- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

இயற்கையான முறையில் முடியை கருமையாக்குதல்

- Advertisement -

பலரும் தங்களுடைய இளம் வயதிலேயே நரை முடி பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களின் நரைமுடியை மறைப்பதற்காக பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள். அதில் பெரும்பாலும் முயற்சி செய்யக் கூடிய வழியாக திகழ்வதுதான் கெமிக்கல் நிறைந்த ஹேர்டை பயன்படுத்துவது. இதனால் பல விதமான பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை உணர்ந்தும் பலரும் அதை வேறு வழியில்லாமல் பயன்படுத்துகிறார்கள்.

காரணம் அவர்களின் நேரமின்மை தான். அப்படி நேரமின்மையாலும் எளிதில் செய்யக்கூடிய ஒன்றாகவும் இருப்பதால் அதை தேர்ந்தெடுக்க கூடியவர்கள் இனிமேல் வீட்டில் இருக்கக்கூடிய காபி தூளுடன் இரண்டே இரண்டு பொருட்களை மட்டும் கலந்து செய்வதன் மூலம் தங்களுடைய நரைமுடி பிரச்சனையை தீர்க்க முடியும். அதைப்பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

தலை முடி பிரச்சனைக்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒருமுறை நரைமுடி என்பது வந்து விட்டால் அது மறுபடியும் கருமையாக மாறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. அதை நாம் கருமையாக்குவதற்கு ஏதாவது ஒரு பொருளை பயன்படுத்தியே ஆக வேண்டும். அப்படி நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் பல இயற்கையிலேயே இருக்கிறது. அதற்குரிய சரியான வழிமுறையை நாம் பின்பற்றி பயன்படுத்தினோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய தலைமுடி கருமையாவதை நம்மால் உணர முடியும்.

அப்படிப்பட்ட பொருட்களில் ஒன்றுதான் கருஞ்சீரகம். கருஞ்சீரகம் நம்முடைய நரைமுடி பிரச்சினையை தீர்க்கக் கூடிய ஒன்றாக திகழ்வதோடு மட்டுமல்லாமல் முடிக்கு நல்ல ஆரோக்கியத்தை தரக்கூடியதாகவும் அதே சமயம் முடி உதிராமல் வளர்வதற்கும் உதவுகிறது. இந்த கருஞ்சீரகத்தை எடுத்து நன்றாக ஒரு இரும்பு கடாயில் போட்டு வறுத்துக்கொள்ளுங்கள். வருத்த இந்த கருஞ்சீரகத்தை மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து சலித்து நைசான பவுடராக மாற்றி ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது என்று நீங்கள் ஷாம்பு போட்டு தலைக்கு குளித்திருக்கிறீர்களோ அன்றைய பொழுது விட்டுவிட்டு மறுநாள் காலையில் ஒரு இரும்பு கடாயை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த கருஞ்சீரகப் பொடி இரண்டு ஸ்பூன் எடுத்து போட்டுக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஐந்து ரூபாய் பாக்கெட் ஆக இருக்கும் காபித்தூள் அது எந்த பிராண்டாக இருந்தாலும் பரவாயில்லை இரண்டு பாக்கெட் எடுத்து இதனுடன் சேர்த்து நன்றாக ஒரு ஸ்பூனை வைத்து கலந்து அதில் ஒரு கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றி கொள்ள வேண்டும்.

இப்பொழுது அடுப்பை பத்த வைத்து குறைந்த தீயில் வைத்துக் கொள்ளுங்கள். அது நன்றாக கொதித்து வற்றி ஹேர் டை பதத்திற்கு வரும். அவ்வாறு வரும் பொழுது அடுப்பை அணைத்துவிட்டு ஒரு தட்டு போட்டு மூடி வைத்துவிட வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து இந்த ஹேர் டை எடுத்து உங்களுடைய தலை முழுவதும் நன்றாக தடவ வேண்டும். அரை மணி நேரம் விட்டு விடுங்கள். பிறகு எப்பொழுதும் போல் நீங்கள் சாதாரண தண்ணீரை ஊற்றி தலைக்கு குளித்து விட வேண்டும்.

- Advertisement -

இப்படி தொடர்ச்சியாக அதிக நரைமுடி பிரச்சினை இருப்பவர்கள் இரண்டு முறையும் ஆங்காங்கே நரைமுடி இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஒரு முறையும் செய்துவர விரைவிலேயே உங்களுடைய நரைமுடி பிரச்சனை என்பது குறைந்து முடி கருமையாக அதே சமயம் அடர்த்தியாகவும் மாறும்.

இதையும் படிக்கலாமே: பித்தத்தை குறைத்து நரைமுடி பிரச்சினையை தீர்க்கும் விதைகள்

கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இப்படி எளிதில் வீட்டிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து ஹேர் டை தயார் செய்து உபயோகப்படுத்தி தான் பாருங்களேன். நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -