12 ராசியினரும் பைரவர் வழிபாடு செய்ய வேண்டிய முறை

12-rasi-bairavar

ஒருவரின் வாழ்வில் ஏற்படும் எப்படிப்பட்ட கஷ்டங்களும் தீர அஷ்டமி தினங்களில் சிவனின் அம்சமாக இருப்பவரான பைரவர் மூர்த்தியை வணங்குவதால் அவை அனைத்தும் விரைவில் தீரும். அப்படி பைரவர் வழிபாடு செய்யும் போது 12 ராசியினர் எவ்வாறு வழிபட்டால் பைரவரின் அருளை பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:

Mesham Rasi

எடுத்த முடிவுகளிலிலிருந்து எளிதில் பின்வாங்காத மேஷ ராசிக்காரர்கள் தங்களின் ஜாதகத்தில் இருக்கும் கிரக தோஷங்கள் நீங்க அஷ்டமி தினங்களில் பைரவரை வணங்கும் போது அவரின் சிரசு எனப்படும் தலை பகுதியை பார்த்தவாறு வணங்குவதால் அத்தனை தோஷங்களும் நீங்க பெறுவார்கள்.

ரிஷபம்:

Rishabam Rasi

- Advertisement -

பிறரிடம் தாங்கள் விரும்பிய காரியங்களை சாதித்து கொள்ளும் ரிஷப ராசியினர் தங்களின் ஜாதகத்தில் இருக்கும் கிரக தோஷங்கள் நீங்க அஷ்டமி தினங்களில் பைரவரை வணங்கும் போது பைரவ மூர்த்தியின் கழுத்து பகுதியை பார்த்தவாறு வணங்குவதால் தோஷங்கள் நீங்க பெறுவார்கள்.

மிதுனம்:

midhunam

சிறந்த சமயோசித புத்தி கொண்ட கொண்ட மிதுனம் ராசிக்காரர்கள் வாழ்வில் வளம் பெறவும், தங்களின் ஜாதகத்தில் இருக்கும் கிரக தோஷங்கள் நீங்க அஷ்டமி தினங்களில் பைரவரை வணங்கும் சமயத்தில்
பைரவரின் தோல் புஜங்களை பார்த்து வணங்குவதால் அத்தனை தோஷங்களும் நீங்க பெறுவார்கள்.

கடகம்:

Kadagam Rasi

எந்த சூழ்நிலையிலும் கலங்காத மனம் கொண்ட கடக ராசியினர் தங்களின் வாழ்வில் மேன்மை பெறவும், கிரக தோஷங்கள் நீங்க பெறவும் அஷ்டமி தினத்தில் பைரவரை வணங்கும் போது அவரின் மார்பு பகுதியை பார்த்தவாறு வணங்குவது உங்களின் தோஷங்கள் நீங்கி நன்மை பயக்கும்.

சிம்மம்:

simmam

கெட்ட எண்ணம் கொண்டவர்களை தங்களின் பார்வையாலேயே ஒடுக்கும் சிம்ம ராசிக்காரர்கள் தங்களின் ஜாதகத்தில் இருக்கும் கிரக தோஷங்கள் நீங்க பெறுவதற்கு அஷ்டமி தினங்களில் பைரவரை வணங்கும் சமயம் அவரது வயிற்று பகுதியை பார்த்து வணங்குவதால் உங்களின் தோஷங்கள் நீங்க பெற்று நன்மைகளை பெறுவீர்கள்.

கன்னி:

Kanni Rasi

எந்த ஒரு கலையையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்ட கன்னி ராசியினர் தங்களின் ஜாதகத்தில் இருக்கும் கிரக தோஷங்கள் நீங்க பெறுவதற்கு அஷ்டமி தினங்களில் பைரவரை வணங்கும் போது பைரவரின் குறி பகுதியை பார்த்து வணங்குவதால் உங்களை பீடித்திருக்கும் தோஷங்களும், எதிர்மறை சக்திகளும் நீங்கும்.

துலாம்:

Thulam Rasi

தங்களின் பார்வையாலேயே பிறரை எடைபோடும் திறன் கொண்ட துலாம் ராசியினர் தங்களின் ஜாதகத்தில் இருக்கும் கிரக தோஷங்கள் நீங்க பெறவும், வாழ்வில் பல நன்மைகள் பெறவும் அஷ்டமி தினங்களில் பைரவரை வணங்கும் போது அவரின் தொடை பகுதியை பார்த்தவாறு வணங்கி வழிபடுவதால் தோஷங்கள், பீடைகள் அனைத்தும் நீங்க பெறுவார்கள்.

விருச்சிகம்:

virichigam

எதையும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசும் குணம் கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் ஏற்படவும், அனைத்து தோஷங்கள் நீங்கவும் அஷ்டமி தினங்களில் பைரவரை வணங்கும் போது, பைரவரின் கால் மூட்டு பகுதியை பார்த்தவாறு வணங்குவதால் அனைத்து தோஷங்களும் நீங்க பெறுவார்கள்.

தனுசு:

Dhanusu Rasi

அனைத்திலும் நியாய, தர்மங்களை பின்பற்ற விரும்பும் தனுசு ராசியினர் தங்களின் ஜாதகத்தில் இருக்கும் கிரக தோஷங்கள் நீங்கவும், வாழ்வில் பல நன்மைகளை பெறவும் அஷ்டமி தினங்களில் பைரவரை வணங்கும் நேரத்தில் பைரவரின் கால் கீழ்மூட்டு பகுதியை பார்த்தவாறு வணங்குவதால் தோஷங்கள், வினைகள் அனைத்தும் நீங்க பெறுவார்கள்.

மகரம்:

Magaram rasi

சொல்லை விட செயலையே அதிகம் விரும்பும் செயல்வீரர்களாகிய மகர ராசியினர் தங்களின் வாழ்வில் சிறப்பான பல நன்மைகளை பெறவும் இவர்களும் அஷ்டமி தினங்களில் பைரவரை வணங்கும் நேரத்தில் பைரவரின் கால் கீழ்மூட்டு பகுதியை பார்த்தவாறு வணங்குவதால் நன்மைகள் பல உண்டாகும்.

கும்பம்:

Kumbam Rasi

உறுதியான உடலும், மனமும் கொண்ட கும்ப ராசிக்காரர்கள் தங்களின் கிரக தோஷங்கள் நீங்க பெறவும், வாழ்வில் பல நன்மையான மாற்றங்கள் ஏற்படவும் அஷ்டமி தினங்களில் பைரவரை வணங்கும் நேரத்தில் பைரவரின் கணுக்கால் பகுதியை பார்த்தவாறு வணங்குவதால் இந்த ராசியினர் வாழ்வில் பல நன்மைகள் ஏற்படும்.

மீனம்:

meenam

வேதங்கள், தத்துவங்கள் போன்றவற்றை அதிகம் விரும்பி கற்கும் மீன ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் நன்மைகள் உண்டாகவும், கிரக தோஷங்கள் நீங்க பெறவும் அஷ்டமி தினங்களில் பைரவரை வணங்கும் நேரத்தில் பைரவரின் பாதத்தை பார்த்தவாறு வணங்குவதால் இந்த ராசியினரின் அத்தனை தோஷங்களும் நீங்க பெறும்.

இதையும் படிக்கலாமே:
12 ராசியினருக்கான வெற்றிலை பரிகாரம்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 12 rasi Bairavar valipadu in Tamil. It is also called 12 rasi pariharam in Tamil or 12 rasi in Tamil or Jothida palan in Tamil.