- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

அதிக அழகை கொடுக்கும் அதிமதுரம் அழகு குறிப்பு.

- Advertisement -

சீரம் என்றாலே கடைக்குப் போய் வாங்கினால் ஆயிரம் ரூபாய் செலவு செய்யாமல் நல்ல சீரம் நமக்கு கிடைக்காது. முகத்தில் இருக்கும் அடர்த்தியான கருப்பு நிறத்தை போக்குவதற்கு இப்படிப்பட்ட நிறைய சீரம் கடையில் கிடைக்கிறது. லேசாக ஆங்காங்கே கருப்பாக தொடங்கும் சருமம், ஒரு சில நாட்களில் ரொம்பவும் கருப்பாக மாறும்.

குறிப்பாக நெற்றி பகுதி, கண்ணம் பகுதி, கழுத்து பகுதிகளில் இப்படிப்பட்ட பிரச்சனை இருக்கும். உதாரணத்திற்கு ஹேர் கலர் செய்பவர்களுக்கு நெற்றியில் பிக்மென்டேஷன் வரும். 30 வயதை கடந்த பெண்களுக்கு கன்னத்தில் பிக்மேன்டேஷன் வரும். இந்த கருப்பு நிறத்தை குறைக்க இயற்கை கொடுத்த ஒரு அழகு குறிப்பு தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

- Advertisement -

சரி கடையில் அவ்வளவு காசு கொடுத்து வாங்கக்கூடிய சீரம் செய்யும் வேலையை, இவ்வளவு மலிவான சிரம் செய்யுமா. இதை நம்ப முடியவில்லை என்று சிலர் கேட்கலாம். அதற்கும் பதில் உண்டு. கடையில் தயாரிக்கப்படும் சீரம் எளிதில் கெட்டுப்போக கூடாது என்பதற்காக அதில் சில பொருட்களை கூடுதலாக சேர்க்கிறார்கள். அதற்காகவும் செலவையும் நம்மிடம் தான் வாங்குகிறார்கள்.

அப்படி இல்லாமல் நாமே நம்முடைய வீட்டில் இயற்கையான பொருட்களை வைத்து இப்படி சீரமை தயார் செய்து கொண்டால் அதற்காக ஆகும் செலவும் குறைவு. கெமிக்களும் நம்முடைய சருமத்தை பாதிக்க அடையாமல் வைக்கும். சரி, இப்போது அந்த அழகு குறிப்பு என்ன என்பதை பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

பிக்மென்ட்டேஷனை குறைக்க அழகு குறிப்பு

இந்த அழகு குறிப்புக்கு நமக்கு தேவையான பொருள் அதிமதுரம். இயற்கையாக கிடைக்கக்கூடிய ஒரு மரக்கட்டை, இது. எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். ஐம்பது ரூபாய்க்கு வாங்கினால் பல முறைக்கு மேல் இதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, இரண்டு இன்ச்சில் இருக்கும் அதிமதுர துண்டுகள் இரண்டை அந்த தண்ணீரில் போட்டு, கொதிக்க வையுங்கள்.

ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் மிதமான தீயில் அந்த தண்ணீர் கொதிக்கட்டும். கட்டையில் இருக்கும் சத்து அந்த தண்ணீரில் இறங்கி தண்ணீர் லேசாக பிரவுன் நிறத்திற்கு மாறிவரும். அப்போது அடுப்பை அணைத்து விடுங்கள். அந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கோங்க. இந்த அதிமதுர சத்து நிறைந்த தண்ணீருடன் அரிசி கழுவிய தண்ணீர், தேன் இந்த இரண்டு பொருட்களை சேர்த்து கலக்க வேண்டும்.

- Advertisement -

ஒரு டீ குடிக்கும் டம்ளர் அளவு அதிமதுர தண்ணீர் என்றால், அதில் 1/2 டம்ளர் அளவு அரிசி கழுவிய தண்ணீர், 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்தால் போதுமானது. இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் 7 நாட்கள் கெட்டுப் போகாது. இதை எப்போது வேண்டுமென்றாலும் எப்படி வேண்டும் என்றாலும் நீங்கள் முகத்தில் பயன்படுத்தலாம்.

முகத்தில் இந்த ஸ்பிரேவை அடித்துக்கொண்டு ஒரு மணி நேரம் கழித்து சாதாரண நீரில் முகத்தை கழுவிக்கொண்டால் போதும். இரவு தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை கழுவிட்டு இதை ஸ்ப்ரே செய்து கொள்ளலாம். டிவி பார்க்கும் போது முகத்தில் இதை ஸ்ப்ரே செய்து ஒரு மணி நேரம் கழித்து கழுவலாம்.

இரண்டு அல்லது மூன்று நாட்களில் உங்கள் முகத்தில் இருக்கும் அடர்த்தியான கருப்பு லைட்டாக குறைந்து இருப்பதை உங்களால் உணர முடியும். தினமும் இதை முகத்தில் ஸ்பிரே செய்து வர நிச்சயமாக அந்த அடர் கருப்பு என்று சொல்லப்படும் பிக்மென்ட்டேசன் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை காண்பீர்கள்.

மிக மிக எளிமையான முறையில் உங்களுடைய அழகை சீர்படுத்திக் கொள்ள நம் வீட்டிலேயே தயார் செய்யும் சீரம் தான் இது. எல்லா வயதினரும் இதை பயன்படுத்தலாம். எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. குறிப்பாக கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம், வாய் சுற்றி இருக்கும் கருவளையத்திலும் இதை அப்ளை செய்து கொள்ளுங்கள்.

அடுத்த ஒரு மணி நேரம் டிவி பார்க்க போறீங்க. டிவி முன்னாடி உட்கார்ந்துட்டீங்க இதை முகத்தில் ஸ்பிரே செஞ்சிக்கோங்க. 15 நிமிடம் கழித்து மீண்டும் இதை முகத்தில் ஸ்பிரே செய்துவிட்டு டிவி பாருங்க ஒரு மணி நேரம் கழித்து முகத்தை கழுவிடுங்க வேலை முடிந்தது.

இதையும் படிக்கலாமே: முகம் வெள்ளையாக இந்த சூப்பரான சீக்ரெட் தெரிஞ்சா இனி நீங்க பார்லர் பக்கம் போகவே மாட்டீங்க.

இந்த ஸ்பிரே முகத்தில் காய்ந்த பிறகு லேசாக இழுத்து பிடிக்கும் அதில் தேன் அரிசி கழுவிய தண்ணீர் இருப்பதால் அதனால் பயப்படாதீங்க. எவ்வளவு சிம்பிள் பாத்தீங்களா. பெஸ்ட் ரிசல்ட் மூன்று அல்லது நான்கு நாட்களில் கண்ணாடி முன்னாடி தெரியும். உங்களுக்கு தேவை என்றால் இதை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -