
இன்றைய தினம் 5.4.2025 சனிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் வளர்பிறை அஷ்டமி திதி. இந்த நாளில் பைரவர் வழிபாடு செய்தால் நம்முடைய வீட்டில் இருக்கும் தரித்திரம் விலகும். செல்வ வளம் உயர்ந்து கொண்டே செல்லும். இன்று, சனிக்கிழமையோடு சேர்ந்து இந்த அஷ்டமி திதி வந்திருப்பது இரட்டிப்பு சிறப்பு.
சனி பகவானால் நமக்கு வரும் துன்பங்கள் விலகவும், இன்றைய தினம் பைரவர் வழிபாட்டை மேற்கொள்ளலாம். இன்றைய தினம் முழுவதும் அஷ்டமி திதி இருப்பதால், நேரம் கிடைக்கும் போது இந்த பரிகாரத்தை செய்யவும். இன்று மாலை வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் ஆலயத்திற்கு சென்று, பைரவர் சன்னிதானத்தில் 2 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, வழிபாடு செய்வது சிறப்பான பலனை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளர் சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சமாக விபூதி, சந்தனம், குங்குமம், மஞ்சள் போட்டுக் கொள்ளவும். ஒரு வில்வ இலை கிடைத்தால் இன்னும் சிறப்பு. ஒரே ஒரு வில்வ இலையை அந்த தீர்த்தத்தில் பைரவரின் அருள் முழுமையாக தீர்த்தத்துக்கு கிடைத்துவிடும்.
இந்த தீர்த்தத்தை பூஜை அறையில் வைத்து விட்டு, பைரவரை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் தரித்திரம் விலக வேண்டும் வீட்டிற்குள் மகாலட்சுமி கடாட்சம் வரவேண்டும், அஷ்ட ஐஸ்வர்யங்களும் வீட்டில் இருப்பவர்களுக்கு நிறைவாக கிடைக்க வேண்டும் என்று, மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
பிறகு இந்த தீர்த்த பாத்திரத்தை அப்படியே உங்களுடைய கையில் வைத்துக் கொள்ளுங்கள். “ஓம் உன்மத்த பைரவாய நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். பிறகு பைரவருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, இந்த தீர்த்தத்தை கொண்டு போய் வீட்டில் இருக்கும் மூளை முடுக்குகளில் தெளிக்க வேண்டும். தீர்த்தத்தை லேசாக தெளித்தால் போதும். தீர்த்தத்தை தெளிக்கும் போதும் இந்த மந்திரத்தை வாய்விட்டு உச்சரிக்கலாம்.
இந்த மந்திரம் உங்கள் வீடு முழுவதும் ஒலிக்கட்டும். வீட்டில் இருக்கும் தரித்திரம் பீடை கடன் கஷ்டம் அனைத்தும் வெளியேறிவிடும். உங்களுடைய வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் நிறைவாக குடியேறும். வீடு முழுவதும் இந்த தீத்தத்தை தெளித்து விட்டு, வீட்டில் இருப்பவர்கள் தலைமேலும் இந்த தீர்த்தத்தை கொஞ்சமாக தெளித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: செல்வ வளம் அதிகரிக்க பங்குனி வளர்பிறை அஷ்டமி பரிகாரம்
வெற்றிலை, மா இலை, அருகம்புல், வில்வ இலையால் கூட இந்த தீர்த்தத்தை எடுத்து வீட்டில் மூளை முடுக்குகளில் தெளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அற்புதம் வாய்ந்த சக்தி வாய்ந்த இந்த வழிபாடு உங்களுடைய கஷ்டத்திற்கு நல்லதொரு வழியை உடனடியாக காட்டித் தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.