- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதிடீர் கஷ்டம் தீர வழிபாடு

திடீர் கஷ்டம் தீர வழிபாடு

- Advertisement -

வாழ்க்கை என்றாலே ஏற்ற இறக்கம் நிறைந்தது தான். வாழ்க்கை ஒரு போதும் ஏறுமுகமாகவே இருந்து விடாது. திடீரென்று சறுக்கல்களையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஒரு சில காரியங்களுக்காக நாம் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்திருக்கும் பணம் திடீர் கஷ்டத்தால் விரையம் ஆகும் பொழுது அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கஷ்டப்பட்டு புலம்பி தவிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து வெளியே வருவதற்கு பல போராட்டங்களை சந்திக்க வேண்டிய நிலையும் உண்டாகும். இந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வருவதற்கு பிரம்ம முகூர்த்த வேளையில் குலதெய்வத்தை எப்படி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

துன்பம் தீர்க்கும் பிரம்ம முகூர்த்த தீபம்

ஒரு நாளிலேயே மிகவும் சிறப்புக்குரிய நேரமாக கருதப்படுவது பிரம்ம முகூர்த்த நேரம் தான். உடல் ஆரோக்கியம் ரீதியாகவும், அதே சமயம் ஆன்மீக ரீதியாகவும் மிகவும் சிறப்புக்குரிய நேரமாக திகழ்கிறது. இந்த பிரம்ம முகூர்த்த நேரம் என்பது காலை 3:00 மணியில் இருந்து 5:30 மணி வரை என்று புராணங்கள் கூறுகின்றது. ஆனால் இன்றைய காலத்தில் பலரும் ஆறு மணி வரை என்று கூறுவார்கள்.

இதற்கு காரணம் என்னவென்றால் சூரியன் உதயம் ஆவதற்கு முன்பாக இருப்பதுதான் பிரம்ம முகூர்த்த நேரம். சூரியன் சரியாக எந்த நேரத்தில் உதயமாகும் என்பதை துல்லியமாக யாராலும் கணக்கிட செய்ய முடியாது. ஒரு சில நேரங்களில் ஆறு மணிக்கு மேல் கூட உதயமாகலாம். ஒரு சில நேரங்களில் 5:45 மணிக்கு கூட உதயமாகலாம் என்பதால் தான் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் பிரம்ம முகூர்த்த நேரம் என்பது 5:30 மணிக்குள் முடிந்து விடும் என்று கூறுகிறார்கள்.

- Advertisement -

அப்படி 5:30 மணிக்குள் நாம் செய்யக்கூடிய வழிபாடானது மிகவும் சிறப்புக்குரிய வழிப்பாடாக திகழ்கிறது. எந்த தெய்வத்தை நாம் வழிபாடு செய்தாலும் அந்த தெய்வத்தின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்துமே தீர்வதற்குரிய வாய்ப்புகள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் நமக்கு கிடைக்கும். சரி இப்பொழுது திடீர் கஷ்டம் தீருவதற்கு எப்படி குல தெய்வத்தை வழிபாடு செய்வது என்று பார்ப்போம்.

காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் அதாவது 5:30 மணிக்குள் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் நல்லெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பிறகு உங்களுடைய குலதெய்வத்தின் நாமத்தை 108 முறை உச்சரித்து உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டம் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். குலதெய்வம் தெரியாது என்பவர்கள் தங்களின் இஷ்ட தெய்வத்தின் நாமத்தை கூறலாம்.

இதையும் படிக்கலாமே: எதிரிகளால் ஏற்படும் தொல்லை தீர வழிபாடு

இப்படி நீங்கள் வேண்டுதல் செய்யும் பொழுது ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இந்த முறையில் தொடர்ந்து 108 நாட்கள் குலதெய்வத்தின் நாமத்தை 108 முறை தீபம் ஏற்றி வைத்து கூறி வழிபாடு செய்ய உங்களுக்கு ஏற்பட்ட திடீர் கஷ்டங்கள், பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக நீங்கி அடுத்த கட்ட வாழ்க்கையை நகர்த்துவதற்கு உதவிகரமாக இருக்கும். மிகவும் அதிசக்தி வாய்ந்த இந்த பிரம்ம முகூர்த்த வேளை வழிபாட்டை நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன்

சற்று முன்