- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுபேர யோகம் கிடைக்க சித்திரை 1 தீப வழிபாடு

குபேர யோகம் கிடைக்க சித்திரை 1 தீப வழிபாடு

- Advertisement -

தமிழ் வருடத்தின் முதல் நாள் சித்திரை 1 இன்றைய தினம் தொடங்குகிறது. இந்த வருடம் முழுவதும் செல்வம் சேருவதற்கும் நம்மிடம் இருக்கக்கூடிய வறுமை நிலை முற்றிலும் நீங்குவதற்கும் பலவிதமான வழிபாட்டு முறைகளை நாம் செய்வது உண்டு. அப்படி செய்யக்கூடிய வழிபாடுகளின் மிகவும் சிறப்பு மிகுந்த வழிபாடாக திகழ்வதுதான் தீப வழிபாடு. தீபத்தை ஒரு குறிப்பிட்ட முறையில் நாம் இன்றைய நாளில் வீட்டில் ஏற்றுவதன் மூலம் நம்முடைய வறுமை நீங்கி செல்வம் சேர ஆரம்பிக்கும். மேலும் குபேர யோகமும் உண்டாகும். அந்த தீபத்தை எப்படி ஏற்றுவது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

சித்திரை 1 தீப வழிபாடு

எந்த ஒரு தெய்வத்தை நாம் வழிபாடு செய்வதாக இருந்தாலும் கண்டிப்பான முறையில் அந்த வழிபாட்டில் தீபம் என்பது இடம்பெற்றிருக்கும். பல தெய்வங்கள் தீப வடிவில் தான் அருள்பாளிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக சிவபெருமான் ஜோதி வடிவமாக திகழக்கூடியவர். அப்படிப்பட்ட சிவபெருமானுக்குரிய நாளாக தான் திங்கட்கிழமை திகழ்கிறது. கார்த்திகை மாதத்தின் சோமவாரம் என்பது எந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்ததோ அதேபோல்தான் சித்திரை மாதத்தின் சோமவாரமும் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் பல விதமான மாற்றங்கள் உண்டாகும்.

- Advertisement -

இந்த தீபத்தை பிரதோஷ நேரமான நான்கு முப்பது மணியிலிருந்து ஆறு மணிக்குள் வீட்டு பூஜை அறையில் ஏற்ற வேண்டும். ஒருவேளை ஆறு மணிக்குள் ஏற்ற இயலவில்லை என்று நினைப்பவர்கள் 6 மணிக்கு மேல் கூட இந்த தீபத்தை ஏற்றலாம். அதில் எந்த தவறும் கிடையாது. இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படக்கூடியது ஒரே ஒரு இலைதான். அதுதான் சிவபெருமானுக்குரிய இலையானவில்வ இலை. மேலும் வில்வ மரமாக இருந்து சிவபெருமானை நினைத்து தவம் செய்து அனைத்து விதமான ஐஸ்வர்யங்களையும் பெற்றவர் தான் மகாலட்சுமி தாயார் என்பதால் வில்வ இலைகள் நமக்கு செல்வ செழிப்பை தரக்கூடியதாக திகழ்கிறது.

ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாள தட்டின் மேல் வில்வ இலைகளை பரப்பிக் கொள்ளுங்கள். புதிதாக வாங்கிய ஒரு அகல் விளக்கை எடுத்து சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இந்த அகல் விளக்கை வில்வ இலையின் மேல் வைக்க வேண்டும். பிறகு அதில் சுத்தமான பசு நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த தீபத்தில் நாம் சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும். பிறகு அந்த தீபத்தை பார்த்தவாறு நமக்குத் தெரிந்த ஏதாவது ஒரு சிவ மந்திரத்தை முழுமனதோடு கூற வேண்டும் அல்லது சிவபுராணத்தை படிக்கலாம், கோளாறு பதிகங்களை கூட படிக்கலாம்.

- Advertisement -

இந்த முறையில் நாம் ஏற்றி வைத்த தீபத்தை பார்த்தவாறு சிவபெருமானுக்குரிய பாடல்களை நாம் படிப்பதன் மூலம் சிவபெருமான் எப்படி மகாலட்சுமி தாயாருக்கு செல்வங்களை வாரி வழங்கினாரோ குபேரருக்கு சம்பத்துகளை வழங்கினாரோ அதேபோல் நம்மிடம் இருக்கக்கூடிய வறுமையையும் முற்றிலும் நீக்கி செல்வத்தை சேர்ப்பதோடு குபேர யோகத்தையும் தருவார் என்று கூறப்படுகிறது. இந்த தீபமானது குறைந்தது அரை மணி நேரமாவது எரிய வேண்டும். பிறகு இந்த தீபத்தை நாம் குளிர வைத்துவிடலாம். மறுநாள் காலையில் இந்த வில்வ இலைகளை எடுத்து கால் படாத இடத்திலோ அல்லது ஓடுகின்ற நீரிலோ போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:கேட்கும் வரம் தரும் சித்திரை சோமவார விரதம்

எளிமையான தீபமாக தோன்றினாலும் இந்த தீபத்தை சித்திரை சோமவார நாளில் பிரதோஷ நேரத்தில் நாம் ஏற்றுவதன் மூலம் சிவபெருமானின் அருளை பரிபூரணமாக பெறுவதோடு நம் வாழ்வில் இருந்து வந்த வறுமைகளையும் முற்றிலும் நீக்க முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்