
திங்கட்கிழமையோடு சேர்ந்து சித்திரை முதல் நாள், இன்றைய தினம் பிறந்திருக்கிறது. இந்த வருடம் நமக்கு நிறைய நன்மைகளை கொடுக்கப் போகிறது. சந்தோஷத்தை கொடுக்கப் போகிறது. சுபிட்சத்தை கொடுக்கப் போகிறது. சிவபெருமானுக்கு உரிய சோமவார நாளில், இந்த சித்திரை முதல் நாள் பிறந்திருப்பது, சிவபெருமானின் அருள் ஆசியையும் நமக்கு நிறைவாக பெற்றுத்தரும்.
இன்றைய தினம் கட்டாயம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய சிவ வழிபாடு, ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய சிவன் பாடல் இந்த பதிவில் உங்களுக்காக. இந்த வழிபாட்டை முடிந்தால் செய்யுங்கள் என்று சொல்ல கிடையாது. கட்டாயம் இந்த வழிபாட்டை முடியும் போது இன்றைய தினம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை இன்று ஒவ்வொரு மனிதரும் செய்ய வேண்டியது கட்டாயம்.
காரணம் சிவபெருமானின் ஆசி இந்த உலகத்தில் பிறந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் தேவை. அந்த வகையில் இன்றைய தினம் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவில் சென்றாலும் சரி, அல்லது வீட்டிலேயே சிவபெருமானை நினைத்து விளக்கு ஏற்றி அமர்ந்து குடும்பத்துடன் இந்த பாடலை படித்தாலும் சரி, திருமூலர் அருளிய திருமந்திரம் இது. இந்த மந்திரத்தை நாம் படித்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதையும் இப்போது தெரிந்து கொள்ள போகின்றோம். முதலில் நாம் படிக்க வேண்டிய மந்திரத்தை பார்த்து விடுவோம். பிறகு அதன் மூலம் கிடைக்கும் பலனையும் பார்த்து விடுவோம்.
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே!
சிவபெருமான் முன்பு இந்த மந்திரத்தை படிப்பவர்களுடைய வாழ்க்கையில் இருக்கும் தீய வினைகள் விலகும். சிவசிவ என்று சொன்னால், பாவங்கள் நீங்கும். சிவசிவ என்று சொன்னால் மனிதர்களாக இருக்கும் நாம் தேவர்களாக மாறிவிடுவோம். சிவசிவ என்று சொல்ல அந்த சிவனோடு ஒன்றாக கலந்த ஐக்கியமாகும் பாக்கியமும் கிடைக்கும். இப்படி இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு ஒருசேர பல நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
இதையும் படிக்கலாமே: குபேர யோகம் கிடைக்க சித்திரை 1 தீப வழிபாடு
இந்த நன்னாளில் இந்த மந்திரத்தை நீங்கள் படிப்பதற்கு, இந்த பதிவு ஒரு கருவியாக இருந்ததை நினைத்து, மன மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கூறி, இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.