவோம்.
இப்படி எதிர்பாராத அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க, இந்த பரிகாரத்தை செய்யலாம். வீட்டில் எந்த நல்லதுமே நடக்கவில்லை, அடுத்தடுத்து துக்க செய்தியாகவே இருக்கிறது, வீட்டில் சுபகாரிய தடையால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எல்லாம் மன உளைச்சலாக இருக்கிறார்கள். வீட்டில் சுபகாரிய தடை நீங்க வேண்டும் என்று நினைத்து இந்த பரிகாரத்தை செய்தால், வீட்டில் சுபம் ஏற்படும். நம் வீட்டில் சுபத்தை மட்டுமே கொடுக்கும். அந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் என்ன பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
வீட்டில் வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் போது, கூடவே இந்த விளக்கையும் ஏற்றி வைத்துவிட்டு மகாலட்சுமியையும் குலதெய்வத்தையும் மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். ஒரு தாம்பல தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் மஞ்சள் போட்டு கொஞ்சமாக பன்னீர் விட்டு பிசைந்து கொள்ள வேண்டும். கொஞ்சம் கெட்டியாக பிசைந்து கொள்ளுங்கள்.
மஞ்சள் பிள்ளையார் பிடிப்பது போல அதை அப்படியே பிசைந்து, உள்ளங்கைகளில் வைத்து வடை போல தட்டி, அந்த தாம்பூல தட்டிலேயே வையுங்கள். அதன் மேலே ஒரு மண் அகல் விளக்கை வைத்து, நெய் நல்லெண்ணெய் இரண்டையும் கலந்து ஊற்றி, மஞ்சள் நிறத்தில் திரி போட்டு விளக்கு ஏற்றி மகாலட்சுமியை பிரார்த்தனை செய்து கொண்டால் உங்களுடைய வீட்டில் சுபகாரிய தடை விலகும்.
அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காது. கெட்ட நேரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடக்க வேண்டும் என்ற தலைவிதி உங்களிடத்தில் இருந்தாலும், அந்த தலைவிதியை மாற்றக்கூடிய சக்தி இந்த விளக்குக்கு உண்டு. மஞ்சள் எளிமையான சாதாரண பொருள் அல்ல. ஆன்மீகத்தில் பெரிய சிறப்பைப் பெற்ற பொருள்.
அந்த மஞ்சளுக்கு மேலே விளக்கை ஏற்றி பிரார்த்தனை வைக்கும்போது, நிச்சயம் பலன் இரட்டிப்பு மடங்காக கிடைக்கும். வெள்ளிக்கிழமை இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அடுத்த நாள் சனிக்கிழமை அந்த மஞ்சள் லேசாக காய்ந்திருக்கும். அதை எடுத்து அப்படியே செடி கொடிகளுக்கு கீழே போடலாம். முடியாதவர்கள் பூஜை அறை குப்பைகளோடு சேர்த்து இந்த பொருளையும் போட்டு விடவும்.
இதையும் படிக்கலாமே: குடும்பத்தில் இருக்கும் சண்டை சச்சரவுகள் குறைய
மூன்று வாரம் வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தாலே வீட்டில் இருக்கும் தரித்திரம் விலகிவிடும். சுபிட்சம் வீட்டிற்குள் வர தொடங்கிவிடும். பிறகு குடும்பத்தில் நிம்மதியும் நல்லதும் மட்டுமே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.