பண்ணையார்களும், ஜமீன்தார்களும், மூட்டை மூட்டையாக காசு சேர்ப்பதற்கு பின்பற்றி வந்த கஜானா ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

cash1

இன்றைய கால சூழ்நிலையில் காசு பணத்திற்கு, அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்தும், அதை பொக்கிஷமாக பார்த்தும், நம்மிடம் அந்தப் பணமானது தங்க வில்லையே! அது ஏன்? ஆனால், அந்த காலங்களில் வாழ்ந்த ஜமீன்தார்களும், பண்ணையார்களும், தங்களுடைய வீட்டில் மூட்டை மூட்டையாக பணத்தை கட்டி, பரணையில் போட்டு வைத்திருப்பார்கள் என்று, நம் முன்னோர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருக்கின்றோம். அப்படியானால் அவர்களிடத்தில், பணம் சேர்வதற்கு ஏதோ ஒரு ரகசியம் இருந்திருக்கிறது அல்லவா? அது என்ன ரகசியம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

cash

உங்களுடைய வீட்டில் பணவரவை தடுக்கக் கூடிய எந்த ஒரு தோஷமாக இருந்தாலும் அது, இந்த பரிகாரத்தின் மூலம் நிவர்த்தியாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த பரிகாரத்தை நிறைய பேர் செய்து பலன் அடைந்து உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மகாலட்சுமிக்கு பிடித்தமான, சில பொருட்களை வைத்து தான் இந்த பரிகாரத்தை செய்ய போகின்றோம்.

பரிகாரத்தை பார்த்துவிடுவோமா? முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இரும்பு உலோகத்தால் செய்யப்பட்ட பாத்திரத்தை மட்டும் தவிர்த்து விட வேண்டும். கரும்புள்ளிகள் இல்லாத 1 எலுமிச்சை, 3 மஞ்சள் கிழங்கு, 1 மூங்கில் குச்சி, 1 ரூபாய் நாணயங்கள், அல்லது ரூபாய் நோட்டுக்கள், தங்க நாணயம், தங்க நகைகள், வெள்ளி நாணயம், வெள்ளி நகைகள், உங்களிடத்தில் எது இருந்தாலும் இந்த பரிகாரத்திற்கு அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு பொருள் ‘மல்லிகைப்பூ’.

malligai poo

முதலில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் அகலமான பாத்திரத்தில், ரூபாய் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தங்க நகை இதில் ஏதாவது ஒன்றை போட வேண்டும். (இல்லை என்றால், இது எல்லாவற்றிலிருந்தும் ஒவ்வொன்றையும் கூட வைக்கலாம்.) அதன் மேலே ஒரு எலுமிச்சை பழம், 3 மஞ்சள் கிழங்கு, மூங்கில் குச்சியை வைத்து விட வேண்டும். இறுதியாக உதிரியான மல்லிகைப்பூவை அதன் மேல் போட்டு, உள்ளே வைத்திருக்கும் பொருட்களை எல்லாம் மூடி விடுங்கள். அவ்வளவுதான், பரிகாரமே! (அதாவது, அகலமான பாத்திரத்தில் உள்ளிருக்கும் பொருட்களின் மேல், கோபுரமாக மல்லிகைப் பூக்களைக் கொட்டி விட வேண்டும்.)

- Advertisement -

தயார் செய்து வைத்திருக்கும் இந்த கிண்ணத்தை, உங்கள் வீட்டு பீரோவிலோ அல்லது கஜானா பெட்டியிலோ வைத்துவிடுங்கள். ஒருநாள் மட்டும் தான் வைக்க வேண்டும். அதுவும் வெள்ளிக்கிழமையில் வைத்தால் மிகவும் சிறப்பு. வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இப்படி செய்யலாம். இந்த கிண்ணத்தை உங்கள் வீட்டு பீரோவில், ஒரேநாள் வைத்துவிட்டு, வாடிய பூக்களை எல்லாம் நீக்கிவிட்டு, அதன் உள்ளே வைத்திருக்கும் பொருட்களை, உங்களுடைய உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எலுமிச்சை பழத்தை மட்டும் கால் படாத இடத்தில் தூக்கி வீசி விடுங்கள்.

lemon1

இதற்கான அர்த்தம் என்னவென்றால், உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய பணம் நகை சேருவதில், பிரச்சினைகள் இருந்தாலும் கூட அந்த தோஷத்தை நிவர்த்தி செய்யக் கூடிய தன்மை இந்த மல்லிகைப் பூவிற்கு உண்டு. பொதுவாகவே, இந்த பூவின் வாசத்திற்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை. அந்த மகாலட்சுமியையும் வசியப்படுத்த கூடிய சக்தி இந்த மல்லிகைப் பூவிற்கு அதிகமாகவே உள்ளது.

money

மல்லிகைப்பைவோடு நாம் சேர்த்து வைத்திருக்கும் சில மங்களகரமான பொருட்களுக்கும், நம் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் நல்ல ஆற்றலை வெளிக்கொண்டு வந்து, ராஜபோக வாழ்க்கையை தரக்கூடிய சக்தி இருக்கிறது. ஆகவே, இந்த பரிகாரத்தை ஒருமுறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

cash

அந்த காலங்களில், இந்த பரிகாரத்தை பெரிய பெரிய யாகங்கள் செய்து, அதன் பின்பு அந்த மல்லிகை பூவை எடுத்து, பணப் பெட்டியில் வைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு பணவசதி நம்மிடம் இல்லை. ஆகவே, இந்த சுலபமான பரிகாரத்தை செய்து பலன் அடைவோம். பரிகாரம், நல்ல பலன் அளித்தால், வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வரவே வராது என்று, முடிவு செய்த வாராக் கடனை கூட வசூலித்து தரும் பரிகாரம். 3 நாட்களில் கண்கூடாக பலனை காணலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.