- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

தீபாவளி அன்று பூஜை அறையில் வைக்க வேண்டிய பொருட்கள்

- Advertisement -

பண்டிகை என்றாலே அது மகிழ்ச்சியையும் நிம்மதியையும் வாரி வழங்கக் கூடியது. அந்த வகையில் இந்த தீபாவளி பண்டிகையானது இனம், மொழி, மதம் என அனைத்தையும் கடந்து, அனைத்து விதமான மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாட கூடிய ஒரு திருநாள். சிறு குழந்தைகள் மட்டும் அல்லாமல் பெரியவர் வரை இனிப்புகளை வழங்கியும் புத்தாடைகளை அணிந்தும் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்ளும் அற்புதமான நன்னாளும் இதுவே.

இந்த தீபாவளி பண்டிகையை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடி வருகிறார்கள். வடநாட்டில் இந்த திருநாளை ஐந்து நாட்கள் வெகு வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். அப்படியான இந்த நாளில் நாம் வாங்கக் கூடிய சில பொருட்களால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து இந்த வருடம் முழுவதுமே நம் வீட்டில் சந்தோஷம் நிலைத்து செல்வ வளம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்னென்ன பொருட்கள் என்பதை ஆன்மிகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

தீபாவளி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்

அந்த வகையில் நாம் வாங்க வேண்டிய முதல் பொருளாக வெள்ளி நாணயத்தை எடுத்துக் கொள்ளலாம். வெள்ளியானது லட்சுமி தாயாரின் பிறந்த வீட்டு பொருளாக பார்க்கப்படுகிறது. பெண்கள் அனைவருக்கும் பிறந்த வீடு என்றால் தனி பிரியம் தானே. ஆகையால் அன்றைய தினத்தில் இந்த பொருளை பூஜை அறையில் வைக்கும் போது தாயாரின் அனுகிரகம் முழுவதுமாக கிடைத்து வீடு லட்சுமி கடாட்சத்துடன் இருக்கும் என்று சொல்லப்படுகிறது

அதே போல் லட்சுமி தாயாரின் பாதங்களை வைத்து வழிபடும் போது வீட்டில் நேர்மறை மாற்றலை அதிகரித்து சந்தோஷத்தை கொடுக்கும். இந்த பாதங்களை தீபாவளி அன்று வாங்கி வைப்பதனால் அந்த வருடம் முழுவதும் வீட்டில் செல்வம் கொழிக்கும். இன்றைய நாளில் லஷ்மி தாயாரின் படம் சிலை போன்றவற்றை வாங்கி வைப்பது மேலும் சிறப்பு தரும்.

- Advertisement -

அடுத்ததாக ஸ்ரீ எந்திரம் வாங்கி வைத்து வணங்கலாம். வீட்டில் நேர்மறை சக்தி அதிகரிக்க கூடிய சக்தி வாய்ந்த ஒரு பொருளெனில் அது இந்த எந்திரம் தான். இதை வீட்டில் வைத்து வணங்கும் பொழுது செல்வ வளத்திற்கு குறைவே இருக்காது. அதுவும் தீப ஒளி திருநாளன்று இதை வாங்குவது மேலும் செல்வ செழிப்பாக நம்மை வாழ வைக்கும். இத்துடன் அன்னைக்கு விசேஷமான தாமரை மலரை அன்று வாங்கி வைத்து வணங்குங்கள்.

இத்துடன் வாங்க வேண்டிய வேறு சில பொருட்கள் எனில் அது அனைவரும் தெரிந்த மகாலட்சுமி தாயாருக்கு உகந்த கல் உப்பு தான். கல் உப்பையும் அன்றைய தினம் பூஜை அறையில் வைத்து வணங்குவது சிறப்பு. இத்துடன் மஞ்சள் வெல்லம் இவைகளையும் அன்றைய தினம் வாங்குவது நம் வீடு என்றென்றைக்கும் சுபிட்சமாக இருக்கும்.

- Advertisement -

இந்த மஞ்சளை வாங்கும் பொழுது தரமான மஞ்சளாக வாங்கி அரைத்து அதை ஒரு பவுலில் போட்டு பூஜை அறையில் வைக்கும் பொழுது அதிக இறை சக்தியை ஏற்படுத்தும். அதே போல் பூஜை அறையில் வைத்து வணங்கிய வெல்லத்தை உறங்கும் முன் அதை நிலை வாசலில் கொஞ்சம் தூவி விட்டால் குடும்பத்தில் உள்ளவர்கள் சந்தோஷமாக நோய் நொடி இன்றி வாழ்வார்கள்.

அன்றைய நாளில் வீட்டு வாசலில் பல வண்ணங்கள் நிறைந்த ரங்கோலி கோலத்தை அழகாக போடுவதன் மூலமாக மகாலட்சுமி தாயார் மனமகிழ்ந்து அருள்வார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைய நாளில் தாயாரை மகிழ்ச்சி படுத்தும் விதமாக நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்முடைய குடும்பம் செல்வ நிலையில் பல மடங்கு உயர வழிவகுக்கும்.

மேலே குறிப்பிட்டு இருக்கும் இந்த பொருட்களை எல்லாம் தீபாவளி திருநாளில் காலையிலே வழிபாடு செய்பவர்கள் முதல் நாளிலே கூட வாங்கி வைத்துக் கொள்ளலாம். அல்லது உங்கள் வழிபாட்டை முடித்த பிறகும் இவையெல்லாம் வாங்கி பூஜையறையில் வணங்கலாம் தவறு ஒன்றும் இல்லை.

இதையும் படிக்கலாமே: தீபாவளி 2023 கேதார கௌரி விரதம் என்றைக்கு அனுஷ்டிப்பது?

நாம் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகையின் நோக்கமே நாமும் நம் சுற்றத்தாரும், உறவுகளும், நண்பர்களும் மனதில் இருக்கும் வெறுப்புகளை மறந்து ஒன்றாக மகிழ்ச்சியாக இருப்பதற்காகத் தான். இந்த தீபாவளி திருநாளிலும் அனைவரும் ஒன்றாக கலந்து நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தாருடன் சந்தோஷமாக கொண்டாடி மகாலட்சுமி தாயார் பரிபூரண ஆசீர்வாதத்தையும் பெற்று நல்லதொரு வளமான வாழ்க்கையை வாழுங்கள்.

- Advertisement -