- Advertisement -
சமையல் குறிப்புகள்

உடலுக்கு பலம் தரும் சுவையான கேரட் அல்வா செய்யும் முறை

அல்வா என்றாலே நாம் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது திருநெல்வேலி அல்வா. ஆனால், அதனை செய்வதை விட மிக சுலபமாக நம் வீட்டில் இருக்கும் ஒரு பொருளை வைத்து செய்யும் அல்வா வகைதான் கேரட் அல்வா. இந்த பதிவில் கேரட் அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

கேரட் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

கேரட் – 1/4 கிலோ
பால் – 1/4 லிட்டர்
சக்கரை – 150 கிராம்
முந்திரி – 5
நெய் – 5 டீஸ்பூன்
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
ஏலக்காய்பொடி – 1/2 டீஸ்பூன்

கேரட் அல்வா செய்முறை:

கடாய் நன்றாக சூடேறிய பின் அதில் வெண்ணெய் போட்டு உருக்கி கொள்ளவேண்டும். பிறகு துருவிய கேரட்டை அதில் போட்டு 10 நிமிடங்கள் வரை நன்றாக வதக்கவும். பிறகு அதில் பாலை ஊற்றி நன்றாக வேகவிடவும். 20 நிமிடங்கள் வரை அதனை நன்றாக கொதிக்க விடவும்.

- Advertisement -

பிறகு அது சுண்டியவுடன் சக்கரை போட்டு நன்றாக கிளறவும். பிறகு நெய் விட்டு மீண்டும் நன்றாக வதக்கவும். கடைசியாக ஏலக்காய் போடி தூவி நன்றாக கிளறவும். பிறகு ஒரு தாளிக்கும் கரண்டி எடுத்து அதில் நெய் ஊற்றி அதில் முந்திரி போட்டு வறுக்கவும்.

வறுத்த முந்திரியை ஏற்கவனவே நாம் தயார் செய்துள்ள கேரட் அல்வாவின் மீது கொட்டி கிளறி தட்டில் எடுத்தால் சுவையான கேரட் அல்வா தயார்.

- Advertisement -

சமைக்க ஆகும் நேரம் – 30 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 2

இதையும் படிக்கலாமே:
மைசூர் பருப்பு சாம்பார் செய்யும் முறை

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Carrot halwa recipe in Tamil. It is also called as Carrot halwa seimurai or Carrot halwa seivathu eppadi in Tamil or Carrot halwa preparation in Tamil.

- Advertisement -