- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெவ்வாய் பகவானால் ஏற்பட்ட தோஷம் நீங்க பரிகாரம்

செவ்வாய் பகவானால் ஏற்பட்ட தோஷம் நீங்க பரிகாரம்

- Advertisement -

செவ்வாய் பகவானை மங்கள காரகன் என்று கூறுவோம். செவ்வாய்க் கிழமையில் நாம் செய்யும் செயல்கள் நம்மை விட்டு நீங்காது, நம்முடனை எப்பொழுதும் நிலைத்து இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட மங்கள கார்கள் நம்முடைய ஜாதகத்தில் நல்ல விதத்தில் இருந்தால் வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம் விரைவிலேயே கைகூடும். இதே அவரால் நமக்கு பாதிப்புகள் ஏற்பட்டால் திருமண தடை ஏற்படுவதோடு சொந்த வீடோ, இடமோ வாங்கும் சூழ்நிலை ஏற்படாது. இதோடு மட்டுமல்லாமல் தேவையற்ற விபத்துகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். இந்த தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கு மண்பானையை வைத்து எப்படி பரிகாரம் செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செவ்வாய் தோஷம் நீங்க

ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தாலும், செவ்வாய் பகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அல்லது அவருடன் வேறு ஏதாவது கிரகம் சேர்ந்து அதனால் நமக்கு பிரச்சினை ஏற்பட்டாலும் இந்த பரிகாரத்தை நாம் செய்யலாம். இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அதுவும் செவ்வாய் ஹோரையில் தான் செய்ய வேண்டும். செவ்வாய் ஹோரை என்பது காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளும், மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள்ளும், இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ளும் வரும்.

- Advertisement -

இந்த மூன்று நேரங்களில் எந்த நேரம் உங்களுக்கு வசதியான நேரமோ அந்த நேரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். புதிதாக ஒரு மண் பானையை வாங்கிக் கொள்ளுங்கள். மண் என்பது செவ்வாய் பகவான் என்பதால் நாம் மண்பானையில் கலசம் வைத்து வழிபடும் பொழுது செவ்வாய் பகவானை வழிபடுவதற்குரிய பலன் நமக்கு கிடைக்கும். ஒரு மண்பானையை எடுத்து அதற்குள் தண்ணீர் ஊற்றி சிறிது பச்சை கற்பூரத்தையும் போட வேண்டும்.

பிறகு அதற்கு மேல் வாழைப்பூவை வைக்க வேண்டும். பொதுவாக கலசத்தில் தேங்காய் வைப்போம். தேங்காய்க்கு பதிலாக இதில் நாம் வாழைப்பூவை வைக்க வேண்டும். பிறகு செவ்வரளி மலர்களால் “ஓம் ஹரி ஓம்” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை முடிவு செய்து விட வேண்டும். அன்றைய தினம் அது அப்படியே இருக்கட்டும். மறுநாள் அந்த வாழைப்பூவை மட்டும் தனியாக எடுத்து வைத்து தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள்.

- Advertisement -

இப்படி தொடர்ந்து ஏழு வாரங்கள் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய வேண்டும். முதல் வாரம் எந்த நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்தோமோ அதே நேரத்தில் தான் ஏழு வாரங்களும் செய்ய வேண்டும். ஏழு வாரங்களும் வாழைப்பூவே தனியாக சேகரித்து வைத்துக் கொண்டே வரவேண்டும். ஏழு வாரங்கள் முடிந்த பிறகு இந்த ஏழு வாழைப் பூக்களையும் எடுத்துக்கொண்டு போய் ஓடுகின்ற நீரில் போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் செவ்வாய் தோஷத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் நீங்கி நாம் என்ன வேண்டுதல் வைத்தோமோ அந்த வேண்டுதல் நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே: கடன் சுமை நீங்க வழிபாடு

நம் வாழ்க்கைக்கு மங்களங்களை தரக் கூடிய மங்களகரமான செவ்வாய் பகவானின் அருளை பெறுவதற்கும் அவரால் ஏற்பட்ட தோஷத்தில் இருந்து நீங்குவதற்கும் இந்த எளிமையான பரிகாரத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் செய்து பலன் அடையலாம்.

சற்று முன்