- Advertisement -
சமையல் குறிப்புகள்

கமகமக்கும் சாம்பார் பொடி! 5 நிமிடத்தில், உங்க வீட்டு மிக்சியிலேயே, இந்த சாம்பார் பொடியை அரைகலாம்.

சாம்பார் பொடியை அரைக்கணும் என்றால், ரைஸ் மில்லுக்கு தான் செல்ல வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் மசாலா பொருட்களை வைத்தே, சுவையான சாம்பார் பொடியை, நம் கையாலேயே மணக்க மணக்க அரைத்து வைத்துக்கொள்ளலாம். பொதுவாகவே, சாம்பார் பொடியை நிறைய அரைத்து வைத்தால் அதனுடைய வாசம் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது. நமக்குத் பத்து நாட்களுக்கு, தேவையான அளவு சாம்பார் பொடியை, அரைத்து சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்படும் போது மீண்டும் புதியதாக அரைத்துக் கொள்ளவேண்டும். வீட்டு மிக்சியிலேயே, சாம்பார் பொடியை சூப்பரா எப்படி அரைப்பது? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

சாம்பார் பொடி அரைக்க தேவையான பொருட்கள்:
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன், தனியா – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – 1 டேபிள்ஸ்பூன், வர மிளகாய் – 4, உளுந்து – 1 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், மிளகு – 10, கொப்பரை தேங்காய் – நான்கு துண்டு, கறிவேப்பிலை – 1கொத்து, பெருங்காய தூள் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்.

- Advertisement -

மசாலா பொருட்களை அரைக்க தேவையான பொருட்கள் இவ்வளவுதான். வாணலில் வறுக்கும் போது, பெருங்காயத் தூளையும், மஞ்சள் தூளையும் மட்டும் சேர்க்க வேண்டாம். தேவைப்பட்டால், எல்லா பொருட்களையும் 2 டேபிள்ஸ்பூன் அளவு போட்டு, கொஞ்சம் அதிகமாகவும் அரைத்துக் கொள்ளலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்களை பொருத்தது அளவு.

முதலில் தடிமனான கடாயை அடுப்பில் வைத்துவிட்டு, அது நன்றாக சூடு ஆன பின்பு, மேலே குறிப்பிட்டுள்ள மசாலா பொருட்களை எல்லாம் ஒன்றாக போட்டு, சிவக்கும் அளவிற்கு, கை விடாமல் வறுத்துக் கொள்ள வேண்டும். கருக விட்டுவிடாதீர்கள். எண்ணெய் ஊற்றாமல் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த மசாலா பொருட்கள் நன்றாக ஆறிய பின்பு, மிக்ஸியில் போட்டுக் கொள்ளுங்கள். இதோடு பெருங்காயத் தூளையும் மஞ்சள் தூளையும் சேர்த்து அரைக்க வேண்டியதுதான். மொழுமொழுவென்று அரைக்க தேவையில்லை. ரொம்பவும் கொரகொரப்பாகவும் அரைக்க தேவையில்லை. இரண்டிற்கும் இடைப்பட்ட பக்குவத்தில் இந்த மசாலாப் பொடியை அரைத்து, காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு, ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால், ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல், வாசம் போகாமல் இருக்கும்.

நீங்கள் வைக்கும் சாம்பாரில், ஒரு டேபிள்ஸ்பூன் அளவு இந்த சாம்பார் பொடியை சேர்த்து பாருங்கள்! (சாம்பாருக்கு தேவையான தனி மிளகாய் தூள், காரத்திற்கு போட வேண்டும். மசாலா பொருட்களின் வாசத்திற்காகவே இந்த சாம்பார் பொடி.) நீங்கள் வைக்கும் சாம்பாரின் மணம் அடுத்தவீட்டு வரை வீசும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள்!

இதையும் படிக்கலாமே
பண்ணையார்களும், ஜமீன்தார்களும், மூட்டை மூட்டையாக காசு சேர்ப்பதற்கு பின்பற்றி வந்த கஜானா ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -