
திருமணம் நடைபெற வேண்டும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும், குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும், விரும்பிய வேலை அமைய வேண்டும், சொந்தமாக வீடு வாங்க வேண்டும், கடன் பிரச்சனை தீர வேண்டும், நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்று பலருக்கும் பலவிதமான வேண்டுதல்கள் இருக்கும். இந்த வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் அந்த வழிமுறைகளை பின்பற்றுவதோடு தெய்வ வழிபாட்டையும் நாம் மேற்கொள்ளும் பொழுது அந்த வேண்டுதல்களில் எந்தவித தடைகளும் இல்லாமல் நடைபெறும். அப்படி வேண்டுதல் நிறைவேறுவதற்கு எந்த ஆலயத்திற்கு சென்று எப்படி வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
எந்த தெய்வத்தை நாம் வேண்டினாலும் முழு மனதோடு வேண்டினால் தான் அந்த வேண்டுதலுக்குரிய பலன் நமக்கு கிடைக்கும். மேலும் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறைகள் இருக்கும். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு ஆலயத்திலும் சிறப்புகள் மிகுந்து இருக்கும். அப்படி ஒரு சிறப்பு மிகுந்த ஆலயத்தை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
திருச்சி அருகே உறையூர் என்ற ஊர் இருக்கிறது. அந்த ஊரில் வெக்காளியம்மன் கோவில் இருக்கிறது. இந்த அம்மனுக்கு இருக்கக்கூடிய தனி சிறப்பு என்னவென்றால் இந்த அம்மனுக்கு மேலே கூரை கிடையாது. எவ்வளவு மழை பெய்தாலும் எவ்வளவு வெயில் அடித்தாலும் இந்த அம்மனின் மீது மழையும் வெயிலும் விழுந்து கொண்டுதான் இருக்கும். எத்தனையோ நபர்கள் மேற்கூரை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டும் அதில் தடைகள் ஏற்பட்டு இன்றளவும் மேல் கூரை கட்டக்கூடாது என்று அம்மனின் உத்தரவால் மேல்கூரை இல்லாமலேயே அந்த அம்மன் வீற்றிருக்கிறார்.
அந்த கோவிலுக்கு சென்றால் அங்கு வேண்டுதல் சீட்டு என்று மஞ்சள் நிறத்தில் ஒரு பேப்பரை தருவார்கள் அதில் நம்முடைய வேண்டுதல் என்னவோ ஒரு வேண்டுதலை மட்டும் நாம் எழுதி அங்கு இருக்கக்கூடிய மரத்தில் கட்டி விட வேண்டும். பிறகு அம்மனுக்கு தங்களின் பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். அங்கு இதோடு மட்டுமல்லாமல் அம்மனுக்கு புடவை வாங்கி சாற்றுவதோ அல்லது அம்மன் சாற்றிய புடவையை வீட்டிற்கு வாங்கி வந்து வைப்பது மிகவும் சிறப்பாக திகழ்கிறது.
வேண்டுதல் நிறைவேறிவிட்டால் அம்மனுக்கு புடவை வாங்கி சாற்ற வேண்டும். முக்கியமான குறிப்பு இந்த வேண்டுதல் ஆனது நம்முடைய வாழ்க்கையை முன்னேற்றுவதற்கும் பிறருக்கு எந்த தீங்கும் விளைவிக்காத ஒன்றாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த வேண்டுதல் பலிக்கும். முழு நம்பிக்கையுடன் அம்மனை சரணாகதி அடைந்து அம்மனுக்கு புடவை வாங்கிக் கொடுத்து இப்படி வேண்டுதல் வைத்து வர நம்முடைய வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும்.
இதையும் படிக்கலாமே: செவ்வாய் பகவானால் ஏற்பட்ட தோஷம் நீங்க பரிகாரம்
மிகவும் எளிமையான தெய்வத்தின் மீது முழு நம்பிக்கை வைப்பவர்கள் இந்த ஆலயத்திற்கு சென்று அம்மனை வழிபட்டு தங்களின் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம்