முகம் வெள்ளையாக இந்த சூப்பரான சீக்ரெட் தெரிஞ்சா இனி நீங்க பார்லர் பக்கம் போகவே மாட்டீங்க.

beauty lady face pack
- Advertisement -

இன்றைய நவீன காலத்தில் முகம் நிறமாக மாற நிறைய வழிமுறைகள் வந்து விட்டது. பெரும்பாலாலோர் இதற்கு பயன்படுத்தும் முறை அழகு நிலையம் சென்று தங்களை அழகுப்படுத்திக் கொள்வது தான். இதன் மூலம் நிறம் அதிகரித்து தெரிந்தாலும் இதனால் சிறிதளவு வேனும் பக்க விளைவுகள் வர வாய்ப்புகள் உண்டு.

இந்த அழகு குறிப்பு பதிவில் நாம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருளை வைத்து எளிமையான ஃபேஸ் மாஸ்க் எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ளலாம். இதற்கென அதிகமாக நாம் எதையும் வாங்க வேண்டியதும் இல்லை. அதே போல அதிகம் செலவழிக்க வேண்டியதும் இல்லை. வீட்டில் நாம் வீணாக தூக்கிப் போடும் வாழைப்பழ தோல் இருந்தால் போதும். அதை வைத்து இதை தயாரித்து விடலாம்.

- Advertisement -

முகத்தை நிறமாக வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்

இந்த பேக் தயாரிக்க நமக்கு சிறிதளவு வாழைப்பழத் தோல் வேண்டும். இதற்கு காய்ந்த பழத்தோலை எடுத்துக் கொள்ளாதீர்கள். புதிதாக பயன்படுத்திய வாழைப்பழத்தின் தோலை பயன்படுத்துங்கள். அடுத்து ஒரு டேபிள் ஸ்பூன் அளவு அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு சிறிய அடி கனமான கிண்ணத்தில் ஊற வைத்த அரிசியும் இந்த வாழைப்பழத் தோலை சின்ன சின்னதாக நறுக்கி சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி முக்கால் பாகம் வரை வேக வைத்து இறக்கி விடுங்கள். இதை அப்படியே நன்றாக ஆற விட வேண்டும். அதன் பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஃபைன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

முகத்திற்கு தேவையான ஃபேஸ் மாஸ்க் தயாராகி விட்டது. இத்துடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளுங்கள். இந்த பேக்கை முகத்தை நன்றாக துடைத்து பிறகு முகம் முழுவதும் தேய்த்து 20 நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு இதை எடுத்து விடுங்கள். இந்த பேக்கை எடுக்க தண்ணீர் எதுவும் பயன்படுத்தாமல் வெறும் கைகளாலே எடுத்தீர்களென்றால் மெல்லிய தோல் போல உறிந்து வரும்.

இந்த ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்துவதனால் முகம் வெள்ளையாக மாறுவதுடன், இது முகச்சுருக்கத்தை தடுக்கும். இளவயதிலே வரும் வயதான தோற்றத்தை முற்றிலுமாக தடுத்து விடும். அது மட்டும் இன்றி முகப்பரு, முகத்தில் இருக்கும் சின்ன சின்ன குட்டி முடிகள் எல்லாம் நீங்கள் இந்த பேக்கை எடுக்கும் போது அத்துடனே வந்து விடும்.

இதையும் படிக்கலாமே: வயதான தோற்றத்தை மாற்றுவதற்கு இந்த ஒரு பூ உங்களிடம் இருந்தால் போதும்.

இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்தில் மூன்று முறை தொடர்ந்து போட்டுப் பாருங்கள். அடுத்த வாரம் உங்கள் முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும். நீங்கள் பார்லர் செல்லவில்லை என்று சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு அழகு மெருகேறி தெரியும். இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -