- Advertisement -

அஷ்ட ஐஸ்வர்யம் பெற தாந்த்ரீக பரிகாரம்

- Advertisement -

மகாலட்சுமி தாயாருக்கு உகந்த கிழமையாக வெள்ளிக்கிழமை திகழ்கிறது. அந்த வெள்ளிக்கிழமையில் வரக்கூடிய சுக்கிர ஹோரையில் நாம் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும்பொழுது மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அதோடு மட்டுமல்லாமல் மகாலட்சுமி தாயாருக்கே உரித்தான வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய வரலட்சுமி விரத நாளன்று மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்பவர்களுக்கு வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

இப்படிப்பட்ட வெள்ளிக்கிழமையும் வரலட்சுமி விரதமும் சேர்ந்து வரக்கூடிய ஒரு அற்புதமான நாளாக தான் ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி திகழ்கிறது. மேலும் ஒரு சிறப்பு இந்த நாளில் வருகிறது. அதுதான் ஆடி பௌர்ணமி நாளும் சேர்ந்து வருகிறது என்பதால் இந்த நாளை நாம் தவறவிடாமல் பயன்படுத்துவதன் மூலம் அஷ்டலட்சுமிகளின் அருளையும் நம்மால் பெற முடியும். அப்படிப்பட்ட ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

அஷ்ட ஐஸ்வர்யம் பெற தாந்த்ரீக பரிகாரம்

இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள் சுக்கிர கோரை என்பது வரும். அந்த நேரத்தில் நாம் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது அனைத்து விதமாக செல்வ செழிப்பும் நம்மை வந்து சேரும் என்றே கூறலாம். மேலும் அந்த நேரத்தில் முழு நிலவு வானத்தில் பிரகாசமாக ஒளிரும் என்பதால் அந்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய இந்த பரிகாரத்தின் மூலம் நம்முடைய வாழ்க்கையும் பிரகாசமாகவே அமையும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு 8 ஒரு ரூபாய் நாணயங்கள் வேண்டும். இந்த ஒரு ரூபாய் நாணயங்களை பன்னீரில் கழுவி தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் ஒரு வெள்ளை நிற துணியை எடுத்து அதில் மஞ்சள் மற்றும் பன்னீரை கலந்து மஞ்சள் நிற துணியாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

சரியாக இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்ற வேண்டும். இயன்றவர்கள் 8 அகல் விளக்கில் நெய் தீபங்களை ஏற்றி மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக வைத்துவிட்டு இந்த பரிகாரத்தை செய்யலாம். இயலாதவர்கள் சாதாரணமாக வீட்டில் ஏற்றக்கூடிய தீபத்தை ஏற்றி வைத்தும் இந்த வழிபாட்டை செய்யலாம். கிழக்கு அல்லது வடக்கு அல்லது வடகிழக்கு இந்த மூன்று திசைகளில் ஏதாவது ஒரு திசையை பார்த்தவாறு ஒரு விரிப்பை விரித்து அமர்ந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

நாம் ஏற்கனவே சுத்தம் செய்து வைத்திருக்கும் ஒரு ரூபாய் நாணயங்களை நம்முடைய வலது கையில் வைத்துக்கொண்டு மகாலட்சுமி தாயாரின் இந்த ஒரு மந்திரத்தை 20 நிமிடம் நிறுத்தி நிதானத்துடன் கூற வேண்டும். இவ்வாறு கூறி முடித்த பிறகு அந்த ஒரு ரூபாய் நாணயங்களை தயார் செய்து வைத்திருக்கும் மஞ்சள் துணியில் மூட்டையாக கட்டி மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து வேண்டும். கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்த பிறகு அந்த மஞ்சள் நிற மூட்டையை சாம்பிராணி தூபத்தில் நன்றாக காட்டி அதை நம்முடைய வீட்டு பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். தொழில் செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அதை கல்லாப்பெட்டியில் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அஷ்டலட்சுமிகளின் அருளால் செல்வ செழிப்பு உயரும்.

மந்திரம்

“ஓம் ஸ்ரீம் மகாலஷ்மி ஏஹி ஏஹி சர்வ சௌபாக்கியம் மே தேஹி தேஹி ஸ்வாகா”

இதையும் படிக்கலாமே: கலசம் வைக்காமல் வரலட்சுமி நோன்பு இருக்கும் முறை

வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய இந்த அற்புதமான நாளில் பிரபஞ்ச பேராற்றல் எப்படி மேலோங்கி இருக்கிறதோ அதேபோல் நாம் செய்யக்கூடிய இந்த தாந்திரீக பரிகாரத்தின் மூலம் நம்முடைய செல்வ நிலையும் மேலோங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -