- Advertisement -

எதிர்காலம் சிறப்பாக அமைய வழிபாடு

- Advertisement -

இன்றைய பொழுது என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாது. நாளைய பொழுதும் என்ன நடக்கும் என்று தெரியாது. எப்படி இருப்போம்? எந்த சூழ்நிலையில் இருப்போம்? நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீருமா? மகிழ்ச்சியான நிலையில் இருப்போமா அல்லது கஷ்டப்பட்டுக் கொண்டிருப்போமா என்று எதிர்காலத்தை நினைத்து பல விதங்களில் யோசனை செய்பவர்கள் தான் நாம் அனைவரும். அதனால் தான் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்பொழுதே கஷ்டப்பட்டு உழைத்து பணத்தை சேகரித்து வைக்க வேண்டும் என்று பலரும் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட எதிர்காலம் தொடர்பான அனைத்து விதமான பயங்களும் நீங்குவதற்கு செய்ய வேண்டிய ஒரு நரசிம்மர் வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எதிர்காலம் சிறப்பாக அமைய வழிபாடு

பொதுவாகவே நரசிம்மரை நாம் வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு இருக்கக்கூடிய எதிரிகளின் தொல்லை நீங்கும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் மன பயம் நீங்கும் என்றும் கூறப்படுகிறது. முழு மனதோடு ஆத்மார்த்தமாக அவரை நினைத்து நாம் செய்யக்கூடிய வழிபாட்டால் நமக்கு இந்த பலன்கள் அனைத்தும் கிடைக்கும். இதில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழக்கூடியது தான் கடன் பிரச்சனை. இந்த கடன் பிரச்சினையும் தீர்ப்பதற்கு நரசிம்மரின் அருள் நமக்கு பரிபூரணமாக வேண்டும். இவை அனைத்தையும் பெறுவதோடு நம்முடைய எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கும் செய்ய வேண்டிய ஒரு மந்திர வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

இன்று ஜனவரி மாதம் 22 ஆம் தேதி சுவாதி நட்சத்திரம் வருகிறது. இன்றைய நாளில் நாம் இன்று இரவுக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஒரு மந்திரத்தை ஒருமுறை மட்டும் கூறி நரசிம்மரை முழுமனதோடு வழிபாடு செய்தோம் என்றால் நரசிம்மரின் அருளால் நம்முடைய பல பிரச்சினைகள் தீரும். இந்த மந்திர வழிபாட்டை செய்வதற்கு முன்பாக வீட்டு பூஜை அறையில் ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி தாமரைக்கண்டு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.

இந்த தீபத்திற்கு முன்பாக பானகத்தை தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த தீபத்தில் நரசிம்மர் இருப்பது போல் உருவகப்படுத்திக் கொண்டு பின்வரும் இந்த மந்திரத்தை ஒரு முறையோ மூன்று முறையோ அல்லது 11 முறையோ கூறலாம். தங்களுடைய நேரத்தை பொறுத்து எத்தனை முறை வேண்டுமானாலும் கூறலாம். முழுமனதோடு நரசிம்மர் அங்கு வீற்றிருக்கிறார் என்பதை மனதார உணர்ந்து கூற வேண்டும் என்பதுதான் முக்கியம். இப்படி கூறி முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு அந்த பானகத்தை வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் பிரசாதமாக அருந்த வேண்டும்.

- Advertisement -

ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சுவாதி நட்சத்திர நாளன்று இந்த மந்திரத்தை கூறி நரசிம்மரை வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பவர்களுக்கு அவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமையும். கண்ணுக்கு தெரிந்த தெரியாத அனைத்து விதமான எதிரிகளின் தொல்லையும் நீங்கும். பிரச்சினைகள் விலகி ஓடும். மன பயம் முற்றிலும் நீங்கி எந்த பிரச்சினை வந்தாலும் அதை தைரியத்துடன் சமாளிக்கும் தன்னம்பிக்கை உருவாகும்.

மந்திரம்

ஓம் நரசிம்ஹாய வித்மஹே !!!
வஜ்ர நகாய தீமஹி !!!
தந்நோ ஸிம்ஹ ப்ரசோதயாத் !!!

இதையும் படிக்கலாமே:சொந்த வீடு வாங்க தை வெள்ளி மகாலட்சுமி வழிபாடு
முழுமனதோடு நரசிம்மரை நம்பி நரசிம்மருடைய இந்த மந்திரத்தை ஒரு முறையாவது இன்று இரவுக்குள் கூறுபவர்களுடைய வாழ்க்கையில் பல அற்புதங்கள் நிகழும். அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -