- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ வளம் அதிகரிக்க பங்குனி வளர்பிறை அஷ்டமி பரிகாரம்

செல்வ வளம் அதிகரிக்க பங்குனி வளர்பிறை அஷ்டமி பரிகாரம்

- Advertisement -

பங்குனி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை அஷ்டமி என்பது ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது. அதனால் அன்றைய தினத்தை சனி மகா அஷ்டமி என்று கூறுவது உண்டு. சனிக்கிழமை என்பது சனீஸ்வர பகவானுக்கு உகந்த கிழமை என்று நம் அனைவருக்கும் தெரியும். சனிபகவானுடைய குருவாக திகழக்கூடியவர்தான் கால பைரவர் என்பதால் அன்றைய தினத்தில் நாம் காலபைரவரை வழிபாடு செய்ய சனி பகவானால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீருவதோடு செல்வ வளமும் அதிகரிக்கும் என்று கூறலாம். அப்படிப்பட்ட நாளில் நாம் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பங்குனி வளர்பிறை அஷ்டமி பரிகாரம்

அஷ்டலட்சுமிகளுக்கு செல்வத்தை வாரி வழங்குபவர் தான் கால பைரவர் என்றும் ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை அஷ்டமி நாளில் தான் அஷ்டலட்சுமிகளும் காலபைரவரிடம் இருந்து செல்வத்தை பெறுவார்கள் என்றும் அன்றைய நாளில் நாம் கால பைரவரை வழிபாடு செய்தோம் என்றால் செல்வ வளத்திற்கு எந்த வித குறையும் இருக்காது என்றும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த வளர்பிறை அஷ்டமி நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு சிறிய பரிகாரம் நம்முடைய செல்வ வளத்தை மேலும் அதிகரிக்கும் என்றே கூறலாம்.

- Advertisement -

ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி சனிக்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய காலபைரவரின் சன்னதிக்கு சென்று அவருக்கு ஐந்து அகல் விளக்குகளில் ஐந்து விதமான எண்ணெய்களை ஊற்றி வழிபாடு செய்ய வேண்டும். அந்த எண்ணெய்களை ஒன்றாக கலக்கக்கூடாது தனித்தனி அகல் விளக்கில் தனித்தனியாக எண்ணெயை ஊற்றி தான் தீபம் ஏற்ற வேண்டும். அந்த எண்ணெய்கள் தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய். இப்படி நாம் தீபம் ஏற்றி வைத்துவிட்டு காலபைரவரை முழுமனதோடு செல்வ வளம் அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுதலை மட்டும் முன்வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

இந்த வழிபாட்டோடு சேர்த்து இன்னும் ஒரு பரிகாரத்தை நாம் செய்ய நம்முடைய வழிபாட்டிற்குரிய பலனை அதிக அளவு பெற முடியும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு பட்டை தூள் வேண்டும். புதிதாக பட்டையை வாங்கி வந்து பொடி செய்து கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை மாலை 6:00 மணிக்கு மேல் தான் செய்ய வேண்டும். அதுவும் கஜலட்சுமி குடியிருக்க கூடிய நம்முடைய நிலை வாசலில் தான் இந்த பரிகாரத்தை நாம் செய்ய வேண்டும்.

- Advertisement -

முதலில் நிலை வாசலை பன்னீர் மற்றும் ஜவ்வாது கலந்த தண்ணீரில் சுத்தமாக துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள் பிறகு பச்சை கற்பூரம் கலந்த மஞ்சள் தூளை பயன்படுத்தி நிலைவாசலுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து மலர்களை வைத்துக் கொள்ளுங்கள். பிறகு பட்டை தூளை நம்முடைய உள்ளங்கையில் வைத்துக்கொண்டு நம்முடைய குலதெய்வம், இஷ்ட தெய்வம், காலபைரவர், மகாலட்சுமி போன்ற அனைத்து தெய்வங்களும் நம்முடைய வீட்டிற்குள் வரவேண்டும் என்று அவர்களின் பெயர்களை கூறி வருக வருக என்று கூறிக் கொண்டே பட்டை தூளை வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு உள்புறமாக ஒரு ஓரமாக தூங்கி விடுங்கள்.

இந்த பட்டை தூள் இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலையில் துணியை பயன்படுத்தி அந்த பட்டை தூளை எடுத்து கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இப்படி வளர்பிறை அஷ்டமி நாளன்று நாம் செய்யக்கூடிய இந்த ஒரு எளிமையான பரிகாரம் அனைத்து தெய்வங்களையும் நம் வீட்டிற்கு வரவழைத்து செல்வ வளத்தையும் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே:கடன் தீர்க்கும் விநாயகர் மந்திரம் வழிபாடு
மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தையும் கால பைரவர் வழிபாட்டையும் வளர்பிறை அஷ்டமி நாளன்று செய்பவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் வளர்ந்து கொண்டே இருக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்