- Advertisement -
பொது பலன்

கட்டை விரலில் மோதிரம் அணிவது நல்லதா ? கெட்டதா ?

இந்த காலத்தில் பல இளைஞர்கள் கட்டை விரலில் மோதிரம் அணிவதை ஒரு ஸ்டைலாக கருதுகின்றனர். இப்படி மோதிரம் அணிவதனால் நமக்கேதும் நன்மைகள் உண்டா ? இல்லை இதனால் விபரீத விளைவுகள் ஏதாவது நடக்குமா ? வாருங்கள் பார்ப்போம்.

மோதிரத்தை அணிவதற்கான சிறந்த விரல் மோதிர விரலே. இதில் மோதிரம் அணிவதன் மூலம் நம்மை அறியாமல் நமக்குள் ஒரு ஆளுமை தன்மை பிறக்கும். மோதிர விரலின் சக்தி குறித்து யோகத்தில் முழுமையான அறிவியலே இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால் கட்டை விரலில் மோதிரம் அணிவதென்பது இதற்கு நீர் எதிரானது.

- Advertisement -

கட்டை விரலில் மோதிரம் அணிபவர்கள் எளிதில் தீய சக்திகளின் ஆதிக்கத்தில் அகப்பட்டுவிடுவார்கள். தீய சக்திகளை தன்னுள் ஈர்ப்பதற்கான ஒரு குறியீடே கட்டை விரல் மோதிரம்.

இவாறு மோதிரம் அணிபவர்கள் படிப்படியாக தன் நிலையில் இருந்து மாறுபடுவர். அதோடு வேறொருவரின் கட்டுப்பாட்டிற்குள் எளிதில் சென்றுவிடுவார். இவர்களின் மனம் நல்லதையே செய்ய நினைத்தாலும் அவர்களின் புத்தி அதை செய்ய விடாது.

ஒருவர் தன் கட்டை விரலில், தங்கம், வெள்ளி, செம்பு என எந்த விதமான உலோகத்தையும் அணியாமல் இருப்பதே சிறந்தது. உங்களுக்கு திறந்தவர்கள் யாரேனும் கட்டை விரலில் மோதிரம் அணிந்திருந்தால் அதை உடனே கழட்ட சொல்லுங்கள். நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல, அவர்கள் எந்த விரலில் எதை செய்யலாம் என்று நமக்கு தெளிவாக கூறியுள்ளனர். அதன் படி நடப்பது நமக்கு நல்லது.

- Advertisement -