- Advertisement -
ஜாதகம் பார்பது எப்படி

உங்கள் ஜாதகத்தில் புதன் இங்கு இருந்தால் யோகம் தான் தெரியுமா ?

மிருகங்களைவிட உடல் பலம் குறைவாக இருந்தாலும் மனிதனின் அறிவாற்றல் இந்த உலகத்தையே வெல்லக்கூடிய ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாகும். இன்று நாம் காணும் இந்த உலகம் அந்த மனிதனின் அறிவாற்றலினால் உருவானது தான். ஜோதிட சாத்திரத்தின் படி ஒரு மனிதனின் அறிவாற்றலை கட்டுப்படுத்துபவர் “புதன்” பகவானாவார். அந்த “அறிவுகாரகனாகிய” புதன் பகவானால் ஏற்படும் “பத்ர யோகத்தை” பற்றி இங்கு காண்போம்.

ஒருவரின் ஜாதகத்தில் புதன் பகவான் அவரது சொந்த ராசியான “மிதுன” ராசியிலோ அல்லது உச்சராசியான “கன்னி” ராசியிலோ இருக்கவேண்டும். அதோடு புத பகவான் கேந்திர ஸ்தானத்தில் இருக்க வேண்டும். அப்படி அமைந்தால் அந்த ஜாதகருக்கு “பத்ர யோகம்” ஏற்படுகிறது. இதற்கான தெளிவிற்கான விளக்கத்தை கீழே உள்ள படங்கள் மூலம் காணலாம்.

- Advertisement -
புதன் மிதுன ராசியில் இருக்கிறார்
புதன் கன்னி ராசியில் இருக்கிறார்

பத்ர யோகம் பலன்கள்:

இந்த ஜாதகர் பிறவியிலிருந்தே சிறந்த அறிவாற்றல் மிகுந்தவராக இருப்பார். எல்லாவிதமான கலைகளிலும் ஆர்வமும் அதை எப்பாடுபட்டேனும் கற்று கொள்வதற்கும் முயற்சிப்பார். கணிதத்தில் சிறந்து விளங்குவார்கள். மூளையின் திறனை அதிகம் பயன்படுத்தும் சதுரங்க விளையாட்டு, கணிப்பொறி சம்பந்தமான துறைகளில் பெரும் சாதனைகள் புரிவர். அந்த புத பகவானின் முழுஅருள் இருப்பதால் இவர்களில் ஒரு சிலர் சிறந்த எழுத்தாளர்களாகவும், பேச்சாளர்களாகவும் புகழ் பெறுவார்கள்.

- Advertisement -

சிலர் பள்ளி கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்களாகவும், பேராசிரியர்களாகவும் பதவி வகிப்பர். பொருட்களை விற்பனை செய்யும் தொழில்களில் பெரும் செல்வத்தை ஈட்டுவார்கள்.மேலும் ஒரே நேரத்தில் பல விதமான தொழில்களை துவங்கி அதன் மூலம் பெருமளவு பணம் ஈட்டும் திறனை இந்த யோகம் ஏற்படுத்தும். நல்ல மகிழ்ச்சிகரமான இல்லற வாழ்வு அமையும்.

ஆண் பெண் இருவருக்கு திருமண பொருத்தம் எத்தனை உள்ளது என்பதை அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்

English Overview:
Here we described about badra yogam and its benefits in Tamil. This yogam is mainly based on the position of budhan on horoscope.

- Advertisement -