தீபாவளி 2023 கேதார கௌரி விரதம் என்றைக்கு அனுஷ்டிப்பது?

gowri-viratham
- Advertisement -

12.11.2023 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி திருநாள் கொண்டாடப்பட இருக்கின்றது. தீபாவளி அமாவாசையின் போது, நிறைய பேருக்கு கேதார கௌரி விரதம் இருக்கக்கூடிய வழக்கம் இருக்கும். அந்த விரதத்தை அமாவாசை திதி அன்றுதான் இருப்பார்கள். 12.11.2023 ஆம் தேதி மாலை 3.00 மணி அளவில் அம்மாவாசை திதி பிறக்கவிருக்கின்றது.

அந்த திதியானது அடுத்த நாள் அதாவது திங்கட்கிழமை மதியம் 2.30 வரை மணி வரை இருக்கிறது. இப்போது கேதார கௌரி விரதம் நோன்பு எடுப்பவர்கள், என்றைக்கு வீட்டில் வழிபாடு செய்வது. ஞாயிற்றுக்கிழமையா அல்லது திங்கட்கிழமையா. கேதார கௌரி விரதம் எடுக்க சரியான நேரம் என்ன. இந்த கேள்விகளுக்கு உண்டான பதிலையும், கௌரி விரதத்தைப் பற்றிய இன்னும் சில ஆன்மீகம் சார்ந்த தகவலையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

கேதார கௌரி விரதம் எடுக்க நல்ல நேரம்

12.11.2023 ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்திலேயே அமாவாசை திதி பிறந்து விடுவதால், ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணியிலிருந்து 7.30 குள் நீங்கள் கேதார கௌரி விரத வழிபாட்டை மேற்கொள்ளலாம். விரதம் இருப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் உங்களுடைய விரோதத்தை இருக்க வேண்டும்.

பெரும்பாலும் நோன்பு வழிபாடுகள் மாலை நேரத்தில்தான் செய்யப்படும். ஞாயிற்றுக்கிழமை மாலையில் தான் அமாவாசை திதி இருக்கிறது. திங்கட்கிழமை மதியம் 2:30 மணிக்கு அமாவாசை தேதி முடிவடைவதால் நோன்பு இருப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்றே உங்களுடைய வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

கேதார கௌவுரி நோன்பு தாத்பரியம்

எந்த ஒரு பண்டிகையை கொண்டாடுவதாக இருந்தாலும் அதனுடைய தாத்பரியத்தை நாம் சுருக்கமாக நினைவு கூற வேண்டும் அல்லவா. சிவபெருமானையும் பார்வதி தேவியையும் நினைத்து செய்யக்கூடிய வழிபாட்டு முறை தான் இந்த கேதார கௌரி விரதம்.

பார்வதி தேவி சிவபெருமானை வேண்டி, தவமிருந்து இந்த நோன்பை மேற்கொண்டார்கள். எதற்காக தெரியுமா. சிவனில் பாதி பார்வதி கலக்க வேண்டும் என்பதற்காக. அதுதான் அர்த்தநாரீஸ்வரர் அவதாரம். பார்வதி தேவி இந்த நோன்பை மேற்கொண்டதால் தான் சிவபெருமான் தன்னுடைய இடது பாகத்தை, சக்தி தேவிக்கு ஒரு அங்கமாக கொடுத்துள்ளார்.

- Advertisement -

கைலாயத்தை விட்டு வந்து பார்வதி தேவி, கேதார் அப்படி என்கின்ற இடத்தில், 21 நாட்கள் இந்த நோன்பை மேற்கொண்டு, 21 நாள் தவமிருந்து, 21 வது நாள் சிவபெருமானில் சரிபாதியாக கலந்தார்கள். அதாவது இந்த தீபாவளியுடன் வரக்கூடிய அமாவாசை தினத்தில் தான் விரதத்தை முடித்து, ஈசனுடன் கலந்து அர்த்தநாரீஸ்வரர் அவதாரத்தை பெற்றதாக சாத்திரங்கள் சொல்கிறது.

இந்த நோன்பை திருமணம் ஆகாத பெண்கள் மேற்கொள்ளும் போது அவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும். திருமணம் ஆன பெண்களுக்கு குடும்பத்தில் பிரச்சனைகள் வராது. கணவனுடன் அன்யூன்யமாக வாழக்கூடிய யோகம் கிடைக்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வேண்டும் என்றாலும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

கேதார கௌரி விரதம் கடைபிடிக்கும் முறை

இந்த கேதார கௌரி விரதம் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மாதிரி கடைப்பிடிப்பார்கள். சில பேருக்கு இந்த நோன்பு கடைபிடிக்கும் பழக்கமே இருக்காது. உங்களுடைய வீட்டில் உங்க குல வழக்கப்படி நீங்கள் எப்படி நோன்பு வழிபாடு செய்வீர்களோ, அதை செய்து கொள்ளலாம்.

இந்த நோன்பு வழிபாட்டிற்கு வைக்கும் பொருட்களை எல்லாம், பூஜையில் வைக்கும் போது 21 என்ற கணக்கில் வைக்க வேண்டும் என்ற ஒரு வழக்கம் இருக்கும். வெற்றிலை பாக்கு, அதிரசம், வாழைப்பழம் இப்படி எது வைத்தாலும் அதை 21 என்ற கணக்கில் வைப்பார்கள். சில பேர் நோன்பு கயிறு, காதோலை கருகமணி, சீப்பு, கண்ணாடி இப்படிப்பட்ட பொருட்களை வைத்து வழிபாடு செய்யும் வழக்கமும் இருக்கிறது.

சில பேர் வீட்டிலேயே கலசம் நிறுத்தி தேங்காய் வைத்து அதை அம்பாளாக பாவித்து மந்திரங்கள் சொல்லி வழிபாடு மேற்கொள்வார்கள். சில பேர் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் அம்பாளின் முன்பு நோன்பு தட்டை வைத்து வழிபாடு செய்து விட்டு வீட்டிற்கு கொண்டு வந்து எளிமையாக வழிபாட்டை முடித்துக் கொள்வார்கள். அது அவரவர் வீட்டு வழக்கத்தை பொறுத்தது.

எங்களுக்கு நோன்பு எடுக்கும் பழக்கமே இல்லை. நாங்கள் விரதம் இருக்கலாமா என்று கேட்டால், நிச்சயமாக நோன்பு எடுக்கும் வழக்கம் இல்லாத குடும்பத்தில் இருக்கும் பெண்களும், தங்களுடைய கணவருக்காக இந்த கேதார கௌரி விரதம் இருக்கலாம். உங்களால் முடிந்தால் சாப்பிடாமல் விரதம் இருந்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஆனால் உங்கள் குடும்ப வழக்கம் இல்லாமல் இப்படி நோன்பு தட்டு எடுப்பதற்கு வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள். அதனால் மனப்பூர்வமாக நீங்கள் விரதம் மட்டும் இருந்துவிட்டு, மாலை நேரம் எளிமையாக உங்கள் மனதிற்குள் மகாலட்சுமி தேவியை, சக்தி தேவியை, கௌரி தேவியை சிவபெருமானின் மனதில் நிறுத்தி விளக்கு ஏற்றி ஏதாவது ஒரு பிரசாதம் செய்து வைத்து, மனம் உருகி வழிபாடு செய்து கணவருக்காக பிரார்த்தனை செய்தாலும், நீங்கள் தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை பெறலாம்.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் உடனே பலிக்க பரிகாரம்

கணவரோடு ஆயுள் முழுவதும் ஒற்றுமையாக வாழலாம். மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -