- Advertisement -
பொது பலன்

ஜோதிடம் : 12 லக்னத்திற்கு சந்திர தசை தரும் பலன்கள் இதோ

ஒரு மனிதனை நவகிரகங்கள் ஆள்கின்றன என்பது ஜோதிட சாஸ்திரத்தின் கணக்கு ஆகும். மனிதனின் முழுமையான ஆயுள்காலத்தில் ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட வருட காலம் அம்மனிதனின் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் காலம் கிரக திசை காலம் என கூறப்படுகிறது. இங்கு சந்திர திசை காலம் பற்றியும்,அந்த சந்திர திசை காலத்தில் அனைத்து லக்னத்திற்கும் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் சந்திரன் பகவான் ஆவார். சந்திர பகவான் மனோகாரகன் என்று அழைக்கப்படுவார். தண்ணீர் சார்ந்த நோய்கள், பயணங்கள், சுவை, உணவு, கற்பனைத் திறன், தெய்வீக பணி போன்றவைகளுக்கும் காரகன் ஆவார். ஒருவரின் ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் சுப பலன்களையும், தேய்பிறை சந்திரன் பாதக பலன்களையும் தருகிறது. ஒருவருக்கு சந்திர திசையானது சுமார் 10 வருடம் நடக்கும். இந்த 10 பத்து வருட காலங்களில் 12 லக்னங்களுக்கும் சந்திரன் தரும் பலன்களை இங்கு காண்போம்.

- Advertisement -

சந்திர பகவானின் திசையானது சில லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலப் பலனை அதிகம் தரும். குறிப்பாக சந்திரனுக்கு நட்பு கிரகம் என வர்ணிக்கப்படும் செவ்வாயின் லக்னமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு 4ம் அதிபதி என்பதால் அனுகூலமான பலன்களை தருவார். ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு 3ம் அதிபதி என்பதால் ஜாதகத்தில் சந்திரன் அமையும் இடத்தைப் பொருத்து சாதக பலனை உண்டாக்குவார்.

சந்திரன் பொதுவாக ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு நற்பலன்களை தருவது இல்லை. மிதுனத்திற்கு 2 ம் அதிபதி என்பதால் ஓரளவுக்கு சாதகப் பலனை தருவார். கடக லக்னத்திற்கு சந்திரன் லக்னாதிபதி என்பதால் கடக ராசிக்கு சந்திர திசை மிகவும் சாதகமான பலனை உண்டாகும். சிம்ம லக்னத்திற்கு சந்திரன் 12ம் அதிபதி என்றாலும் அவர் லக்னாதிபதி சூரியனுக்கு நட்பு கிரகம் என்பதால் ஓரளவுக்கு நற்பலனை சந்திரன் திசை காலத்தில் பெறலாம்.

- Advertisement -

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லாபாதிபதி சந்திரன் என்பதால் சந்திர திசை சாதகமான பலன்களை கன்னி ராசியினருக்கு அதிகம் தரும். துலா லக்னத்திற்கு 10ம் அதிபதியாக சந்திரன் வருவதால் சந்திர திசை நடைபெறும் போது தொழில், வியாபாரங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.விருச்சிக லக்னத்திற்கு சந்திரன் பாதகாதிபதி என்பதால் அனுகூலப்பலனை தரமாட்டார்.

தனுசு லக்னத்திற்கு 8ம் அதிபதி சந்திரன் என்பதால் ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே நற்பலன்களை தருவார். மகர லக்னத்திற்கு சந்திரன் 7ம் அதிபதி என்பதால் வாழ்வில் சற்று ஏற்றத் தாழ்வினை ஏற்படுத்துவார். கும்ப லக்னத்திற்கு சந்திரன் 6ம் அதிபதி என்பதால் சந்திர திசை நடைபெறும் போது உங்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும். மீன லக்னத்திற்கு சந்திரன் 5ம் அதிபதி என்பதால் சந்திர திசை நடைபெறும் காலத்தில் மிகவும் சாதகமான பலன்கள் உண்டாகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
12 ராசியினருக்கான பைரவர் வழிபாடு

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Chandra dasa palangal in Tamil. It is also called as Tamil jothidam chandran or Jathagam chandran palan in Tamil or Chandra thisai in Tamil or Chandra graha palangal in Tamil.

- Advertisement -